Published:Updated:

வாசலில் அந்நியர் ஜூனியர்: ஆறு எழுத்து அட்ரஸ்... ஏ.டி.எம்-ஆக மாறும் போஸ்ட்மேன்!

வாசலில் அந்நியர் ஜூனியர்: ஆறு எழுத்து அட்ரஸ்... ஏ.டி.எம்-ஆக மாறும் போஸ்ட்மேன்!
பிரீமியம் ஸ்டோரி

க்கத்து வீட்டில் இருப்பவர்களின் பெயர்கூடத் தெரியாமல் பல வருடங்கள் வாழ்ந்துவிட முடிகிற இந்தக் காலத்தில், ஒரு அட்ரஸை எத்தனை வரிகளில் கொடுத்தாலும் போதவில்லை. வீட்டுக்கு வரும் புது நபர்கள், ‘‘கண்டுபிடிக்க முடியல சார், ஏதாவது லேண்ட்மார்க் சொல்லுங்க’’ என்பார்கள். ‘‘சிக்னல்ல ரைட் எடுக்கணும். கொஞ்ச தூரத்துல ஒரு பிள்ளையார் கோயில் வரும். அதுக்கு எதிர்ல திரும்பவும் ரைட் எடுத்து, ரெண்டாவது லெஃப்ட் வரணும். அந்தத் தெரு கடைசியில சிவப்பு பெயின்ட் அடிச்ச வீடு இருக்கு பாருங்க... அதுதான்’’ என விளக்க வேண்டியிருக்கும்.  

வாசலில் அந்நியர் ஜூனியர்: ஆறு எழுத்து அட்ரஸ்... ஏ.டி.எம்-ஆக மாறும் போஸ்ட்மேன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இத்தனை விலாவாரியான ஓர் அட்ரஸை வெறும் ஆறு எழுத்துகள் கொண்டதாக மாற்றிவிட்டால் எப்படி இருக்கும்? ஒரு தனி மனிதரின் அத்தனை விவரங்களையும் குட்டியூண்டு ஆதார் அட்டைக்குள் சுருக்கியது போல, ‘e-Location’ என்னும் தொடர்பியல் தொழில்நுட்பம் மூலம் எவ்வளவு சிக்கலான முகவரியையும் ஆறு எண்ணெழுத்துகள் (6-Alphanumeric) கொண்ட டிஜிட்டல் முகவரியாக மாற்றிக்கொள்ளலாம். தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் வரும் தபால் துறையின் சார்பாக ‘மேப் மை இந்தியா’(mapmyindia) என்கின்ற தனியார் நிறுவனம், eLoc (e-Location) என்றழைக்கப்படும் இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

இதைப் பரிசோதனை முறையில் செயல்படுத்த டெல்லியில் இரண்டு இடங்களும் நொய்டாவில் ஓர் இடமும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இதற்கான அனுமதி, கடந்த செப்டம்பரில் அளிக்கப்பட்டது. ‘‘ஆரம்பகட்ட திட்ட செயல் பாட்டில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து நாடு முழுவதற்கும் டிஜிட்டல் முகவரி சேவை கொண்டு செல்லப்படும்’’ என்று ‘மேப் மை இந்தியா’ நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில், அஞ்சல் சேவைகள் கூடுதல் இயக்குநர் அபிஷேக் குமார் சிங் குறிப்பிட்டுள்ளார்.

வாசலில் அந்நியர் ஜூனியர்: ஆறு எழுத்து அட்ரஸ்... ஏ.டி.எம்-ஆக மாறும் போஸ்ட்மேன்!

இது செயல்படும் விதமும் ஏறக்குறைய ‘கூகுள் மேப்’ போலவேதான். செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் வரைபடங்களின் வழி இயக்கப்படும் இந்த eLoc திட்டத்துக்கு, இஸ்‌ரோ நிறுவனத்தின் ‘புவன்’ வரைபட சேவை பயன்பட உள்ளது. கூகுள் மேப்பில் உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் நான்கைந்து வரி முகவரியை அவ்வளவு நீளமாகப் பதிய முடியாது. அதுவே குட்டியாக இருந்தால், குறிப்பிட முடியும். அப்படித்தான் இதிலும் செய்ய இருக்கிறார்கள். உதாரணமாக, உங்கள் வீட்டின் முகவரி ‘10XX, ஒபாமா நகர், ஆறாவது தெரு, ஆதம்பாக்கம், சென்னை-88’ என்றிருந்தால், அது ‘K6TT4U’ போன்ற ஆறு கேரக்டர்களாக சுருக்கப்படும். அதனுடன், உங்கள் ஆதார் எண்ணும் இணைக்கப்படும்.

