Published:Updated:

வாசலில் அந்நியர் ஜூனியர்: துணுக்குகள்

வாசலில் அந்நியர் ஜூனியர்: துணுக்குகள்
பிரீமியம் ஸ்டோரி
வாசலில் அந்நியர் ஜூனியர்: துணுக்குகள்

வாசலில் அந்நியர் ஜூனியர்: துணுக்குகள்

வாசலில் அந்நியர் ஜூனியர்: துணுக்குகள்

வாசலில் அந்நியர் ஜூனியர்: துணுக்குகள்

Published:Updated:
வாசலில் அந்நியர் ஜூனியர்: துணுக்குகள்
பிரீமியம் ஸ்டோரி
வாசலில் அந்நியர் ஜூனியர்: துணுக்குகள்
வாசலில் அந்நியர் ஜூனியர்: துணுக்குகள்
வாசலில் அந்நியர் ஜூனியர்: துணுக்குகள்

‘‘சப்ஸ்க்ரைப் பண்ணுங்க!’’

‘‘எ
க்ஸ்க்யூஸ் மி சார்... நான் எம்.பி.ஏ ஸ்டூடன்ட். மார்க்கெட்டிங் ஸ்டடிக்காக வந்திருக்கேன்...’’ என்பார் டை கட்டிய இளைஞர். ‘‘என் புராஜெக்ட்டுக்காக டெல்லியிலுள்ள கேக்ரான் மேக்ரான் பப்ளிஷிங் கம்பெனியில சேர்ந்திருக்கேன். இந்த கம்பெனி உங்க பிள்ளைங்களுக்கு 5,000 ரூபாய் மதிப்புள்ள எஜுகேஷன் புக்ஸை இலவசமா தராங்க. எல்.கே.ஜி படிக்கிற உங்க பையன் இன்ஜினீயரிங், மெடிக்கல் எஜுகேஷனை இந்த வயசுலருந்து படிக்கிற மாதிரி புக் தயாரிக்கப்பட்டுள்ளது’’ என்பார்கள். கலர் கலர் அட்டை போட்ட ஐந்து கிலோ எடையுள்ள புத்தகங்களைத் தருவார்கள்.

நாமும் ‘ஓசியா...?’ என்று வாயைப் பிளந்தால் அவ்வளவுதான். ‘‘இதுபோல உங்களுக்கு ஆண்டுதோறும் கிடைக்க சப்ஸ்க்ரைப் பண்ணுங்க’’ என்று 2,000 ரூபாய் கறந்துவிடுவார்கள். அவர்கள் சென்ற பிறகு புத்தகங்களைத் திறந்து பார்த்தால், நாளிதழ்களில் வந்த வினா விடை, வாய்ப்பாடு, வெஜிடபிள் நேம் என்று ஒர்த் இல்லாத விஷயங்கள்தான் அதில் இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- செ.சல்மான்

வாசலில் அந்நியர் ஜூனியர்: துணுக்குகள்

‘டெங்கு’ ஆட்டை!

ஞ்சை மாவட்ட நிர்வாக மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று டெங்கு ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த அதே நேரத்தில், ‘போலி டெங்கு ஒழிப்புக் குழு’ ஒன்றும் சில தெருக்களுக்குச் சென்று, தண்ணீர்த் தொட்டிகளில் கொசு முட்டைகள் இருப்பதாகச் சொல்லி 500, 1,000 என அபராதம் வசூலித்தது. ‘‘இப்ப எங்ககிட்ட ஃபைன் கட்டிட்டா, இதோட முடிஞ்சிடும். கலெக்டரோ, கமிஷனரோ வந்து கண்டுபுடிச்சா, நாலாயிரம், ஐயாயிரம்னு பெரிய அமெளன்ட்டா ஃபைன் போட்டுத் தீட்டிடுவாங்க. உங்க நல்லதுக்குத்தான் சொல்றோம்” என அக்கறையோடு அட்வைஸும் செய்துள்ளார்கள் அந்த ஆட்டை பார்ட்டிகள்.

- கு.ராமகிருஷ்ணன்

வாசலில் அந்நியர் ஜூனியர்: துணுக்குகள்

‘‘பாலிசி எடுத்தாரே... பாவம்!’’

துரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரத்தில் துக்க வீடுகளைக் குறிவைத்து வருவார், சஃபாரி அணிந்த டிப் டாப் ஆசாமி ஒருவர். சோகத்தில் இருப்பவர்களிடம் மிகவும் சென்டிமென்ட்டாக துக்கம் விசாரிப்பார். ‘‘நல்ல மனுஷன் இப்படிப் போயிட்டாரே... சமீபத்துலதான் எங்க ஆபீஸ்ல 10 லட்ச ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தாரு. அதைப்பத்தி வீட்டுல சொன்னாரா, இல்லையான்னு தெரியலையே’’ என்று பிட்டைப் போடுவார்.

‘‘அப்படீங்களா? ரொம்ப கஷ்டப்படுற குடும்பம். அதை வாங்கிக் கொடுத்து உதவி செய்யுங்க அய்யா’’ என்பார்கள். ‘‘அதெல்லாம் பண்ணிடலாம். பாலிசி டாக்குமென்ட் வீட்ல வெச்சிருக்காரான்னு பாருங்க’’ என்று அவர் சொல்ல, வீட்டைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுத் தேடுவார்கள். அப்படி ஒரு பாலிசி போட்டிருந்தால்தானே வீட்டில் டாக்குமென்ட் இருக்கும். ‘‘இல்லையே’’ என்று கைவிரிப்பார்கள்.

