மத்திய பி.ஜே.பி அரசின் முரட்டுப் பிடிவாதத்தை ஆதார் விஷயத்தில் முழுமையாகப் பார்க்க முடியும். ஆதார் அளவுக்கு எல்லா நீதிமன்றங்களிலும் வழக்குகளால் எதிர்க்கப்பட்ட திட்டம், சமீபகாலத்தில் வேறெதுவும் இல்லை. ஆனால், எல்லா வாதங்களையும் ஆக்ரோஷமாக எதிர்க்கிறது மத்திய அரசு. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆதார் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச்சிடம் மத்திய அரசு கொடுத்த புள்ளிவிவரங்கள் மலைக்க வைப்பதாக இருந்தன.

அவை இங்கே...

இதுவரை இந்தியா முழுக்க ஆதார் அட்டை வாங்கியவர்கள் எண்ணிக்கை 118.64 கோடி. இது இந்திய மக்கள் தொகையில் சுமார் 88 சதவிகிதம்.

அரசின் நலத்திட்டங்கள், இதர சேவைகள் போன்றவற்றைப் பெறுவதற் காகவும், தங்களது முகவரி மற்றும் புகைப்பட ஆதாரமாகக் காட்டவும், இதுவரை இந்திய மக்கள் 1,216 கோடியே 80 லட்சம் முறை ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஆதார் என்பது தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால், இவ்வளவு பேர் ஏன் பயன்படுத்துகிறார்கள்?

2017 அக்டோபர் 15 வரை, இந்தியா முழுக்க 54 கோடியே 25 லட்சம் வங்கிக்கணக்குகள் ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்டுவிட்டன. எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைய வசதியாக, ‘ஜன்தன் வங்கிக்கணக்குகள்’ தொடங்கப்பட்டன. இப்படிப் புதிதாகத் தொடங்கப்பட்ட 30 கோடியே 54 லட்சம் ஜன்தன் கணக்குகளில் 18 கோடியே 97 லட்சம் கணக்குகள், ஆதாரையே அடையாள அட்டையாகக் காட்டித் தொடங்கப்பட்டவை.

இந்தியாவின் மிகப்பெரிய சமூக நலத்திட்டம் என ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’ கருதப்படுகிறது. இந்தியா முழுக்க இந்தத் திட்டத்தால் பயன்பெறும் மக்கள் 10 கோடியே 93 லட்சம் பேர். இவர்களில் 9 கோடியே 54 லட்சம் பேர் இதுவரை தங்கள் வங்கிக்கணக்கைத் தொடங்கி, அதை ஆதார் எண்ணுடன் இணைத்து விட்டார்கள். இவர்களின் வேலைக்கான சம்பளம் இப்போது வங்கிக்கணக்கில்தான் செலுத்தப்படுகிறது. இடைத்தரகர்களால் ஏமாற்றப்படாமல் இப்போது முழு கூலியும் அவர்களைச் சென்றடைகிறது.

காஸ் சிலிண்டர் மானியம், மின் கட்டண மானியம், உர மானியம் போன்ற அரசின் பல திட்டங்களுக்கான மானியங்களை நேரடியாகப் பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் படிப்படியாக அமலுக்கு வந்துள்ளது. ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கே இப்படி நேரடியாக மானியம் செலுத்தப் படுகிறது. கடந்த 2014-15 நிதியாண்டு முதல் 2016-17 நிதியாண்டு வரை இப்படிச் செய்ததால் மட்டுமே 57,029 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகி இருக்கிறது.

பான் நம்பருடன் ஆதாரை இணைப்பதே, ஒரு நபருக்கு ஒரு பான் கார்டுக்கு மேல் இருக்கக்கூடாது என்ற நிலையைக் கொண்டு வருவதற்காகத்தான். நிறைய பேர், தங்கள் பெயரில் ஓரிரு எழுத்துகளை மட்டும் மாற்றி, வெவ்வேறு முகவரிகளைக் கொடுத்து, இரண்டு, மூன்று பான் கார்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு, வரியைக் கட்டாமல் ஏமாற்றிவந்தனர். பான் கார்டுகளை ஆதார் எண்ணோடு இணைப்பதைக் கட்டாயம் ஆக்கியபிறகு, இதுவரை 11 லட்சத்து 35 ஆயிரம் பான் கார்டுகள் போலி எனக் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. போலி பான் கார்டுகள்தான் வரி ஏய்ப்புக்காகப் போலி நிறுவனங்கள் தொடங்கவும், கறுப்புப்பணத்தை வெளிநாடுகளிலிருந்து மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவந்து வெள்ளை யாக்கவும் உதவுகின்றன. ஆதார் கட்டாயமானபிறகு, கறுப்புப்பணம் புழங்குவது குறைந்துள்ளது.