இந்த டிஜிட்டல் முகவரியுடன் மின் இணைப்பாக்கம் (e-Linkage) மூலமாக அவ்விடத்தின் உரிமையாளர் விவரம், வரி கட்டியதற்கான பதிவுகள், மின்சாரம், குடிநீர், எரிவாயு போன்ற பயன்பாடுகளின் தகவல்களும் இணைக்கப் படும்.        ‘மேப் மை இந்தியா’ நிறுவனத்தின் இயக்குநர் ராகேஷ் வர்மா, ‘‘இந்த ஆறு இலக்க டிஜிட்டல் முகவரிகளைப் பயன்படுத்தி, எளிதாக எந்த அட்ரஸுக்கும் போக முடியும். இதனால் டெலிவரி நிறுவனங்களுக்கு அலைச்சல் இருக்காது. பணம், நேரம், எரிபொருள் விரயமாவதைத் தடுக்க முடியும்’’ என்கிறார்.

வாசலில் அந்நியர் ஜூனியர்: ஆறு எழுத்து அட்ரஸ்... ஏ.டி.எம்-ஆக மாறும் போஸ்ட்மேன்!

தனக்கெனத் தனியாக வங்கிச் சேவையைத் தொடங்கியுள்ள இந்திய அஞ்சல் துறை, 2018 மார்ச் மாதத்தில் இந்தியா முழுக்க தன் சேவையை விரிவுபடுத்த உள்ளது. அப்போது போஸ்ட்மேன் ஒரு மைக்ரோ ஏ.டி.எம் கருவியை எடுத்துக்கொண்டு வீடுகளுக்கு வருவார். அதில் பிரின்டர், பயோமெட்ரிக் பதிவுகளைப் பெறும் வசதி, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி என எல்லாமே இருக்கும். செல்போன் பில், மின்சாரக் கட்டணம், டி.டி.ஹெச் சந்தா, பள்ளிக்கட்டணம் எனச் சகலவிதமான சேவைகளுக்கும் அவரிடமே பணம் செலுத்த முடியும். கூடவே, ரயில் டிக்கெட் புக் செய்வது போன்ற சேவைகளையும் இதில் சேர்க்க அஞ்சல் துறை முயற்சி செய்துவருகிறது.

- சே.அபினேஷ்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

வாசலில் அந்நியர் ஜூனியர்: ஆறு எழுத்து அட்ரஸ்... ஏ.டி.எம்-ஆக மாறும் போஸ்ட்மேன்!

வீடு தேடி வரும் வக்கீல்!

ல்லா துறைகளிலும் ஸ்டார்ட்அப் வளர்ந்து வருவதைப் போல வழக்கறிஞர் தொழிலிலும் வந்திருக்கிறது. மும்பையைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சேர்ந்து ஒரு ஆப் உருவாக்கியிருக்கிறார்கள். ‘நமக்கு என்ன மாதிரியான சட்ட உதவி தேவை’ என்பதை அதில் குறிப்பிட்டால், அதற்கேற்ற வழக்கறிஞரின் புரொஃபைல் நமக்குக் காட்டப்படும். அவரிடம், வீடியோ மூலமாக நமது பிரச்னையைச் சொல்லலாம். தேவைப்பட்டால், அவர் நம் வீட்டுக்கோ அல்லது அருகிலிருக்கும் காபி ஷாப்புக்கோ வருவார். சந்தித்தும் பேசலாம். அந்தந்தச் சேவைக்கேற்ற பணத்தை ஆன்லைன் மூலமே கட்டிவிடலாம்.

- கார்க்கி பவா