‘‘ஒண்ணும் பிரச்னை இல்லை. மதுரையில இருக்குற ஆபீஸ்ல காசு அடிச்சு விட்டா டூப்ளிகேட் டாக்குமென்ட் கிடைக்கும். அதை வெச்சு ஒரே மாசத்துல 10 லட்ச ரூபாயை வாங்கிடலாம்’’ என்று சாதாரணமாகச் சொல்வார். உடனே அவர் கேட்டபடி 10 ஆயிரமோ, 20 ஆயிரமோ கொடுப்பார்கள். ‘‘நாளைக்கு மதுரை காளவாசலில் இருக்கும் இன்ஷூரன்ஸ் ஆபீசுக்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு எடுத்துட்டு வந்திடுங்க’’ என்று சொல்லிவிட்டுப் போவார். சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மறுநாள் அவர் சொன்ன இடத்துக்குப் போனால்தான் தெரியும், அப்படி ஓர் ஆள் அங்கே வேலை செய்யவில்லை என்பது.

இப்படி மதுரை மாவட்டத்தில் பல வீடுகளில் வேலையைக் காட்டியிருக்கும் ஆசாமியை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நாளிதழில் வரும் மரண அறிவிப்புகளையும், ‘இமயம் சரிந்தது’ என்று ஒட்டப்படும் போஸ்டர்களையும் பார்த்து, தில்லாலங்கடி வேலைகளைத் தில்லாகக் காட்டி வருகிறார்கள் இப்படி சிலர்.

- செ.சல்மான்

வாசலில் அந்நியர் ஜூனியர்: துணுக்குகள்

பிராண்ட் பெயரில் மோசடி!

‘‘மே
டம்... மேடம்...’’ என்று யூனிஃபார்ம் அணிந்த பெண்கள் காலிங் பெல் அடிப்பார்கள். பிரபல பிராண்ட் ஒன்றின் பெயரைச் சொல்லி, ‘‘அந்தக் கம்பெனியிலிருந்து நேரடி விற்பனைக்கு வந்திருக்கோம். கடையில நீங்க வாங்குற சமையல் எண்ணெய், நல்லெண்ணெயை ஆஃபரில் தருகிறோம். அதுக்கு இலவசமா 100 மில்லி தேங்காய் எண்ணெய், மசாலா பாக்கெட் உண்டு’’ என்பார்கள். வேண்டாம் என்று மறுத்தாலும் விட மாட்டார்கள். வாங்கிய பிறகு அந்த பாக்கெட்டை உன்னிப்பாகக் கவனித்தால், பிராண்ட் நேமோடு கூடுதலாக ஒரு எழுத்து கூடியிருக்கும்; அல்லது ‘சூப்பர்’, ‘நியூ’  என்று பொடி எழுத்தில் மேலே இருக்கும். லோக்கல் போலி தயாரிப்பை பிராண்ட் பெயரில் நம் தலையில் கட்டிவிட்டுச் செல்கிறார்கள் இந்தப் பெண்கள்.

- செ.சல்மான்

வாசலில் அந்நியர் ஜூனியர்: துணுக்குகள்

நகையோடு போன பாத்திர பார்ட்டி!

தா
ராபுரம் பக்கத்தில் உள்ள கிராமம் அது. தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார் மூதாட்டி ஒருவர். எவர்சில்வர் பாத்திரங்களைக் கூடையில் சுமந்தபடி விற்க வந்த வியாபாரிக்கு, கழுத்து நிறைய நகையும் கைநிறைய வளையலுமாக இருந்த பாட்டியைப் பார்த்ததும் விபரீத எண்ணம் தோன்றியுள்ளது. ‘எப்படியும் 50 பவுன் தேறும்... இதை வைத்து செட்டிலாகிவிடலாம்!’

களைப்பாக இருப்பதுபோல திண்ணையில் கூடையை இறக்கிவைத்தவர், ‘‘கொஞ்சம் தண்ணீர் கொண்டாங்கம்மா’’ என்று கேட்டுள்ளார். மூதாட்டி வீட்டுக்குள் போக, நைஸாக பின்னால் சென்றார் இவர். திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி, அத்தனை நகைகளையும் கழற்றி வாங்கிக்கொண்டார். பாட்டியின் வாயில் துணியைத் திணித்துவிட்டு, வேகமாக வெளியில் வந்து ஓடியே போய்விட்டார்.

வாசலில் அந்நியர் ஜூனியர்: துணுக்குகள்

பிறகு வெளியில் வந்த பாட்டி, நகை பறி போனதற்காக கூப்பாடு போடாமல், சத்தம்போட்டுச் சிரித்தார். அவரின் சிரிப்புக்குக் காரணம் இதுதான். அவர் அணிந்திருந்தவையெல்லாம் கில்ட் நகைகள். அதிகபட்சம் 1,000 ரூபாய் இருக்கும். ஆனால், வியாபாரி விட்டுச்சென்ற எவர்சில்வர் பாத்திரங்களின் மதிப்பு, எப்படியும் 5,000 ரூபாய் தேறும்.

- ஜி.பழனிச்சாமி

ஓவியங்கள்: ரமணன்