Published:Updated:

வாசலில் அந்நியர் ஜூனியர்: “ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றாங்க...”

வாசலில் அந்நியர் ஜூனியர்: “ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றாங்க...”
பிரீமியம் ஸ்டோரி
வாசலில் அந்நியர் ஜூனியர்: “ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றாங்க...”

வீட்டுக்கு வரும் டாக்டர்கள்

வாசலில் அந்நியர் ஜூனியர்: “ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றாங்க...”

வீட்டுக்கு வரும் டாக்டர்கள்

Published:Updated:
வாசலில் அந்நியர் ஜூனியர்: “ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றாங்க...”
பிரீமியம் ஸ்டோரி
வாசலில் அந்நியர் ஜூனியர்: “ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றாங்க...”
வாசலில் அந்நியர் ஜூனியர்: “ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றாங்க...”

ழைய கறுப்பு - வெள்ளை படங்களில், கையில் ஒரு பெட்டியைத் தூக்கியபடி வீட்டுக்கே வந்து சிகிச்சை தரும் டாக்டர் கேரக்டர்களைப் பார்க்க முடியும். கறுப்பு-வெள்ளை படங்கள் போலவே, இப்படிப்பட்ட டாக்டர்களும் காணாமல் போய்விட்டார்கள். அந்த மரபை மீட்டுள்ளது, சென்னையைச் சேர்ந்த முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனின் முயற்சியில் உருவான ‘இல்லம் தேடிய சிகிச்சை’ என்ற அமைப்பு.

‘‘முதியவர்களை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல முடியாத சூழல் இருக்கும்போது, அதனால்கூட அவர்கள் உயிரிழந்துவிடுகின்றனர். இதுபற்றி மருத்துவ நண்பர்கள், மாணவர்கள்கிட்ட கோரிக்கை வெச்சேன். தாராளமா செய்யலாம்னு முன்வந்தாங்க” என்று இந்த அமைப்பின் உருவாக்கம் பற்றி உற்சாகமாகப் பேசுகிறார், டாக்டர் நடராஜன்.

‘‘சென்னையில்30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்தச் சேவையைச் செய்கிறார்கள். எந்த நேரம் அழைத்தாலும், மறுப்புச் சொல்லாமல் முதியவர்களின் வீடுகளுக்குச் சென்று சிகிச்சையளிக்கிறோம். வயதானவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டும். மருத்துவமனைகளுக்கு அழைத்துப் போவதால் காலதாமதம் ஆயிடும். அதைத் தவிர்க்கவே இந்தமுறை.இதுவரை 6000-க்கும் மேற்பட்ட முதியவர்களைக் காப்பாற்றியுள்ளோம். வீடுகளுக்கு மட்டுமின்றி, முதியோர் இல்லங்களுக்கும் போய் ட்ரீட்மென்ட் பண்றோம்.

வீடுகளுக்குப் போய் ட்ரீட்மென்ட் பண்ணும்போது ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றாங்க. பாதிப் பிரச்னைகள் அதிலேயே சரியாகிடும். அலோபதி மருத்துவர்கள் மட்டுமின்றி, இயற்கை மருத்துவர், ஹோமியோபதி மருத்துவர்களும் இந்த அமைப்பில் இருக்காங்க. இந்தத் திட்டத்தோட அடுத்தகட்டமாக, ஆதரவில்லாத முதியவர்களின் வீடுகளுக்குப் போய் அவர்களுக்கு உணவு  கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். முதியவர்களுக்கு அவர்கள் வயதுக்கேற்ற உணவுகளைச் சாப்பிடாததால் பல நோய்கள் வருது. அதைத் தவிர்க்கவே இந்த முயற்சி. இப்போ திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் உள்ள முதியவர்களுக்கும் இந்த அமைப்பின் கீழ் சிகிச்சை அளிக்கிறோம்’’ என்கிற நடராஜன், ‘‘இதுபோன்ற திட்டத்தை அரசே எல்லாப் பகுதிகளிலும் தொடங்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் முடித்தார்.

