Published:Updated:

ஆதார் ஜூனியர்: மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பது அவசியமா?

ஆதார் ஜூனியர்: மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பது அவசியமா?
பிரீமியம் ஸ்டோரி

‘2018 பிப்ரவரி 6-ம் தேதிக்குள் உங்கள் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைத்துவிடுங்கள். உங்கள் பெயரில் இருக்கும் சிம் கார்டை வேறொருவர் பயன்படுத்தாமல் இருக்க இது உதவும். இதைச் செய்வதற்கு உடனடியாக அருகிலுள்ள மொபைல் ஆபரேட்டர் ஸ்டோருக்குச் செல்லுங்கள்’ என்று தொடர்ந்து நம்மைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன செல்போன் நிறுவனங்கள்.

இதில் இருக்கும் ‘உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி’ என்பதுதான் இப்போது பிரச்னை ஆகியிருக்கிறது. உச்ச நீதிமன்றம் இப்படி ஓர் ஆணையை வெளியிட்டதா?

‘இல்லை’ என்பதுதான் உண்மை.

உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடக்கிறது. ‘ஒருவர் பெயரில் இருக்கும் சிம் கார்டை இன்னொருவர் பயன்படுத்துவதைத் தடுக்க  ஏதாவது பாதுகாப்பு வழிகள் இருக்கின்றனவா’ என உச்ச நீதிமன்றம் அரசைக் கேட்கிறது.

இதற்குப் பதிலளித்த அரசு, ‘‘ஒவ்வொரு மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியிருந்தால், வாடிக்கையாளரின் கைரேகை தேவைப்படும். எனவே, போலி ஆவணங்கள் மூலம் இன்னொருவர் பெயரில் சிம் கார்டை வாங்கவே முடியாது. ஏற்கெனவே இருக்கும் மொபைல் எண்களையும் இணைக்கச் சொன்னால், இப்போது சந்தையில் இருக்கும் போலி சிம்களும் முடக்கப்படும் வாய்ப்புண்டு’’ எனச் சொன்னது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆதார் ஜூனியர்: மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பது அவசியமா?

இதைக் கேட்ட உச்ச நீதிமன்றம் இதுபோன்ற பாதுகாப்பு வழிகள் ஏதாவது ஒன்றின் மூலம் ஓராண்டுக்குள் அனைத்து மொபைல் வாடிக்கையாளர்களையும் உறுதிசெய்யச் சொன்னது. அதைத்தான் ‘உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி’ எனச் சொல்லிக்கொண்டு ஆதாரை மொபைலுக்கு கட்டாயமாக்கியிருக்கி றார்கள்.

உச்ச நீதிமன்றம் பலமுறை ‘ஆதார் கட்டாயம் அல்ல’ என்றும் சொல்லியிருக்கிறது. மேலே சொன்ன வழக்கிலும், ‘ஆதார் மூலம்தான் இதைச் செய்ய வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை.

உச்ச நீதிமன்றம், தான் விசாரித்துவரும் ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும், இந்த வாரத்தில் அமைக்கப்படும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு மாற்ற உள்ளது. ஆதார் தொடர்பான இடைக்காலத் தடை உள்ளிட்ட எல்லா கோரிக்கைகளையும் இந்தப் புதிய பெஞ்ச்சே பரிசீலிக்கும். ‘தனிநபர் ரகசியங்களைப் பாதுகாப்பது ஒருவரின் அடிப்படை உரிமை’ எனச் சமீபத்தில்தான் உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்தது. ‘ஆதார் இணைப்பு அந்தரங்க பாதுகாப்பு உரிமைக்கு வேட்டு வைக்குமா’ என்ற சர்ச்சை, ஆதார் வழக்கு விசாரணையின்போது எழக்கூடும்.

  - கார்க்கிபவா