ஆதார் கார்டு வாங்க ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. அதற்கென இருக்கும் பதிவு மையங்கள், சிறப்பு முகாம்களில் மட்டுமே பதிவுசெய்ய முடியும். இந்தச் சேவை முழுவதும் இலவசம். அடையாளச்சான்று மற்றும் முகவரிச்சான்று ஆகிய இரண்டு மட்டுமே ஆதார் கார்டு பெறுவதற்குப் போதுமானவை. 18 வகையான அடையாளச் சான்றுகள் மற்றும் 35 வகையான முகவரிச்சான்றுகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்படும். இத்துடன் நம்முடைய புகைப்படம், பத்து விரல் ரேகைகள் மற்றும் கருவிழி ஆகியவை பதிவு செய்யப்படும்.

பெயர், வயது, பிறந்த தேதி போன்ற விவரங்களுடன் நம்முடைய மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்களும் பதிவு செய்யப்படும். இந்த இரண்டு விஷயங்களும் கட்டாயம் இல்லைதான். ஆனால் கண்டிப் பாகப் பதிவு செய்துவிடுங்கள். காரணம், இன்டர்நெட் பேங்கிங், வருமானவரித் தாக்கல் உள்பட பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைந்திருப்பது அவசியம்.

பதிவுசெய்தபின், அதிகபட்சம் 90 நாள்களுக்குள் ஆதார் கார்டு கிடைத்துவிடும். இதுகுறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலமாகத் தெரிவிக்கப்படும். ஆதார் இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம். நமக்கான ஆதார் எண் ஒதுக்கப்பட்டபின்பு, நம்முடைய இ-ஆதார் கார்டை, அரசின் இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நிஜ ஆதார் கார்டுக்கு இருக்கும் அதே மதிப்பு, இந்த இ-ஆதாருக்கும் உண்டு.

அரசின் அதிகாரபூர்வமான ஆதார் ஆப் ‘mAadhaar’. இதை மொபைலில் டவுன்லோடு செய்து, ஆதார் கார்டைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் போதும். இதையே ஆதார் கார்டாகப் பயன்படுத்தமுடியும். ஒரு ஆப்-ல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கார்டுகளையும் சேமிக்க முடியும். ஆனால், மற்றவர்களின் ஆதாருக்கும் உங்களின் மொபைல் எண்ணையே தந்திருக்க வேண்டும்.

ஆதார் கார்டில் இருக்கும் முகவரியில் ஏதேனும் பிழை இருப்பின், அதனைச் சரி செய்வதற்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும். இதற்கு மின்னஞ்சல் அல்லது மொபைல் எண், ஆதார் கார்டுடன் இணைந்திருப்பது அவசியம்.
பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை மாற்ற வேண்டுமெனில் அருகில் இருக்கும் ஆதார் மையங்களுக்குத்தான் செல்ல வேண்டும். இதற்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கைரேகை மற்றும் கருவிழி போன்றவை பதிவு செய்யப்படாது. 5 வயது ஆன பின்பே, அவர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்படும். இதேபோல மாற்றுத் திறனாளிகளுக்கும் பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்வதிலிருந்து விதிவிலக்கு உண்டு.

ஆதார் தரும் வசதிகள்!

1. ஆதார் இணையதளத்துக்குச் சென்று, இ-ஆதாரை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை ஆன்லைன் தளங்களில் ஆவணமாகப் பயன்படுத்த முடியும்.

2. மத்திய அரசின் பீம் ஆப், UPI ஆப், ஆதார் பே உள்ளிட்ட வசதிகளில் ஆதார் எண் மூலமாகவே பணம் அனுப்பவும் பெறவும் முடியும்.

3. பான் எண், வங்கி எண் போலவே ஆதார் எண்ணும் மிக முக்கியமானது. எனவே, உங்கள் ஆதார் எண்ணை பொதுவெளியில் எங்கேயும் பகிர வேண்டாம்.

எந்தச் சேவைகளுக்கெல்லாம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?

1. நியாயவிலைக் கடை
2. வருமானவரி தாக்கல் செய்ய
3. LPG சிலிண்டர் மானியம் பெற
4. தொழிலாளர்களின் EPF கணக்கு
5. ஆதார் பே மூலம் பணம் பெறுவதற்கு
6. மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள்
7. வங்கிக்கணக்குகள் மற்றும் இன்ஷூரன்ஸ் பாலிசிகள்
8. செல்போன் எண்
9. ஓய்வூதியக் கணக்குகள்

ஆதார் தகவல்களை லாக் செய்ய...

ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் கையில் இருக்க வேண்டும். ஆதார் தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும் இணையதளம் இதுதான் https://uidai.gov.in. இந்த இணையதளத்தின் இடது மூலையில் நமக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்துகொள்ள முடியும்.

அதில் ஆங்கிலத்தில் ‘Lock/Unlock Biometric’ என்றும், தமிழில் ‘உடற்கூறு பதிவுகளை மூடுதல்-திறத்தல்’ என்றும் இருக்கும் ஆப்ஷனை க்ளிக் செய்தால் https://resident.uidai.net.in/biometric-lock என்ற தளத்துக்குச் செல்லும்.

