பொதுவாக அரசு அலுவலகங்களுக்கும் நகைச்சுவைக்கும் ரொம்ப தூரம். ஆனால் இந்த விஷயத்தில் ஆதார் ஆணையம் வித்தியாசமாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் காமெடியாக எழும் விவாதங்களுக்கு அதே உணர்வோடு பதில்கள் வருகின்றன ஆதார் ஆணையத்திடமிருந்து!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவான்கா சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகத் தொழில்முனைவோர் மாநாட்டைத் தொடங்கி வைக்க அவர் வந்திருந்தார்.

அமெரிக்க காமெடி நடிகர் ஜோஸ் கோவாகோ, ட்விட்டரில் பிரபலங்களைக் கலாய்ப்பதை பார்ட் டைம் பொழுதுபோக்காகச் செய்து வருகிறார். அவர் இவான்காவின் இந்தியப் பயணத்தைக் கிண்டல் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். ‘ஆதார் கார்டு வாங்கத்தான் இவான்கா இந்தியா போனார்’ என ட்வீட் செய்த ஜோஸ், ஹைதராபாத்தில் எடுத்த வீடியோவையும் இணைத்திருந்தார். அதில் இவான்கா குரலை மட்டும் மாற்றி, ‘‘பக்கத்துல ஆதார் மையம் எங்கே இருக்கு?’’ என டிரைவரிடம் கேட்பதுபோல காமெடி செய்திருந்தார்.

இது ட்விட்டரில் செம வைரல். ஆதார் ஆணையத்தின் ட்விட்டர் ஐ.டி-யிலிருந்து இதற்கு உடனே கமென்ட் வந்தது. ‘அவர் இந்தியாவில் வசிக்கவில்லை என்பதால், ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது’ என்றது அந்த கமென்ட்.

விஷயம் இத்தோடு முடியவில்லை. ‘இவான்கா இந்தியாவில் 182 நாள்கள் தங்கியிருந்தால், ஆதாருக்கு விண்ணப்பிக்கலாம்தானே?’ என ஒருவர் கேட்டிருந்தார். ‘வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், கடந்த ஓராண்டில் அதிகபட்சமாக 182 நாள்கள் இந்தியாவில் தங்கியிருந்தால், அவர்கள் ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்கலாம்’ என விதி உள்ளது. இதைச் சுட்டிக்காட்டிய ஆதார் ஆணையம், ‘இந்த விதி வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தும்’ என்றது.

ஆதார் ஆணையம் இப்படிப் பதிலடி கொடுப்பது இது முதல் முறையல்ல. தசரா நேரத்தில் ராவணன் படத்தை வைத்து, ‘ஆதாரின் 10 நன்மைகள்’ எனப் பட்டியலிட்டு, ‘தசரா வாழ்த்து’ வெளியிட்டிருந்தது ஆதார் ஆணையம். குறும்புக்காரர் ஒருவர், ‘10 தலை ராவணனுக்கு எத்தனை ஆதார் கார்டு கொடுப்பீர்கள்... குறைந்தபட்சம் 100?’ என்று கேட்டிருந்தார். சில நிமிடங்களில் ஆதார் ஆணையத்திடமிருந்து பதில் வந்தது... ‘அவர் இந்தியாவில் வசிக்கவில்லை. எனவே, ஆதாருக்கு விண்ணப்பிக்க முடியாது!’

- அகஸ்டஸ்
கமென்ட் ஓவியங்கள்: ஸ்யாம்