Published:Updated:

வாசலில் அந்நியர் ஜூனியர்: “ஆட்டைப் பாரு... ஆட்டையப் போடு!”

வாசலில் அந்நியர் ஜூனியர்: “ஆட்டைப் பாரு... ஆட்டையப் போடு!”
பிரீமியம் ஸ்டோரி

ரூர் மாவட்டத்தில் வீடு தேடிவந்து கலர் கலராக ஏமாற்றும் கோஷ்டிகளின் அட்ராசிட்டிகள் அதிகம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் சொன்ன இரண்டு சம்பவங்கள்...

அட்ராசிட்டி 1: ஆடு மாடு வளர்க்கிறதுதான் இங்க பிரதான தொழில். ‘ஆடு வாங்குறேன் பேர்வழி’ன்னு கிராமங்களுக்குக் கும்பலா சிலர் கிளம்பி வருவாங்க. ஒவ்வொரு வீடா போய் ஆடுகளைப் பார்த்து, விலை பேசிட்டு, ‘எங்களுக்கு 50 ஆடுகள் தேவைப்படுது. காசு கொஞ்சம் குறையுது. ரெண்டு நாள்ல வந்து மொத்தப் பணத்தையும் கொடுத்துட்டு, ஆடுகளை வாங்கிட்டுப் போறோம்’ன்னு சொல்லிட்டு, காபி தண்ணியை வாங்கிக் குடிச்சுட்டுப் போயிருவாங்க.

வாசலில் அந்நியர் ஜூனியர்: “ஆட்டைப் பாரு... ஆட்டையப் போடு!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்னைக்கு ராப்பொழுது கழிஞ்சு, பளபளன்னு விடியும்போது, பல பேரு குய்யோமுறையோன்னு கத்திக்கிட்டு, ‘‘என் பட்டியில இருந்த பல ஆடுகளைக் காணோம்’’னு குமைவாங்க. அப்புறம்தான் விஷயம் தெரியும்... முதல் நாள் ஆடு வாங்கறாப்புல வந்த குரூப்போட கைங்கர்யம்தான் இதுன்னு! ஆடுகள வாங்குறாப்புல வீடு வீடா போய் விலை பேசியதே, ‘யார் வீட்டுல ஆடு தாட்டியமா இருக்கு... யார் வீட்டுல பட்டி ஒதுக்குப்புறமா இருக்கு’ன்னு ஆடுகள ஆட்டையப் போட வெள்ளோட்டம் பார்க்கத்தான்.

அட்ராசிட்டி 2: இங்க கூலி வேலைக்குப் போய் பொழப்பு நடத்தும் அன்றாடங்காய்ச்சிகள் அதிகம். மிக்ஸி, கிரைண்டர், ஃபிரிட்ஜ்ன்னு எந்த வீட்டு உபயோகப் பொருள்களையும் பயன்படுத்தாத பாவப்பட்ட மக்கள். ‘இதையெல்லாம் வாங்க மாட்டோமா’ன்னு ஏங்கிக் கிடக்கறவங்க. இதைத் தெரிஞ்சுக்கிட்ட ஏமாற்றுப் பேர்வழிகள், ‘குட்டி யானை’ல பழைய பீரோக்களையும், இரண்டு ஃபேன்களையும் வெச்சுக்கிட்டு வந்து இறங்குவாங்க.

வாசலில் அந்நியர் ஜூனியர்: “ஆட்டைப் பாரு... ஆட்டையப் போடு!”

‘‘எங்க கம்பெனி, கரூர்ல இருக்கு. தவணை முறையில பொருள்கள் விற்கிறோம். உங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கிட்டு, வாராவாரம் பணம் கட்டுனா போதும்’ன்னு வலையை விரிப்பாங்க. ஏற்கெனவே கனவுல இருக்கும் மக்கள், அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்துடுவாங்க. ‘‘ஆளுக்கு 200 ரூபாய் கட்டி ரசீது வாங்கிக்குங்க. யார் யாருக்கு என்னென்ன பொருள் வேணும்னு சொன்னா, நாளைக்குக் கொண்டாந்து இறக்கிடுவோம்’’ன்னு சொல்வாங்க. அதை நம்பி ஆளாளுக்கு 200 ரூபாயை அழுவாங்க.

வாசலில் அந்நியர் ஜூனியர்: “ஆட்டைப் பாரு... ஆட்டையப் போடு!”

எத்தனை நாளானாலும் அந்த குரூப்பும் வராது; இவங்க கேட்ட பொருளும் வராது. ‘பணம் போச்சே’ன்னு துண்டைத் தலையில போட்டுட்டு, அடுத்த சோலிய பார்க்க போயிடுவாங்க மக்கள்!’’

- துரை.வேம்பையன்

கமென்ட் ஓவியங்கள்: ஸ்யாம்