Published:Updated:

வாசலில் அந்நியர் ஜூனியர்: டெலிவரி டெக்னாலஜி!

வாசலில் அந்நியர் ஜூனியர்: டெலிவரி டெக்னாலஜி!
பிரீமியம் ஸ்டோரி
வாசலில் அந்நியர் ஜூனியர்: டெலிவரி டெக்னாலஜி!

வாசலில் அந்நியர் ஜூனியர்: டெலிவரி டெக்னாலஜி!

வாசலில் அந்நியர் ஜூனியர்: டெலிவரி டெக்னாலஜி!

வாசலில் அந்நியர் ஜூனியர்: டெலிவரி டெக்னாலஜி!

Published:Updated:
வாசலில் அந்நியர் ஜூனியர்: டெலிவரி டெக்னாலஜி!
பிரீமியம் ஸ்டோரி
வாசலில் அந்நியர் ஜூனியர்: டெலிவரி டெக்னாலஜி!

ளில்லா குட்டி விமானங்களான டிரோன்கள் மூலம் பொருள்களை டெலிவரி செய்வது, அமேசான் போன்ற ஆன்லைன் சேவை நிறுவனங்களின் இலக்கு. பல நாடுகளில் இது சாத்தியமாகிவிட்டது. இந்தியாவில் இப்படி டிரோன்களை வணிகரீதியாகப் பயன்படுத்துவதற்கெனத் தனியாகச் சட்டம் எதுவும் இதுவரை இல்லை. போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதற்கு மட்டுமே இப்போதைக்கு பயன்படுத்தி வருகிறார்கள். மத்திய அரசின் விமானப் போக்குவரத்துத் துறை, முதல்முறையாக இதற்கு விதிகளை உருவாக்கியுள்ளது.

இதன்படி, டிரோன்கள் அவற்றின் எடையைப் பொறுத்து ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 250 கிராம் வரை எடையுள்ள குட்டி டிரோன்களைப் பயன்படுத்த அனுமதி எதுவும் தேவையில்லை. மற்றவற்றை அனுமதி பெற்றுப் பயன்படுத்தலாம். டெல்லியில் பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை இருக்கும் பகுதிகளிலோ, விமான நிலையங்களுக்கு 5 கி.மீ சுற்றளவிலோ, இவற்றைப் பறக்கவிடக் கூடாது. விரைவில் இந்தச் சட்டம் அமலுக்கு வரும்போது, நம் வீட்டு மொட்டை மாடியிலும் அமேசான் பார்சல் டெலிவரி ஆகலாம்.

இப்போதே பல இடங்களில் புதுமை சேவைகள் சாத்தியமாகியுள்ளன. சாம்பிளுக்கு சில... 

வாசலில் அந்நியர் ஜூனியர்: டெலிவரி டெக்னாலஜி!

வீட்டுக்கு உணவு கொண்டுவரும் டெலிவரி பாய்ஸுக்கு எல்லாம் ‘‘ஹாய்’’ சொல்கிறது அமெரிக்க ரோபோ ஒன்று. இது, பெருச்சாளியைவிட கொஞ்சம் பெரிதாக இருக்கும். இந்த ரோபோவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் டெலிவரி ஏரியாவின் அத்தனை வீட்டு அட்ரஸ்களும், அதன் மெமரியில் சேமிக்கப்பட்டிருக்கும். ரோபோவுக்குள் ஒரு சீக்ரெட் லாக்கர் இருக்கும். அதற்குள் பீட்ஸாவோ, ஆன்லைனில் நாம் வாங்கும் பொருளோ இருக்கும். ரோபோ நம் வீட்டுக்கு வந்ததும், நம் மொபைலுக்கு வரும் பாஸ்கோடைப் போட்டால்தான் அதன் லாக்கர் திறக்கும். நமக்கான பொருளை எடுத்துக்கொண்டு ‘ஓகே’ சொன்னால், ரோபோ திரும்பிப் போய்விடும். ரோபோவுக்குள் 360 டிகிரியிலும் சுழலும் கேமராக்கள் உண்டு. அமெரிக்காவில் வெற்றிகரமாக இதைச் சோதித்திருக்கிறார்கள். ஆனால், நம் ஊரில் தெருவுக்குத் தெரு நாய்கள் உண்டு. அவற்றை ரோபோ எப்படி சமாளிக்கும் என்பதுதான் ட்விஸ்ட்.

