Published:Updated:

வாசலில் அந்நியர் ஜூனியர்: முறைத்த நாய்... குரைத்த மனிதர்... அக்கறை கஸ்டமர்!

வாசலில் அந்நியர் ஜூனியர்: முறைத்த நாய்... குரைத்த மனிதர்... அக்கறை கஸ்டமர்!
பிரீமியம் ஸ்டோரி
வாசலில் அந்நியர் ஜூனியர்: முறைத்த நாய்... குரைத்த மனிதர்... அக்கறை கஸ்டமர்!

டெலிவரி மனிதர்களின் வாழ்க்கை

வாசலில் அந்நியர் ஜூனியர்: முறைத்த நாய்... குரைத்த மனிதர்... அக்கறை கஸ்டமர்!

டெலிவரி மனிதர்களின் வாழ்க்கை

Published:Updated:
வாசலில் அந்நியர் ஜூனியர்: முறைத்த நாய்... குரைத்த மனிதர்... அக்கறை கஸ்டமர்!
பிரீமியம் ஸ்டோரி
வாசலில் அந்நியர் ஜூனியர்: முறைத்த நாய்... குரைத்த மனிதர்... அக்கறை கஸ்டமர்!

போஸ்ட்மேன் என்ற ஒருவர் மட்டுமே வீடு தேடிவந்த காலம் மாறிவிட்டது. இப்போது கூரியர், இ-காமர்ஸ் டெலிவரி, உணவு, காய்கறி, இறைச்சி என சகலத்தையும் நம் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்கிறார்கள். தினமும் இப்படி வரும் அந்நியர்கள் பற்றி என்றைக்காவது நாம் தெரிந்துகொண்டிருக்கிறோமா? ‘‘எப்படி இருக்கீங்க, தண்ணி குடிக்கிறீங்களா?” என்று அவர்களிடம் அக்கறையாக விசாரிப்பவர்கள் அரிது. இந்த டெலிவரி மனிதர்களின் பணி எப்படி இருக்கிறது?

வெங்கடேஷ், காஸ் சிலிண்டர் டெலிவரி செய்பவர்

‘‘அப்பார்ட்மென்ட் ஒன்றில் இரண்டாம் மாடியில் இருந்த கஸ்டமருக்கு சிலிண்டர் டெலிவரி கொடுக்கப் போனேன். செம மழை. தெரு நாய் ஒண்ணு, குளிர் தாங்காம ரெண்டாவது மாடிகிட்ட மாடிப்படியிலேயே படுத்திருந்துச்சு. நான் படியில வர்றதைப் பார்த்துட்டு, தலையைத் தூக்கி என்னை மொறச்சது. நான் நிக்காம வந்ததைப் பார்த்து, எழுந்து என்னை நோக்கி வந்துச்சு. பயந்து போய், சிலிண்டரை படிக்கட்டுலேயே வெச்சுட்டு கீழே வந்துட்டேன். கஸ்டமர் அந்த நாயை விரட்டி விட்டபிறகு, மேலே போய் சிலிண்டரை டெலிவரி கொடுத்தேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடிகூட, கிரீன்வேஸ் ரோட்டுல ஒரு வீட்டுக்குப் போனப்ப, ரெண்டு நாய்கள் ஒரே நேரத்தில ஓடிவந்து குரைச்சுது. சத்தம் கேட்டு கஸ்டமர் வந்து அதுகளைக் கூட்டிட்டுப் போயிட்டார். நாய்த் தொல்லை இப்போ பழகிடுச்சு.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, விடாம மழை பெஞ்சப்போகூட, நான் சிலிண்டர் டெலிவரி பண்ணியிருக்கேன். சில கஸ்டமர்கள், சிலிண்டரைக் கொண்டுபோன பிறகுதான், ‘ஏ.டி.எம்-ல பணம் எடுத்துத் தர்றேன்’பாங்க. வெயிட் பண்ணி வாங்கிட்டு வருவேன். சில வீடுகள்ல வயசானவங்க இருப்பாங்க. பணத்தை வெச்ச இடத்தை மறந்துட்டு, ‘எங்கோ வெச்சோம்னு தெரியலப்பா’ன்னு திண்டாடுவாங்க. சிலிண்டரைக் கொடுத்துட்டு, ‘பணத்தை அப்புறம் வந்து வாங்கிக்கிறேன்’னு சொல்லிடுவேன்.’’ 

வாசலில் அந்நியர் ஜூனியர்: முறைத்த நாய்... குரைத்த மனிதர்... அக்கறை கஸ்டமர்!

