Published:Updated:

ஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்!

ஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்!

ஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்!

ஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்!

ஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்!

Published:Updated:
ஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்!
ஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்!

• திருப்பதி ஏழுமலையானை சிறப்பு தரிசன வழி மூலம் சென்று தரிசிக்க இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே முடியும் என அறிவிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதிலிருந்து, அறை முன்பதிவு, சிறப்புத் தரிசனம், அங்கப் பிரதட்சணம், லட்டு டோக்கன் எனப் பல சேவைகளுக்கு இனி ஆதார் அவசியம். வேறெந்தவொரு அடையாள அட்டை இருந்தாலும், ஆதார் என்பது கட்டாயமாக்கப்படும். இதன் வழியாகவே மொத்த தரிசனமும் மேற்கொள்ளப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், மொபைல் ஆப் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பித்தாலும், ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ஐ.ஐ.டி., என்.ஐ.டி உள்ளிட்ட இன்ஜினீயரிங் நிறுவனங்களில் சேர பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். 2018-ம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்கள் ஆதார் எண்ணைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். ஒருவேளை இப்போது அவர்களிடம் ஆதார் அட்டை இல்லையென்றால், உடனடியாக அதற்கு விண்ணப்பித்து, அப்போது தரப்படும் ஆதார் பதிவு எண்ணைக் (Enrollment number) குறிப்பிட வேண்டும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடை பெறுகிறது. தேர்வு ஹாலுக்கு வரும்போது ஆதார் அட்டையைக் கண்டிப்பாக எடுத்துவர வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்!

• டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கையின்போது ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆதார் அட்டை இல்லாத டனாஸ் என்ற 7 வயதுப் பெண் குழந்தையைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள மறுத்துத் திருப்பி அனுப்பிவிட்டனர். ஆதார் மையத்தில் பலமுறை முயன்றும் குழந்தையின் கைரேகை பதியவில்லை என்பதால்தான் ஆதார் அட்டை கிடைக்கவில்லை என்று அந்தப் பெண் குழந்தை யின் பெற்றோர் தெரிவித்தும், பள்ளியில் சேர்க்க மறுத்துள்ளனர்.

ஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்!
ஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்!

• ‘லவ் விவாஹ்’ என்ற மேட்ரிமோனி இணையதளம், ‘வரன் பார்க்கப் பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை அவசியம்’ என அறிவித்துள்ளது. ‘வெறுமனே மொபைல் நம்பரை வைத்துப் பதிவுசெய்தால் போதும்’ என்று விதி வைத்தால், நிறைய பேர் தங்களின் புகைப்படம், வருமானம் போன்ற தகவல்களைத் தவறாகத் தந்து போலியான புரொஃபைல்களை உருவாக்கி விடுகிறார்களாம். ‘‘இதனால் நிறைய பேர் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்கவே ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியுள்ளோம்’’ என்கிறது இந்த இணையதளம்.

ஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்!

• ரயில்வே ஊழியர்கள் பலரும் தாமதமாகப் பணிக்கு வருவதாகக் கவலைப்படுகிறது ரயில்வே அமைச்சகம். இதைத் தடுக்க அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம், ஆதார். கைரேகையைப் பதிவுசெய்யும் பயோமெட்ரிக் அட்டெண்டன்ஸை ஆதாரோடு இணைக்க உள்ளார்கள். முதல்கட்டமாக மண்டல அலுவலகங்கள், டிவிஷன் அலுவலகங்கள், ரயில்வே ஒர்க்‌ஷாப்களில் இவை பொருத்தப்படும். வரும் ஜனவரிக்குள் இந்தியா முழுக்க இந்த ஆதார் அட்டெண்டன்ஸ் வந்துவிடுமாம். ‘‘யார் யார் லேட்டாக வருகிறார்கள், யாரெல்லாம் வேலைக்கே வருவதில்லை என்பதெல்லாம் அதன்பின் தெரிந்துவிடும்’’ என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள். இதைப் பின்பற்ற  மத்திய அரசுத்துறைகள் பலவும் யோசித்து வருகின்றன.

ஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்!

• உத்தரப்பிரதேசத்தின் பல இடங்களில், இக்கட்டான நேரங்களில் ஆம்புலன்ஸ் சேவை நிராகரிக்கப்படுகிறது. இதைத் தடுக்கும் நோக்கத்தில், அந்த மாநில அரசு ஆதார் கார்டு மூலம் ஆம்புலன்ஸ் தேவையைப் பதிவுசெய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆம்புலன்ஸ் சேவை கேட்டு, குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும்போது, பதிவு செய்தவரோ அல்லது அவரின் உறவினரோ ஆதார் கார்டை அந்த டிரைவரிடம் காட்ட வேண்டும்.

ஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்!

• அரசு நிறுவனங்கள்தான் ஆதார் எண்ணைக் கேட்கின்றன என்றால், இப்போது பல தனியார் நிறுவனங்களும் ஆதாரைக் கட்டாயமாக்க முயற்சி செய்கின்றன. அமேசான் நிறுவனத்தில் ஏதாவது ஆர்டர் செய்து வாங்குகிறீர்கள் என்றால், இப்போது ஆதார் எண் கேட்கப்படு கிறது. ‘பேடிஎம்’ மொபைல் பணப் பரிவர்த்தனை ஆப் பயன்படுத்த ஆதார் எண் தேவை. வாடகை கார் சேவையை வழங்கும் ‘ஜூம்கார்’ நிறுவனமும் இப்போது ஆதார் எண் கேட்கிறது. ‘‘ஆதார் வைத்திருப்பவர்களை நம்பகமானவர்களாகக் கருத முடியும். அதனால்தான் கேட்கிறோம்’’ என்பது அந்த நிறுவனத்தின் வாதம்.

ஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்!

• ஹெச்.ஐ.வி நோய்த்தொற்று உள்ளவர்கள், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கங்கள் வழியாக தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி சிகிச்சை பெறுகிறவர்களிடம் ஆதார் தகவல்களைச் சேகரிக்குமாறு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இது பலரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. சிகிச்சை பெறும் பலர், தங்கள் வீட்டுக்கும் உறவுகளுக்கும் தெரியாமல் இங்கு வந்து மருந்துகளை வாங்குகிறார்கள். ‘ஆதார் விவரங்களைக் கொடுத்தால், அது எதிர்காலத்தில் அம்பலமாகிவிடுமோ’ என்ற பயம் இவர்களுக்கு இருக்கிறது. ‘‘இதனால் பலர் சிகிச்சைக்கு வருவதையே நிறுத்திவிட்டார்கள். இது எதிர்காலத்தில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்’’ என அச்சம் தெரிவிக்கின்றன தன்னார்வ நிறுவனங்கள். ஆனால், ‘‘நாங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி ஆதார் எண்களை வாங்கவில்லை’’ என மறுக்கிறது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்.

- கார்க்கிபவா, ஞா.சுதாகர், எஸ்.உமாபதி