அதன்பிறகு உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை முதல் பெட்டியில் தரவும். அதன் கீழே தெரியும் பெட்டியில், படத்தில் உங்களுக்குக் காண்பிக்கும் செக்யூரிட்டி கோட் தந்தால், நீங்கள் பதிந்திருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP எனப்படும் பாஸ்வேர்டு குறுந்தகவலாக அனுப்பப்படும். ஒருமுறை OTP-யை தந்து ‘Verify’ கொடுத்தால் நீங்கள் லாக் செய்யும் பக்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

அதன்பின் பயோமெட்ரிக் தகவல் ஆப்ஷனுக்கு அருகில் உள்ள கட்டத்தை க்ளிக் செய்து, Enable கொடுப்பதன் மூலம் உங்கள் தகவல்களை லாக் செய்துகொள்ளலாம். இதன்பின் உங்கள் தகவல்களை, உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் பாஸ்வேர்டு மூலமாக நீங்கள் மட்டும்தான் அணுக முடியும்.

மீண்டும் அன்லாக் செய்ய விரும்பினால், மேற்சொன்ன வழிமுறைகளின் படி உள்நுழைந்து அன்லாக் செய்து கொள்ள முடியும்.

கார்டு தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?

டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது டூப்ளிகேட் ஆதார் கார்டு வாங்குவது எளிமையான ஒன்றுதான்.

ஆதார் எண் அல்லது பதிவு எண் (Enrollment number) ஆகியவைதான் முக்கியம். அதனால், இப்போதே உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் எண்ணைப் பத்திரமாக எங்கேயாவது குறித்து வைத்துக்கொள்ளவும். ஒருவேளை ஆதார் எண் நினைவில் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆதார் வாங்குவதற்காகக் கொடுத்த மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தெரிந்தால் போதும். அவற்றை வைத்து ஆதார் எண்ணை மீட்டெடுக்கலாம்.

ஆதார் இணையதளத்துக்குச் செல்லுங்கள். (www.uidai.gov.in.) காணாமல் போன கார்டுக்குப் பதிலாக டூப்ளிகேட் பிரின்ட் எடுக்க நினைப்பவர்கள் ‘Retrieve Lost UID/EID’ என்ற லிங்க்கை க்ளிக் செய்யவும்.

அந்தப் பக்கத்தில் உங்களுக்கு வேண்டியது ஆதார் எண்ணா அல்லது பதிவு எண்ணா என்பதைக் குறிப்பிட வேண்டும். பின் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றைக் குறிப்பிடவும். ஆதார் வாங்கும்போது கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணைத்தான் இங்கேயும் குறிப்பிட வேண்டும். அந்த மொபைல் எண்ணுக்கு வரும் OTPஐ அடுத்த பகுதியில் குறிப்பிட வேண்டும்.

OTP-யை சரிபார்க்கும் சிஸ்டம், அந்த எண் சரியாக இருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணுக்கு ஆதார் எண் அல்லது பதிவு எண்ணை அனுப்பிவைக்கும். அந்த எண்ணை வைத்து இ-ஆதார் கார்டை பிரின்ட் எடுத்துக் கொள்ளலாம்.

ஆதாரை இணைக்க கடைசி தேதி:

அரசின் திட்ட மானியங்களைப் பெறவும், வங்கி எண்ணுடன் இணைக்கவும், பான் கார்டுடன் இணைக்கவும் டிசம்பர் 31, 2017 கடைசி தேதி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், மார்ச் 31, 2018 வரை அவகாசம் தரப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பான் கார்டுடன் இணைப்பதில் மட்டும் சாமர்த்தியமாக ஒரு நிபந்தனையை சேர்த்துள்ளனர். அதாவது, ஏற்கெனவே ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள்,
டிசம்பர் 31, 2017-க்குள் இணைத்துவிட வேண்டும். புதிதாக ஆதார் கார்டு வாங்குபவர்களுக்கு மட்டுமே மார்ச் 31, 2018 வரை அவகாசம்.

மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கக் கடைசி தேதி, பிப்ரவரி 6, 2018. இப்போது இதைச் செய்ய, அருகிலுள்ள மொபைல் ஷோரூம்களுக்குச் செல்ல வேண்டும். ஜனவரி முதல், வீட்டிலிருந்தபடியே OTP பெற்று இதைச் செய்துகொள்ள முடியும்.

- கார்க்கிபவா, ஞ.சுதாகர்
படம்: கே.ஜெரோம்
ஓவியங்கள்: பாலமுருகன், ரமணன்

ஆறு நிமிடங்களில் ஆதார்!

‘விண்ணப்பித்து பல மாதங்களாகியும் ஆதார் அட்டை கிடைக்கவில்லை’ என்பது பலரின் ஆதங்கம். ஆனால், பாவனா அதிர்ஷ்டசாலி. மகாராஷ்ட்ரா மாநிலம், ஒஸ்மானாபாத் நகரில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனையில் 2017, செப்டம்பர் மாதம் 24-ம் தேதி பகல் 12.03 மணிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பாவனா சந்தோஷ் ஜாதவ் எனப் பெற்றோர் பெயரிட்டனர். பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டைக்காக குழந்தையின் தந்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். சரியாக பிற்பகல் 12.09 மணிக்கு - அதாவது விண்ணப்பித்த ஆறாவது நிமிடத்தில், பாவனா சந்தோஷ் ஜாதவ் பெயரில் இந்தியக் குடிமகள் என்பதற்கு ஆதாரமான ஆதார் அட்டையும், பிறப்புச் சான்றிதழும் ஆன்லைன் மூலமாகக் கைக்கு வந்துவிட்டது. இவ்வளவு வேகமாக யாருக்கும் ஆதார் அட்டை கிடைத்ததில்லை.

- கார்க்கிபவா