மனோகரன், காஸ் சிலிண்டர் டெலிவரி செய்பவர்

‘‘ஒவ்வொரு மாசமும் முதல் வாரத்துல அதிக பில்கள் இருக்கும். ஒரே தெருவுக்குப் பத்து, பதினைந்து பில் இருக்கும். டெலிவரி ஈஸியா இருக்கும். மாசக் கடைசி ஆயிட்டா, ஏழு தெருவுக்கும் சேர்த்து பத்து பில்தான் இருக்கும். யாராவது ஒரு கஸ்டமர் வீட்டில் இல்லாவிட்டால், அந்த சிலிண்டரைத் திரும்ப எடுத்துவருவதற்குப் பதிலா, வேறு ஒருத்தருக்குக் கொடுத்துட்டு வந்திடுவேன். பத்து வருஷமா ஒரே ஏரியாவுல டெலிவரி போய்க்கிட்டு இருக்கேன். அதனால, ‘எந்த வீட்டில் நாய் இருக்கு’ன்னு எனக்குத் தெரியும். அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்குவேன்.. இதுவரைக்கும் என்னை நாய் கடிச்சதில்ல. லிஃப்ட் இல்லாட்டிகூட, நான்கு மாடியா இருந்தாலும், படியில ஏறிப்போய் டெலிவரி கொடுப்பேன்.’’

மோகன்தாஸ், தபால்காரர்

‘‘ஊர்ல இருந்தப்போ, 40 கி.மீ சுற்றளவுக்கு சைக்கிளில் போய் தபால் டெலிவரி பண்ணியிருக்கேன். சென்னைக்கு வந்த புதுசுல ரங்கநாதன் தெருவுக்கு டெலிவரிக்காகப் போனேன். ஒரு தொழிலதிபர் பேத்திக்கு பாஸ்போர்ட் வந்திருந்தது. அதைக் கொடுக்கப் போனேன். தபாலில் குறிப்பிட்டிருந்த பெயருக்கு உரியவர் வெளியே போயிருந்தார். அவரின் உறவினர்கள் யாரும் அப்போது அங்கு இல்லை. வீட்டில் இருந்தவர், ‘நான்தான் மேனேஜர். என்னிடம் கொடுத்துவிட்டுப் போங்கள்’ என்றார். ‘இல்லை சார், உரியவர்களிடம் மட்டும்தான் கொடுக்க முடியும். தயவுசெய்து மன்னிச்சுக்குங்க. போஸ்ட் ஆபீசில் வைத்திருக்கிறோம். வந்து வாங்கிக்கொள்ளச் சொல்லுங்கள்’ எனச் சொன்னேன். அவர் கோபத்துடன் ‘என்னை நீ நம்பவில்லையா’ என்று முறைத்தார். நான் பொறுமையாக, ‘இது எங்களுடைய விதி. நான் ஒன்றும் செய்ய முடியாது’ என்று சொல்லிட்டு வந்தேன்.

2015 பெருமழை பெஞ்சப்போ, இடுப்பளவு தண்ணீரில் நடந்துபோய் தபால் டெலிவரி செய்தேன். ‘ஏம்பா இவ்வளவு கஷ்டப்பட்டு வர்றே’ன்னு சிலர் கேட்டாங்க. ‘உங்களுக்கு வந்த கடிதம் முக்கியமானதாக இருந்தால், லேட் ஆகிடக்கூடாதுன்னுதான் வந்தேன்’ என்று சொன்னேன். பலர், இன்றும்கூட போஸ்ட் கார்டு பயன்படுத்துறாங்க. பள்ளிக் குழந்தைகள், தங்கள் நண்பர்களுக்கு போஸ்ட் கார்டுகளில் வாழ்த்துச் சொல்கிறாங்க. தங்கள் பெயருக்கு வரும் கடிதங்களைப் பார்த்து குழந்தைகள் மகிழ்ச்சியடைவதை ரசித்து மகிழ்ந்திருக்கேன்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசலில் அந்நியர் ஜூனியர்: முறைத்த நாய்... குரைத்த மனிதர்... அக்கறை கஸ்டமர்!

சாந்தி, தபால்காரர்

‘‘சென்னைக்கு வருவதற்குமுன், திருவண்ணாமலை மாவட்டம் குன்னத்தூரில் வேலை செய்தேன். அங்கு டெலிவரி கொடுக்கப் போனப்போ, நாய் கடித்து விட்டது. இப்போ, நாய்களிடம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கேன். பொதுமக்களின் மகிழ்ச்சி, துக்கம் போன்ற விதவிதமான உணர்வுகளைத் தபால்களாகச் சுமந்து செல்கிறோம். ஒரு சிலர் முன்கூட்டியே போன் செய்து, ‘எனக்கு அந்த நிறுவனத்திலிருந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வரும்’ என்று சொல்லி வைப்பார்கள். அதேபோல வந்ததும் போன் செய்வேன். அந்தக் கடிதத்தை வாங்கும்போது, அவர்களிடம் தெரியும் மகிழ்ச்சியை என்னால் அளவிடவே முடியாது. அவர்களின் மகிழ்ச்சிக்கு ஏதோ ஒரு வகையில் நான் காரணமாக இருக்கிறேன் என்ற பெருமை பொங்கும்.’’

வாசலில் அந்நியர் ஜூனியர்: முறைத்த நாய்... குரைத்த மனிதர்... அக்கறை கஸ்டமர்!

