Published:Updated:

விஷாலைக் காலி செய்த பூபதி..!

விஷாலைக் காலி செய்த பூபதி..!
பிரீமியம் ஸ்டோரி
விஷாலைக் காலி செய்த பூபதி..!

விஷாலைக் காலி செய்த பூபதி..!

விஷாலைக் காலி செய்த பூபதி..!

விஷாலைக் காலி செய்த பூபதி..!

Published:Updated:
விஷாலைக் காலி செய்த பூபதி..!
பிரீமியம் ஸ்டோரி
விஷாலைக் காலி செய்த பூபதி..!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பரபரப்பில் புதிதாக ஒட்டிக்கொண்டுள்ளது, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ் பூபதி விவகாரம். நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டபோது, தண்டையார் பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்துக்குச் சென்று அதிகாரிகளிடம் விஷால் முறையிட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், அப்போதைய ஆர்.கே. நகர் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியோடு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ் பூபதி அமர்ந்துள்ளார். அவரை வட்டமிட்டுக் காட்டி,  ‘ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான இந்த பூபதிதான், விஷால் வேட்புமனுவில் கையெழுத்திட்ட 10 நபர்களின் பெயர்களை ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனனிடம் கொடுத்து, அந்த நபர்களை மிரட்ட உதவினார்’ என்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவிவருகிறது. இந்தச் சூழலில், யார் அந்த பூபதி என்ற விசாரணையில்  இறங்கினோம்.

விஷாலைக் காலி செய்த பூபதி..!

பூபதி என்ற நாகராஜ் பூபதி!

தேனி மாவட்டம் ஆத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கொத்தாளமுத்து. இவர், தீவிர அ.தி.மு.க விசுவாசி. ஊரில் செல்வாக்கானவரான இவர், தன்னைப்போலவே, தனது கிராமத்தையும் அ.தி.மு.க-வின் வசம் ஒப்படைத்துவிட்டார். அதனால், தேனி மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில், இவருக்கு நல்ல பெயர். இவரின் மகன்தான் பூபதி என்ற நாகராஜ் பூபதி. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்துவிட்டு, வேலை தேடி சிங்கப்பூர் சென்றார். அங்கே நான்கு வருடங்கள் வேலைபார்த்துவிட்டு ஊருக்கு வந்த பூபதிக்கு, மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்ல விருப்பமில்லை. அதனால், தனது தோட்டத்திலேயே வேலைசெய்யுமாறு கொத்தாளமுத்து மகனிடம் சொன்னார். முதலில் மறுத்த பூபதி, பின்னர் காய்கறிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டார்.  சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு முருங்கைக்காய்களை அனுப்பி, பெரும் சம்பாத்தியம் ஈட்டினார். தன் அப்பாவுடன் சேர்ந்து கட்சிப்பணிகளுக்கும் செல்ல ஆரம்பித்தார் பூபதி. அப்போது, அவருக்கு கரை வேட்டி மீது ஆசை வந்துள்ளது. ‘இந்தக் கட்சி, கரைவேட்டி எல்லாம் என்னோடு போகட்டும்…’ என்று சொல்லி பூபதியைக் கொத்தாளமுத்து கண்டித்தார்.

பூபதியை இணைத்த பன்னீர்!


போடி தே.மு.தி.க பிரமுகரான (இப்போது தி.மு.க.) முரசு பாலு, தன் மகனுக்கு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பதவியை வாங்க முயற்சி செய்துள்ளார். அதைத் தெரிந்துகொண்ட கொத்தாளமுத்து, அந்தப் பதவி பற்றியும், அதற்குக் கிடைக்கும் சம்பளம் பற்றியும் விசாரித்தார். ‘அந்த வேலையைத் தன் மகனுக்கு வாங்கிக்கொடுத்தால் என்ன’ என்று நினைத்தார். தனது எண்ணத்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் சொன்னார். கட்சியின் தீவிர விசுவாசியின் மகன் என்பதால் மறுக்க முடியாத சூழலில், ஏற்கெனவே பதவி கேட்ட கட்சி நிர்வாகிகளின் உறவினர்கள் பெயர்களுடன் பூபதியின் பெயரையும் இணைத்துக் கொண்டார் பன்னீர்செல்வம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விஷாலைக் காலி செய்த பூபதி..!

