Published:Updated:

வாசலில் அந்நியர் ஜூனியர்: “பக்கத்து வீட்டுல இன்ஸ்பெக்டர் இருக்கார்...”

வாசலில் அந்நியர் ஜூனியர்: “பக்கத்து வீட்டுல இன்ஸ்பெக்டர் இருக்கார்...”
பிரீமியம் ஸ்டோரி
வாசலில் அந்நியர் ஜூனியர்: “பக்கத்து வீட்டுல இன்ஸ்பெக்டர் இருக்கார்...”

பலே பாதுகாப்பு டிப்ஸ்!

வாசலில் அந்நியர் ஜூனியர்: “பக்கத்து வீட்டுல இன்ஸ்பெக்டர் இருக்கார்...”

பலே பாதுகாப்பு டிப்ஸ்!

Published:Updated:
வாசலில் அந்நியர் ஜூனியர்: “பக்கத்து வீட்டுல இன்ஸ்பெக்டர் இருக்கார்...”
பிரீமியம் ஸ்டோரி
வாசலில் அந்நியர் ஜூனியர்: “பக்கத்து வீட்டுல இன்ஸ்பெக்டர் இருக்கார்...”
வாசலில் அந்நியர் ஜூனியர்: “பக்கத்து வீட்டுல இன்ஸ்பெக்டர் இருக்கார்...”

கல் நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், விதம்விதமான நபர்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. வீட்டு வேலை பார்ப்பவர், வாட்டர் கேன் போடுபவர், கார் டிரைவர், துணி சலவை செய்பவர், எலெக்ட்ரிகல் - பிளம்பிங் வேலை செய்பவர், காய் - பழம் விற்பவர், டாய்லெட் க்ளீனிங் அயிட்டங்கள் விற்பவர், ஆன்லைன் மார்க்கெட்டிங் பொருள் டெலிவரி செய்பவர், கூரியர் சர்வீஸ் ஊழியர், ஜோசியம் சொல்கிற பெண், விளக்குமாறு விற்கும் பெண், அப்பார்ட்மென்ட்டைச் சுத்தம் செய்பவர், குப்பை சேகரிக்கும் ஊழியர், ஆன்மிகம் என்கிற போர்வையில் சீஸனுக்குத் தகுந்த மாதிரி நன்கொடை வசூலிக்கும் கும்பல், கைக்குழந்தையை இடுப்பில் சுமந்தபடி வந்து கண்ணீர்விடும் பெண்கள், வயதான நிலையில் உதவி கேட்டு வருபவர்கள், அநாதை இல்லத்துக்கு உதவி கேட்டு வருபவர்கள், தங்கள் கம்பெனி பொருள் குறித்து சர்வே எடுக்கிறேன் என்று வருபவர்கள்... இப்படி தினம் தினம் எத்தனையோ நபர்கள் வருகிறார்கள்.

இவர்களில் பலர் நல்லவர்கள்; கிரிமினல்களும் அவர்களில் கலந்து இருப்பார்கள். அவர்களிடம் முன்னெச்சரிக்கையாக இருக்க சில டிப்ஸ்களைத் தருகிறார், சென்னை (கிழக்கு) இணை போலீஸ் கமிஷனர் மனோகரன்.

‘‘ஆண்கள் வேலைக்கும், குழந்தைகள் ஸ்கூலுக்கும் சென்றுவிடும் காலை பத்து மணி முதல் மாலை நாலு மணி வரை... இந்த நேரம்தான் திருடர்களின் டார்கெட் டயம். ‘வீட்டில் நாய் இருக்கிறதா, சி.சி.டி.வி கேமராக்கள் எங்கெங்கே உள்ளன, செக்யூரிட்டிகள் எப்போது ஷிப்ட் மாறுவார்கள்...’ இதையெல்லாம் முதலில் நோட்டமிடுவார்கள். இந்த விவரங்களைச் சேகரிக்காமல், எந்த கிரிமினலும் அட்டாக் செய்வதில்லை. அவர்களுக்குத் துப்புக் கொடுக்கிற நபர்களை ஏதாவது வியாபாரி போல நடமாடவிடுவார்கள். திருடர்களும் ஏதாவது ஒரு பொருள் விற்பவரைப்போலவே வட்டமடிப்பார்கள். இந்த நெட்வொர்க்கில் உள்ளவர்கள் கச்சிதமாகத் திட்டமிட்டுத் திருடுவார்கள்.

வாசலில் அந்நியர் ஜூனியர்: “பக்கத்து வீட்டுல இன்ஸ்பெக்டர் இருக்கார்...”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  வீட்டுப்பொருள்களை ரிப்பேர், சர்வீஸ் செய்ய வருகிறவர்களை வீட்டுக்கு வெளியே நிறுத்தி, அவர்களின் அடையாள அட்டையைப் பரிசோதிக்க வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள போன் நம்பருடன் தொடர்புகொண்டு, ‘ஆள் அனுப்பினீர்களா’ என்று விசாரிக்கவேண்டும். நிறைய நிறுவனங்கள் இப்போது போன் செய்துவிட்டே ஆட்களை அனுப்புகின்றன.

