Published:Updated:

வாசலில் அந்நியர் ஜூனியர்: டோர் டெலிவரி புதுமைகள்!

வாசலில் அந்நியர் ஜூனியர்: டோர் டெலிவரி புதுமைகள்!
பிரீமியம் ஸ்டோரி
வாசலில் அந்நியர் ஜூனியர்: டோர் டெலிவரி புதுமைகள்!

வாசலில் அந்நியர் ஜூனியர்: டோர் டெலிவரி புதுமைகள்!

வாசலில் அந்நியர் ஜூனியர்: டோர் டெலிவரி புதுமைகள்!

வாசலில் அந்நியர் ஜூனியர்: டோர் டெலிவரி புதுமைகள்!

Published:Updated:
வாசலில் அந்நியர் ஜூனியர்: டோர் டெலிவரி புதுமைகள்!
பிரீமியம் ஸ்டோரி
வாசலில் அந்நியர் ஜூனியர்: டோர் டெலிவரி புதுமைகள்!
வாசலில் அந்நியர் ஜூனியர்: டோர் டெலிவரி புதுமைகள்!

‘இதெல்லாம்கூட வீடு தேடி வருமா’ என நாம் நினைத்துப் பார்க்க முடியாத பல விஷயங்கள் இந்தியாவில் இப்போது வந்துகொண்டிருக்கின்றன. அப்படிச் சில இங்கே...

‘‘அம்மா... டீசல்!’’

கா
லையில் வீட்டுக்கு வந்து பால் போடும் பால்காரர் போலவே, வீடு தேடிவந்து ‘‘அம்மா... டீசல்’’ எனக் குரல் கொடுக்கும் டீசல்காரரும் இருக்கிறார் பெங்களூருவில். ஆஷிஷ் குமார் குப்தா என்பவரின் ‘Mypetrolpump’ என்ற நிறுவனம், நீங்கள் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து டீசல் கொடுக்கிறது. போன் செய்தோ, ஆன்லைனிலோ, ஆப் மூலமோ ஆர்டர் கொடுத்தால் போதும்... இவர்களின் டெலிவரி வாகனம் சில நிமிடங்களில் வந்து டீசலை அளந்துகொடுக்கிறது.

வாசலில் அந்நியர் ஜூனியர்: டோர் டெலிவரி புதுமைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஒரு பெட்ரோல் பங்க்கில் இருக்கும் சகல பாதுகாப்பு அம்சங்களுடன் எங்கள் டெலிவரி வாகனத்தை அமைத்துள்ளோம். வெளிநாடுகளில் இப்படி இருப்பதைச் சுட்டிக் காட்டியபிறகு, பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எங்களுக்கு அனுமதி கொடுத்தார்’’ என்கிற ஆஷிஷ், தன்பாத் ஐ.ஐ.டி-யில் படித்தவர்.

இன்றைய மார்க்கெட் விலையோடு, டெலிவரி கட்டணமாக ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதலாக வசூலிக்கிறார்கள். ‘‘பெரிய அப்பார்ட்மென்ட்களில் இருக்கும் ஜெனரேட்டர்கள், சிறு தொழிற்சாலைகள் என வாகனங்களையும் தாண்டி, மற்ற உபயோகங்களுக்கு டீசல் பயன்படுகிறது. பள்ளிப் பேருந்துகளுக்கு மொத்தமாக வாங்குகிறார்கள்’’ என்கிற ஆஷிஷ், அடுத்ததாக பெட்ரோலையும் இப்படி டோர் டெலிவரி செய்யப்போகிறார்.

வாசலில் அந்நியர் ஜூனியர்: டோர் டெலிவரி புதுமைகள்!

வீட்டிலிருந்தே கட்டலாம் சொத்து வரி!

மு
னிசிபாலிட்டிக்குப் போய் சொத்து வரியும், தண்ணீர் வரியும் கட்டுவதற்குள் பலர் டயர்டாகி விடுவார்கள். டெல்லிக்கு அருகே இருக்கும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த குருக்ராம் மாநகராட்சியில் வசிப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை. இந்த மாநகராட்சி நிர்வாகத்துடன் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அதன்படி, யாராவது வரி கட்ட விருப்பம் தெரிவித்தால், வங்கியிலிருந்து ஒரு பணியாளர் வீடு தேடி வருவார். அவர் கையில் பாயின்ட் ஆஃப் சேல் மெஷின் இருக்கும். வரியை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமோ, செக்காகவோ செலுத்தலாம். கொடுத்ததும், அந்த நிமிடமே அவர்களின் செல்போனுக்கு ஒரு குறியீட்டு எண் வந்துவிடும். அந்த எண்ணைப் பயன்படுத்தி, குருக்ராம் மாநகராட்சி இணையதளத்தில் ரசீது டவுன்லோடு செய்துகொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதியைக் கொண்டுவந்திருக்கும் முதல் மாநகராட்சி இதுதான்.