இந்தியா முழுக்க ஓய்வூதியம் பெறும் 2 கோடியே 83 லட்சம் பென்ஷனர்களில் 1 கோடியே 48 லட்சம் பேர், இதுவரை தங்கள் வங்கிக்கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டனர். ஆதார் அட்டையைத் தங்கள் புகைப்பட மற்றும் முகவரி அடையாளமாகப் பயன்படுத்தி இதுவரை 1 கோடியே 36 லட்சம் பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். ஆதாரைப் பயன்படுத்தி இதுவரை 50 கோடிப் பேர் சிம் கார்டு வாங்கியுள்ளனர்.

‘‘ டிரைவிங் லைசென்ஸ் மற்றும் பாஸ்போர்ட் பெறுவதற்கு கைரேகையைப் பதிவு செய்வது ஏற்கெனவே கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பத்திரப் பதிவுக்கும் கைரேகை பதிவு செய்யப்்படுகிறது. பயோமெட்ரிக் தகவல்கள் எடுப்பது புதிதல்ல. ஏன் ஆதாரை மட்டும் எதிர்க்கிறீர்கள்?’’ என்பதுதான் மத்திய அரசின் கேள்வி.

வேறு யாரும் ஆதார் ஆணையம்போல தனிமனிதர் களின் தகவல்களைச் சேமித்து வைப்பதில்லையே!

- எஸ்.உமாபதி

சஜிதா பேகம்களின் நிலை என்ன?

பெங்களூரில் இருக்கும் தொழுநோய் மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளாகத் தங்கி சிகிச்சை பெற்றுவருபவர் சஜிதா பேகம். 65 வயதான இவருக்கு மாதந்தோறும் கிடைக்கும் 1000 ரூபாய் ஓய்வூதியம்தான் ஒரே வருமானம். ஆனால், இதுவும் கடந்த நான்கு மாதங்களாக இவருக்கு வரவில்லை. காரணம், ஆதார். தொழுநோயால் கைகள் முடமான சஜிதாவிடம் கைரேகைப் பதிவு எடுக்க முடியாது. இதனால் ஆதார் அட்டை எடுக்கமுடியாமல் தவித்திருக்கிறார் அவர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 10 பேருக்கு இதே பிரச்னை. இதுகுறித்து மருத்துவர்கள், ஆதார் ஆணைய அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.

ஓய்வூதியமும் நிறுத்தப்பட்ட விஷயம் ஊடகங்களில் வெளியானதும் விழித்திருக்கிறது ஆதார் ஆணையம். பின்னர் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், கருவிழி மற்றும் கைரேகைகளைப் பதிவு செய்வதிலிருந்து இவருக்கு விலக்கு அளித்திருக்கிறார்கள். சஜிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் சான்றிதழைப் பெற்று, ஆதார் வழங்குவதற்காகப் பதிவு செய்தார்கள். இதைத் தொடர்ந்து அக்டோபர் மாத ஓய்வூதியமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கான தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

‘‘கருவிழி மற்றும் விரல்ரேகைகள் இல்லாவிட்டாலும் ஆதாரைப் பதிவு செய்யமுடியும். அதன்படிதான் சஜிதாவுக்கு ஆதார் அட்டை வழங்க உள்ளோம்’’ என்கின்றனர் அதிகாரிகள். ஆனால், இங்கே நாம் யோசிக்கவேண்டிய விஷயம், இன்னும் செய்திகளில் வராத சஜிதா பேகம்களின் நிலையைப் பற்றித்தான்.

- ஞா.சுதாகர்