• ஏதாவது பொருள் வாங்க வாசல் கதவுக்கு வெளியே வந்தால், சி.சி.டி.வி கேமரா கவரேஜ் உள்ள இடத்தின் அருகே நின்று வாங்கவேண்டும். அல்லது, ஆபத்து நேரத்தில் சத்தம் போட்டால் மற்றவர்களுக்குக் கேட்கும்படியாகவோ, தப்பித்து ஓட வசதியாகவோ உள்ள இடமாகப் பார்த்து நிற்கவேண்டும்.

• யாராவது அட்ரஸ் கேட்க வந்து, குடிக்கத் தண்ணீர் கேட்கலாம். வாசல் கதவைத் திறந்து வைத்தபடி உள்ளே போனால், அவர்களும் உள்ளே வந்து தாக்குவார்கள். வீட்டின் வாசல் பகுதி மரக் கதவுக்கு வெளியே கண்டிப்பாக இரும்பு கிரில் கதவு பொருத்தப்பட வேண்டும். அதைப் பூட்டியே வைத்திருங்கள்.

• வெளியே நிற்பவரைக் காண்பதுபோல், கதவில் வியூ ஃபைண்டர் லென்ஸ் அல்லது ரகசிய கேமராவைப் பொருத்தியிருக்க வேண்டும். வாசல் கதவுக்கும் நிலைப்படிக்கும் இடையில், கதவை சிறிய அளவில் மட்டுமே திறந்து வைத்திருப்பது போன்ற செயின் இணைப்பு அவசியம்.

• வரும் சர்வீஸ் ஆட்கள்மீது சந்தேகம் எழுந்தால், கதவைத் திறந்துவைத்து நீங்கள் வாசலருகே போய் நின்றுகொள்ள வேண்டும். போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு, ‘என்னங்க... சார் ஏ.சி சர்வீஸுக்கு வந்திருக்காரு. ஓ... வந்துட்டீங்களா? சீக்கிரமா வாங்க’ என்று வாய்ப்பந்தல் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அல்லது, ‘பக்கத்து வீட்டுல இந்த ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர் குடியிருக்கிறார். அவரு வீட்டிலேயும் இதே பிரச்னை. கொஞ்சம் இருங்க... அந்த வீட்டு அம்மாவுக்கு போன் பண்ணி வரவழைக்கிறேன்’ என்று சொல்லிப் பாருங்கள். திருட்டு நபராக இருந்தால், உடனே ஆள் எஸ்கேப் ஆகிவிடுவார்.

• வீட்டு வேலை செய்பவர், டிரைவர், வீடு சுத்தம்செய்பவர் போன்றவர்களிடம் பூர்வ ஜாதகத்தைக் கேட்டு வாங்கவேண்டும். அவர்களை போட்டோ எடுத்து பத்திரப்படுத்தி வைக்கவும்.

• வீட்டில் ஏதாவது விசேஷம் நடக்கும்போது, நிறைய பேர் ஜாலியாக அரட்டை அடிப்பதை ஆடியோ பதிவுசெய்து பென் டிரைவில் வைத்திருக்கலாம். அறிமுகம் இல்லாதவர் யாராவது வந்தால்... ஆடியோ ப்ளேயரில் அதை ஆன் செய்யலாம். வெளியில் இருப்பவருக்கு வீட்டில் நிறைய ஆட்கள் இருப்பது போன்ற எண்ணம் உண்டாகும். திருடும் நோக்கத்துடன் வந்தால், அதை மாற்றிக்கொண்டுவிடுவான்.

• வட இந்தியர்களைத்தான் பெரும்பாலும் இப்போது நகர்ப்புற அப்பார்ட்மென்ட்களில் பணியில் சேர்க்கிறார்கள். செக்யூரிட்டி, மோட்டார் பம்ப் ஆபரேட்டர்... இப்படி யாரை நியமித்தாலும், அவர்களது பூர்வீகத்தைக் கேட்டு வாங்க வேண்டும். அதில் இருக்கும் எண்ணுக்கு போன் செய்து விசாரிக்கவேண்டும். அவர்கள் குறித்து சந்தேகம் எழுந்தால், அருகில் உள்ள காவல் நிலையத்தின் உதவியை நாடலாம். நம்மால் விசாரிக்க முடியாதபட்சத்தில், காவல்துறையினர் விசாரித்துச் சொல்வார்கள்.

• தரமான சி.சி.டி.வி கேமராக்களை அப்பார்ட்மென்ட் மற்றும் வீடுகளைச் சுற்றிலும் அமைத்து, அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

இவை வரும்முன் தடுக்க உதவும்; குற்றச் செயல் நடந்துவிட்டால், விரைந்து குற்றவாளியைப் பிடிக்கவும் போலீஸுக்கு உதவும்!’’

- ஆர்.பி.