வாசலில் அந்நியர் ஜூனியர்: “ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றாங்க...”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற மறதி நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பார்க்கின்சன் போன்ற நோயால் பாதிக்கப்பட்டு எந்தவித செயல்பாடுகளும் இல்லாமல் இருப்பவர்களின் வீடுகளுக்கே சென்று பல்லைச் சுத்தம் செய்தல், வேர் சிகிச்சை, பல் செட் கட்டுதல், சொத்தைப் பல் அகற்றுதல் போன்ற சிகிச்சைகளைச் செய்து வருகிறார், சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் வித்யா.

‘‘வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாத பல் நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கிறேன். ஏழு வருடங்களாக இந்தச் சேவையைச் செய்துக்கிட்டு இருக்கேன். சென்னையில் மட்டுமில்லை... காஞ்சிபுரம், செங்கல்பட்டு சென்றும்கூட சிகிச்சை அளிக்கிறேன். அருகில் உள்ள இடங்களுக்கு டூவிலரிலும், அதிக தூரம் உள்ள பகுதிகளுக்குக் காரிலும் போகிறேன். இதற்காகக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது இல்லை.

மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் கடிச்சு வெச்சுடுவாங்க. பொறுமையா கையாளணும். இரண்டு, மூன்று முறை அவங்க வீட்டுக்குப் போயி பழகினாத்தான் சிலர் நம்ம பக்கத்துல வருவாங்க. அதனால் குறைஞ்சது ஐந்து முறையாவது ஒருத்தர் வீட்டுக்குப் போகவேண்டி வரும்.

அது மாதிரி மழை, வெயிலெல்லாம் பார்க்க மாட்டேன். 

வாசலில் அந்நியர் ஜூனியர்: “ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றாங்க...”
வாசலில் அந்நியர் ஜூனியர்: “ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றாங்க...”

வீட்டுக்கு வந்து ட்ரீட்மென்ட் பண்ணணும்னு யாராவது கால் பண்ணினா, முதல் டைம் மட்டும் எங்க அப்பா, கணவர் யாராவது ஒருத்தரைக் கூடவே கூட்டிட்டுப் போவேன். சரியான நபர்கள்தான்னு தெரிஞ்சுக்கிட்டா அடுத்த முறை நானே போயிடுவேன். தமிழ்நாடு முழுவதும் இதே போல முதியவர்களுக்கு அவர்களின் வீடு தேடிப் போய் சிகிச்சை தரணும்ங்கிறது என்னோட விருப்பம்” என்றார் வித்யா.

- இரா.செந்தில்குமார்
படங்கள்: வீ.நாகமணி

ஹோம் டெலிவரி அரசாங்கம்!

ர்டர் செய்தால் எல்லாமே வீடு தேடி வருவதைப்போல, அரசாங்க சேவைகளும் வருமா? தனியாருக்குப் போட்டியாக அரசும் களமிறங்கும் நாள் தொலைவில் இல்லை. அதன் முதல் அடியை டெல்லி மாநில அரசு எடுத்து வைத்திருக்கிறது.

வாசலில் அந்நியர் ஜூனியர்: “ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றாங்க...”

‘‘விரைவில் அரசின் 40 விதமான சேவைகள் மக்களுக்கு வீடு தேடி வரும்’’ என செப்டம்பர் மாதம் அறிவித்தார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால். சாதிச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ் போன்றவை இந்த 40 சேவைகளில் முக்கியமானவை.

இதற்காக தனியார் ஏஜென்சியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, ‘கால் சென்டர்’களை அரசு அமைக்கிறது. ‘மொபைல் சஹாயக்’ எனப்படும் பணியாளர்கள் இங்கு இருப்பார்கள். போன் செய்தால், இவர்கள் வீடுதேடி வருவார்கள். கேமரா, பயோமெட்ரிக் பதிவு எடுக்கும் இயந்திரம் என எல்லாமே இவர்களிடம் இருக்கும். நமக்குத் தேவைப்படும் சான்றிதழ் எதுவோ, அதற்குத் தேவையான ஆவணங்களின் பிரதிகளை வாங்கிச் சென்று, குறிப்பிட்ட அலுவலகத்தி லிருந்து சான்றிதழ்களை வாங்கிவந்து கொடுப்பார்கள். ‘‘இதற்காக தனியே ஒரு கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், அது நியாயமான கட்டணமாகவே இருக்கும்’’ என்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.

- கார்க்கி பவா