Published:Updated:

ஆதார் ஜூனியர்: ஊர்ல எல்லோருக்கும் ஒரே பர்த் டே!

ஆதார் ஜூனியர்: ஊர்ல எல்லோருக்கும் ஒரே பர்த் டே!
பிரீமியம் ஸ்டோரி
ஆதார் ஜூனியர்: ஊர்ல எல்லோருக்கும் ஒரே பர்த் டே!

ஆதார் ஜூனியர்: ஊர்ல எல்லோருக்கும் ஒரே பர்த் டே!

ஆதார் ஜூனியர்: ஊர்ல எல்லோருக்கும் ஒரே பர்த் டே!

ஆதார் ஜூனியர்: ஊர்ல எல்லோருக்கும் ஒரே பர்த் டே!

Published:Updated:
ஆதார் ஜூனியர்: ஊர்ல எல்லோருக்கும் ஒரே பர்த் டே!
பிரீமியம் ஸ்டோரி
ஆதார் ஜூனியர்: ஊர்ல எல்லோருக்கும் ஒரே பர்த் டே!

ல லட்சம் பேர் ஆதார் கார்டு வாங்க முடியாமல், ரேஷன் கார்டு வாங்க முடியாமல், ரேஷன் கார்டோடு ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். சில மாநிலங்கள் இப்போதே ஆதாரை இணைக்காத ரேஷன் கார்டுகளுக்குப் பொருள்கள் தருவதை நிறுத்திவிட்டன. இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 11 வயது சிறுமி ஒருவர், பட்டினியால் செத்தே போனார். எதிர்காலத்தில் இந்த அவலம் இந்தியா முழுக்கத் தொடராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஆதார் ஜூனியர்: ஊர்ல எல்லோருக்கும் ஒரே பர்த் டே!

ஆனால், பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு விநோதம் நிகழ்ந்தது. நவம்பர் 28-ம் தேதி ஷேக் அப்துல் நயீம் என்பவரைத் தேசியப் புலனாய்வு அமைப்பு வாரணாசியில் கைது செய்தது. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி எனச் சொல்லப்படும் இவரை விசாரித்தபோது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. 37 வயதாகும் நயீம், மகாராஷ்ட்ரா மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர். போலீஸ் இங்கு அவரைத் தேடியதால், தலைமறைவாகி பீகார் சென்றார். தன் பெயரை சுஹைல் கான் என மாற்றிக்கொண்டு, பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் தங்கினார். இந்தப் பெயரில் ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் என எல்லாமே வாங்கிவிட்டார். உள்ளூர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எம்.ஏ படித்து பட்டமும் பெற்றிருக்கிறார். அங்கே ஏதாவது தேர்தலில் நின்று அமைச்சராகாதது மட்டும்தான் பாக்கி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆதார் ஜூனியர்: ஊர்ல எல்லோருக்கும் ஒரே பர்த் டே!

‘இந்தியாவைப் பீடித்திருக்கும் சமூக நோய்களுக்கு சர்வரோக நிவாரணி’ என மத்திய அரசு உயர்த்திப் பிடிக்கும் ஆதார் விவகாரத்தில் அத்தனை குளறுபடிகளும் நிகழ்ந்தன. ஆதார் அட்டை கொடுத்தபிறகு பலரின் பிறந்த தேதியே மாறிவிட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் அருகிலிருக்கும் கைண்டி காடா என்ற கிராமத்தில் உள்ள 800 குடும்பத்தினருக்கும் பிறந்த தேதி ஜனவரி 1 என்று குறிப்பிட்டே ஆதார் அட்டைகள் வந்துள்ளன. பிறந்த ஆண்டை மட்டும் கொஞ்சம் முன்னே பின்னே மாற்றியிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் மூன்று கிராமங்களிலும், அலகாபாத் அருகேயுள்ள கஞ்சாஸா கிராமத்திலும் எல்லோருக்கும் இதே ‘ஜனவரி 1’ பிரச்னை. அத்தனை பேரும் அட்டையை எடுத்துக்கொண்டு, பிறந்த தேதியை மாற்ற அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

நிறைய இடங்களில் ஆதார் சேவை மையங்கள் தனியாருக்குத் தரப்பட்டுள்ளன. இவர்கள் செய்யும் குளறுபடிகளுக்கு அளவே இல்லை. ஒருவர் தனது செல்ல நாய்க்குட்டி பெயரில் ஆதார் அட்டை வாங்கினார்; இன்னொருவர் கடவுள் அனுமன் புகைப்படத்தைப் போட்டு அவருக்கே ஆதார் அளித்தார். முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மகேந்திரசிங் டோனி வீட்டுக்குப் போன ஆதார் பணியாளர், டோனியின் எல்லா விவரங்களையும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து திடுக்கிட வைத்தார். ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 மையங்களையாவது பிளாக் லிஸ்ட்டில் சேர்த்து ரத்து செய்கிறது ஆதார் ஆணையம். 

கடந்த ஜூன் மாதம் டெல்லி போலீஸ், மோகித் குமார், சையத் சதாம் ஹுசேன் ஆகிய இருவரைக் கைது செய்தது. டெல்லியின் மங்கள்புரியில் ஆபீஸ் போட்டிருந்த இவர்கள், 200 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை வாங்கிக்கொண்டு பலருக்கும் ஆதார் கார்டு கொடுத்துக்கொண்டிருந்தனர். ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் என எந்த ஆதாரமும் இன்றி  காசு கொடுத்தால் கார்டு கிடைக்கும். ஆனால், இவர்கள் கொடுத்தது டூப்ளிகேட் ஆதார் கார்டு. ஒரிஜினல் கார்டுக்கும், இவர்கள் கொடுத்த டூப்ளிகேட் கார்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஆதார் ஜூனியர்: ஊர்ல எல்லோருக்கும் ஒரே பர்த் டே!

தீவிரவாதிக்கு மட்டுமில்லை... பாகிஸ்தான் அதிகாரிக்கே ஆதார் அட்டை கொடுத்த பெருமையும் நமக்கு உண்டு. கடந்த ஆண்டு டெல்லியில் உளவு பார்க்க முயன்றதாக, மெஹ்மூத் அக்தர் என்பவர் டெல்லி போலீஸால் சுற்றி வளைக்கப்பட்டார். அவரிடம் இந்திய ராணுவ நடமாட்டம் மற்றும் துணை ராணுவப் படைப்பிரிவுகளின் பலம் தொடர்பான பல ஆவணங்கள் இருந்தன. அவர், டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தில் விசா விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் அதிகாரி என்பது பிறகுதான் தெரியவந்தது. தூதரக அதிகாரிகளைக் கைது செய்ய முடியாது. எனவே, விசாரணைக்குப் பிறகு அவரை விடுவித்துவிட்டார்கள். அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும்படி மத்திய அரசு சொல்லிவிட்டது.

வேடிக்கை என்னவென்றால், போலீஸ் சுற்றி வளைத்ததும் அவர் முதலில் தனது ஆதார் அட்டையைக் காட்டினார். அதில் அவர் பெயர், மெஹ்பூப் ராஜ்புத் என்று இருந்தது. சாந்தினி சௌக் பகுதியில் ஒரு முகவரியும் இருந்தது. ஆனால், அது போலி முகவரி. யாரோ ஒரு ஏஜென்ட்டிடம் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை மட்டுமே கொடுத்து, அவர் பக்காவான ஆதார் அட்டை பெற்றிருக்கிறார்.

இப்படி இன்னும் எத்தனை பேரோ!

- அகஸ்டஸ்