மாநகரவாசிகளை அன்றாடம் ஒரு முறையாவது ‘உச்’ கொட்ட வைத்துவிடும் ஆம்புலன்ஸ்கள். விரும்பினாலும்கூட, ஆம்புலன்ஸுக்கு வழிவிட அவர்களால் முடிவதில்லை. காரணம், டிராஃபிக் நெரிசல். செய்வதறியாமல் திகைத்து, அந்த நோயாளிக்காக பிரார்த்தனை செய்துவிட்டு அலுவலகத்துக்கு விரைவதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால், தொழில்நுட்பம் அப்படி இருக்காது. அது, பிரச்னை களுக்குத் தீர்வு காணும்வரை ஓயாது. அப்படி டெக்னாலஜி ஓவர்டைம் பார்த்து கிடைத்த விஷயம்தான், டிரோன் ஆம்புலன்ஸ். விளைவு, பல உயிர்கள் இதனால் காப்பாற்றப்பட இருக்கின்றன. நோயாளியையும், உடன் ஒரு மருத்துவ உதவியாளரையும் சுமந்துகொண்டு பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த டிரோன் ஆம்புலன்ஸ். இதன் உள்ளே லைவ் கேமரா வசதியும், ஆடியோ கனெக்‌ஷனும் இருப்பதால், மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்குள் நோயாளியின் நிலைமையை மருத்துவர் ஆராய்ந்து, தகுந்த கட்டளைகளை மருத்துவ உதவியாளருக்குக் கொடுக்கலாம்.

இந்தியாவுக்கு இது வருவதற்கு எவ்வளவு காலம் ஆகும் எனத் தெரியவில்லை. ஆனால், இப்போதைக்கு ஏர் ஆம்புலன்ஸ் சேவை இங்கு கிடைக்கிறது. ஒரு மருத்துவமனையின் இன்டென்சிவ் கேர் யூனிட் போல மாற்றப்பட்ட ஹெலிகாப்டரையே ‘ஏர் ஆம்புலன்ஸ்’ என்கிறார்கள். டாக்டரும் மருத்துவப் பணியாளரும் இதில் இருப்பார்கள். காஸ்ட்லியான சேவை இது. சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த வடநாட்டு அரசியல்வாதி ஒருவருக்கு விபத்து நேர்ந்தது. அவரை அங்கிருந்து அப்படியே தூக்கிச் சுமந்து வந்து சென்னையில் பத்திரமாக சேர்த்தது கோவை கங்கா மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ்.

இங்கிலாந்தில் இன்னொரு குட்டி டிரோன் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒருவருக்கு இதயம் செயலிழந்த பிறகு 4-6 நிமிடங்கள் கழித்தே மூளை செயலிழக்கும். அதற்குள் இதயத்தை மீண்டும் துடிக்கச் செய்துவிட்டால், அவர் உயிர் பிழைத்துவிடுவார். ‘சிவாஜி’ படத்தில் ரஜினியை ரகுவரன் இப்படித்தான் காப்பாற்றுவார். அதற்கு உதவும் கருவிதான் Defibrillator. ஆனால், மாரடைப்பு நேர்ந்த 6 நிமிடங்களுக்குள் அவர்கள் மருத்துவமனைக்கு வருவது சாத்தியமில்லை. அதற்கு இந்த டிரோன் பயன்படுகிறது. இதிலிருக்கும் Defibrillator கருவியை, டிரோன் காண்பிக்கும் படத்தில் இருப்பது போலப் பயன்படுத்தி, நோயாளியைக் காப்பாற்றலாம்.

இந்த டிரோன், மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பறக்கும். அதாவது, 12 சதுர கிலோமீட்டருக்குள் இருக்கும் இடத்துக்கு ஒரே நிமிடத்தில் சென்று சேர்ந்துவிடும். ஜி.பி.எஸ்-ஸைப் பார்த்து லொகேஷனை அடையாளம் கண்டு, டிரோன் ஆம்புலன்ஸ் தானாகப் பறந்து சென்றுவிடும்.

- கார்க்கி பவா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!