ஜோதிகா, தபால்காரர்

‘‘என்னுடைய தெருவில் நிறைய வங்கிகள் இருக்கு. முக்கியமான ஆவணங்கள் வரும். அதனால ரொம்ப கவனமா எடுத்துப்போய்க் கொடுப்பேன். சினிமா டைரக்டர் ஆரூர் தாஸ் வீட்டுக்கு நான்தான் டெலிவரி பண்றேன். ரிஜிஸ்டர் போஸ்ட் வந்தா, அவரே கையெழுத்துப் போட்டு வாங்கிக்குவார். 2012 வரைக்கும், கண்ணையா தெருவில் டைரக்டர் ஷங்கர் இருந்தார். அங்கு நான்தான் தபால் டெலிவரி பண்ணுவேன். ஒரு முறை தபால் கொடுக்க போனப்போ, ‘உங்களை மாதிரி லேடீஸ் எல்லாம் வேலைக்கு வர்றதைப் பார்க்கிறது சந்தோஷமா இருக்கு’ன்னு ஷங்கர் சொன்னார். வடக்கு உஸ்மான் ரோட்டில் பிரசாந்த் டவர்ஸ் கட்டடம் கட்டிட்டு இருந்தாங்க. அங்கே, நடிகர் தியாகராஜன் இருப்பார். அவருக்கு வர்ற லெட்டர்களை அங்க கொண்டு போய் டெலிவரி பண்ணுவேன். சில நேரம் அவர் காரில் கிளம்பும்போது வருவேன். காரை நிறுத்தி லெட்டரை வாங்கிக்கொண்டு, ‘எப்படிம்மா இருக்க?’ன்னு அக்கறையா கேட்பார்.’’  

வாசலில் அந்நியர் ஜூனியர்: முறைத்த நாய்... குரைத்த மனிதர்... அக்கறை கஸ்டமர்!

ஆன்டனி டெனிஸன், உணவு டெலிவரி

‘‘மழையோ, வெயிலோ, கரெக்டான நேரத்தில் நாங்கள் டெலிவரி கொடுத்தே ஆக வேண்டும். மழை நேரத்தில் டெலிவரி செய்வதற்கு எங்கள் கம்பெனியில் ஊக்கத்தொகை கொடுக்கிறாங்க. ஒரு நேரத்தில் அதிகபட்சம் இரண்டு ஆர்டர்கள் மட்டும்தான் எடுத்துச் செல்வோம். சைவ உணவு எடுத்துச் செல்லும்போது, அதனுடன் சேர்த்து அசைவ உணவை எடுத்துச் செல்லமாட்டோம். ஏன்னா, சில கஸ்டமர்களுக்கு அது பிடிக்காது. சில கஸ்டமர்கள் கதவைக் கொஞ்சம் போல் திறந்து, கையை மட்டும் வெளியே நீட்டி வாங்குவாங்க. சில வீடுகளில் சங்கிலியால் கதவை மாட்டிவிட்ட பிறகு, தலையை வெளியே நீட்டி பார்சலை வாங்குவாங்க. பல இடங்களில் டெலிவரி பாய் வேடத்தில் போய்த் திருடுறதும் நடக்குதே... அதனால, இவங்க இப்படி பிஹேவ் பண்றாங்களே என்று நாங்கள் கவலைப்படுறதில்லை. சில கஸ்டமர்கள், ‘உள்ளே வாப்பா, தண்ணி குடிக்கிறியா...’ என்றெல்லாம் அக்கறையோடு சொல்வார்கள். சந்தோஷமா இருக்கும்.’’

- கே.பாலசுப்பிரமணி
படங்கள்: வீ.நாகமணி
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

வாசலில் அந்நியர் ஜூனியர்: முறைத்த நாய்... குரைத்த மனிதர்... அக்கறை கஸ்டமர்!

இது மொபைல் டாஸ்மாக்!

ரா
மேஸ்வரம் தீவுப் பகுதியில்   அரசு மதுபானக் கடைகள் 11 இருந்தன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை மூன்றாகக் குறைந்தது. அந்த மூன்று கடைகளும் ராமேஸ்வரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள பாம்பனில் அமைந்துள்ளன. இதனால், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மதுப் பிரியர்கள்  அவஸ்தைப்படுகிறார்கள்.

அந்த அவஸ்தையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்ட சிலர், ‘மொபைல் ஒயின் ஷாப்’களாக மாறியுள்ளனர். இவர்கள், பாம்பன் மதுக்கடைகளுக்குச் சென்று மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிவருகிறார்கள். செல்போனில் இவர்களைத் தொடர்புகொண்டால் போதும்... அடுத்த 5 நிமிடங்களில் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே வந்து மது சப்ளை செய்துவிடுகின்றனர். இதற்கென கூடுதலாக ரூ.20 முதல் 50 வரை வசூலிக்கிறார்கள்.

- இரா.மோகன்