வாசலில் அந்நியர் ஜூனியர்: டோர் டெலிவரி புதுமைகள்!

வாசலுக்கு வரும் பேங்க்!

ங்கிகள் தரும் பெரும்பாலான சேவைகளை இப்போது ஏ.டி.எம் மையங்களே தந்துவிடுகின்றன. ஆனாலும், பலருக்கு இவை எட்ட முடியாத தூரத்தில் உள்ளன. 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு வங்கிகளுக்கோ, வங்கிகளின் மின்னணு சேவை மையங்களுக்கோ செல்வதில் பல சிரமங்கள் உள்ளன. அங்கு அவர்கள், ஆபத்தான நபர்களால் ஏமாற்றப்படும் அபாயமும் உள்ளது. இதை உணர்ந்திருக்கும் ரிசர்வ் வங்கி, ஒரு புதுமையான சேவையை அளிக்கச் சொல்லி வங்கிகளுக்கு உத்தர விட்டுள்ளது. ‘வீடு தேடிச் சென்று வங்கிச் சேவைகளை அளிக்கும் திட்டம்’தான் அது.

பணம் எடுப்பது, பணம் செலுத்துவது, டிமாண்ட் டிராஃப்ட், ஆவணங்கள் அளிப்பது போன்றவற்றை இவர்களுக்கு வீடு தேடிவந்து வங்கி ஊழியர்கள் செய்வார்கள். ‘இந்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் இதற்கான அறிவிப்பை அனைத்து வங்கிகளும் செய்ய வேண்டும்’ என ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது. ‘இதைச் செய்யும் அளவுக்கு வங்கிகளில் பணியாளர்கள் இருக்கிறார்களா, இதை வைத்து மோசடிப் பேர்வழிகள் வங்கியின் பெயரைச் சொல்லி ஏமாற்றும் அபாயம் உள்ளதா’ என்பதையெல்லாம் தாண்டி, ‘இப்படி ஒரு சேவை வந்தால் நன்றாக இருக்கும்’ என்பதே சீனியர் சிட்டிசன்களின் ஆசையாக உள்ளது.

வாசலில் அந்நியர் ஜூனியர்: டோர் டெலிவரி புதுமைகள்!

வீட்டு வாசலில் சலூன்!

வீ
ட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் உட்கார வைத்து சிகைத் திருத்தம் செய்துவிடுவது இன்னமும் சில கிராமங்களில் வழக்கத்தில் உள்ளது. இதை நவீன யுகத்துக்கு ஏற்றபடி மாற்றி யோசித்ததுதான், நந்தா கௌதம் ஜெயித்ததற்குக் காரணம். கராக்பூர் ஐ.ஐ.டி-யில் படித்த நந்தா, ‘The Beards’ என்ற நிறுவனத்தை விசாகப்பட்டினத்தில் ஆரம்பித்துள்ளார். போன் செய்தால், இவரின் வாகனம் வீடு தேடி வரும். பெஞ்ச்சில் நியூஸ் பேப்பர் படித்தபடி காத்திருக்கத் தேவையில்லை. ஹேர்கட், ஷேவிங், மசாஜ், கலரிங், டாட்டூ எனச் சகல சர்வீஸ்களும் நிமிடங்களில் செய்து முடிக்கப்படுகின்றன.

வாசலில் அந்நியர் ஜூனியர்: டோர் டெலிவரி புதுமைகள்!

‘‘ஐ.ஐ.டி-யில் படித்துவிட்டு இந்தத் தொழிலையா செய்யப் போகிறாய் என உறவினர்களும் நண்பர்களும் ஏளனம் செய்தார்கள். ஆனால், நான் உறுதியாக இருந்தேன். ஆரம்பத்தில் மக்களும் இதை விநோதமாகப் பார்த்தனர். இப்போது நல்ல வரவேற்பு. மருத்துவமனைகள், ஹாஸ்டல்கள், அப்பார்ட்மென்ட்கள் போன்ற இடங்களில் மொத்தமாக நிறைய பேருக்குச் சேவை செய்யச் சொல்லி ஆர்டர்கள் வருகின்றன. என்னிடம் பணிபுரிகிறவர்கள் இப்போது பிஸியாக இருக்கிறார்கள். அடுத்து விஜயவாடா, குண்டூர் மற்றும் திருப்பதியில் கிளைகள் திறக்கப்போகிறேன்’’ என்கிறார் நந்தா கௌதம்.

நல்ல ஐடியாவா இருக்கே!

- எஸ்.உமாபதி