தற்போதைய தேனி நகரச் செயலாளர் முருகேசனின் மகன் மற்றும் அப்போதைய மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த முத்துராமலிங்கம் மகள் உள்பட 43 பேருக்கு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பதவி 2013-ல் கொடுக்கப்பட்டது. அவர்களில், பூபதியும் ஒருவர். சொந்த மாவட்டமான தேனியிலேயே பூபதிக்கு வேலை. ஓ.பன்னீர்செல்வத்தின் மருமகளும், பூபதியின் மனைவியும் சகோதரி முறை என்பதால், பன்னீர்செல்வத்துடன் பூபதி அதிகம் நெருங்கினார். விளைவு, அரசு விழாக்கள் களைகட்டின. பன்னீர்செல்வத்திடம் தொடர் பாராட்டுகளை வாங்கிக்குவித்தார் பூபதி. கூடவே, பத்திரிகையாளர்களுடன் உரசலும் ஏற்பட்டது. அந்த உரசல், 2016 சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பெரிதானது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பத்திரிகையாளர்களைச் செய்தி சேகரிக்கவிடாமல் தடுத்து, அவர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார் பூபதி. அதைக் கண்டித்து, வாக்கு எண்ணிக்கை மையத்தின் வாயிலில் தர்ணா போராட்டத்தில் பத்திரிகையாளர்கள் ஈடுபட்டனர். உடனே, 13 பத்திரிகையாளர்கள்மீது போலீஸில் பூபதி புகார் கொடுத்தார். பின்னர், அது வாபஸ் பெறப்பட்டது. பூபதியின் போக்கு, பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல், மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் உள்பட பல அரசு அதிகாரிகளுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. எவ்வளவு வேகத்தில் பன்னீர்செல்வத்தின் ‘ஆஸ்தான அதிகாரி’ என்று பெயரெடுத்தாரோ, அதே வேகத்தில் பூபதி கீழிறக்கப்பட்டார்.

உதவிய தங்க தமிழ்ச்செல்வன்!

வேறு இடத்துக்கு மாறுதல் வாங்கலாம் என்று நினைத்த பூபதி, பன்னீர்செல்வத்தைச் சந்தித்து சென்னைக்கு பணிமாறுதல் கேட்டிருக்கிறார். ‘பார்க்கலாம்…’ என்று ஒற்றை வரியில் பன்னீர் முடித்துக்கொண்டார். எனவே, தங்க தமிழ்ச்செல்வனின் உதவியுடன், 2016 ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்குப் பணி மாறுதல் வாங்கினார். இப்போது மீண்டும் தேனிக்கு வர அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறார் பூபதி. இந்தச் சூழலில்தான், சென்னை தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் பூபதி காட்சி அளித்தார்.

‘‘நீங்கள்தான் விஷால் வேட்புமனுவில் இருந்த 10 நபர்களின் பெயர்களை மதுசூதனன் தரப்புக்குக் கொடுத்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்படுகிறதே?’’ என்று பூபதியைத் தொடர்புகொண்டு கேட்டோம். ‘‘இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். ஒன்று, நான் ஏன் அந்த அலுவலகத்தில் இருந்தேன் என்று கேள்வி எழுப்பு கிறார்கள். மாநிலத்தின் மற்ற மாவட்டங்களைப் போல, சென்னை இல்லை. இங்கு, மாநகராட்சிதான் தேர்தலுக்கான பொறுப்பு. எனவே, சென்னை மாநகராட்சியின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் என்ற முறையில், தேர்தல் தொடர்பான செய்திகளைப் பத்திரிகையாளர்களுக்கு நான்தான் தெரியப்படுத்த வேண்டும். எனவேதான், அங்கு சென்றிருந்தேன். அடுத்ததாக, விஷாலின் வேட்புமனுவில் இருந்த பெயர்களை நான் வெளியிட்டேன் என்று சொல்கிறார்கள். விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்குப் பல மணி நேரத்துக்குப் பிறகுதான், நான் அங்கே சென்றேன். அப்போது, விஷால் அலுவலகம் வந்திருந்தார். அதனால், அங்கே நான் இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதைப் படம் பிடித்து வாட்ஸ்அப்பில் பரப்பிவருகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது?” என்ற பூபதியிடம், ‘‘பன்னீர்செல்வத்தின் ஆதரவில்தான் நீங்கள் பதவி வாங்கினீர்கள் என்று சொல்கிறார்களே?’ என்று நாம் கேட்டோம். “அரசு சாராத நபர்கள் யாராவது இருக்கிறார்களா? நீங்கள்தான் சொல்லுங்களேன்” என்று சொல்லி முடித்துக்கொண்டார் பூபதி.

விஷாலைக் காலி செய்த பூபதி..!

ஆளுங்கட்சிதான் காரணம்!

“உங்கள் வேட்புமனு நிராகரிக்கப்பட, பூபதிதான் காரணம் என்று நினைக்கிறீர்களா?” என்று விஷாலிடம் கேட்டோம். “நான் ஏற்கெனவே சொன்னதுபோல, அனைத்துக்கும் ஆளுங்கட்சிதான் காரணம். அவர்களின் சதியில்தான் எல்லாமே நடந்திருக்கிறது. அப்படியிருக்க, இது மட்டும் எப்படி நடக்காமல் இருந்திருக்கும். இதற்கு மேல் நான் என்ன சொல்ல?” என்றார்.

“ஏ.பி.ஆர்.ஓ பூபதிக்கு அங்கே என்ன வேலை? அதுவும் தேர்தல் அதிகாரிகளுக்குச் சமமாக உட்கார்ந்து, விஷால் வேட்புமனு தொடர்பான விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான கார்த்திகேயனிடம் கேட்டோம். “பூபதி, மாநகராட்சியின் ‘செய்தி ஏ.பி.ஆர்.ஓ’. செய்தி சேகரிக்கவே அங்கே சென்றிருக்கிறார். சமூக வலைதளங்களில் பரவுவது போல, அவர்தான் வேட்பு மனுவில் இருக்கும் பெயர்களை மதுசூதனன் தரப்புக்குக் கொடுத்தார் என்று சொல்வதை நான் நம்பவில்லை. யாராவது புகார் கொடுத்தால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்த தயாராக இருக்கிறேன்” என்றார்.

விஷாலைக் காலி செய்த பூபதி..!

ஏ.பி.ஆர்.ஓ பதவி சர்ச்சை!

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்துக்குள் சென்ற விஷால், அதிகாரிகளிடம் முறையிடுகிறார். அங்கே, அதிகாரிகளுடன் பூபதி அமர்ந்திருக்கிறார். சேகரிக்க வேண்டிய செய்திகள் ஏராளமாக இருந்தாலும், விஷால் தரப்பிலான முறையீடுகளை யாருக்குச் செய்தியாகக் கொடுக்க பூபதி அங்கே உட்கார்ந்திருந்தார் என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கிறது.

அரசின் அனைத்துத் துறைகளுக்கும் போட்டித் தேர்வுகள் மூலமே ஊழியர்கள் நியமிக்கப்படும் சூழலில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறைக்கு மட்டும் ஆட்சியில் இருப்பவர்களின் ஆஸ்தான உறவுகள், எந்தவித நிபந்தனையும் இல்லாமல், முதல்வரால் நேரடியாக நியமிக்கப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணம்? ஒரு கட்சி, மக்கள் மன்றத்தில் தன்னை நிரூபித்து ஆட்சிபீடத்துக்கு வரும்போது, அந்த அரசாங்கத்தில் கட்சி சார்பு இருக்கக்கூடாது என்ற நிலை எப்போது உருவாகும்? செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறைக்கு மட்டும் அப்படி என்ன விதிவிலக்கு? ஆளுங்கட்சியின் திட்டங்களையும், பணிகளையும் மக்களுக்குக் கொண்டு சேர்க்கவே கட்சி சார்பு நபர்கள் அதிகாரிகளாக ஆக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், ஆளுங்கட்சி தனது அதிகாரத்தை இழக்கும்போது, அவர்களால் அவர்களுக்காக நியமிக்கப்பட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களும் தங்கள் அதிகாரப் பதவிகளை விட்டு வெளியேறுவதுதானே சரியாக இருக்கும்?!

- எம்.கணேஷ்
ஓவியம்:  பாலமுருகன்