‘‘பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபிறகு, நீதித்துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்துவருகிறது’’ என்று அதிரவைத்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன். மதுரையில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கருத்தரங்கில் பேசிய அரிபரந்தாமன் நீதித்துறையின் இன்றைய நிலை குறித்து பல கருத்துகளைக் குறிப்பிட்டார்.

‘‘உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் எப்போதும் இல்லாத அளவுக்கு நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபின்புதான், இவ்வளவு காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியிலும் காலியிடங்கள் இருந்தன. ஆனால், இந்த அளவுக்கு இல்லை. நீதிபதிகளை நியமிக்கும் உரிமை யாருக்கு என்பதில், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் உரசல் உள்ளது. முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தாக்கூர், ‘மத்திய அரசு, நீதிபதிகளை நியமிக்காமல் புறக்கணிக்கிறது’ என்று ஒரு நிகழ்ச்சியில் வாய் விட்டு அழுதேவிட்டார்.

சட்ட நாள் விழாவில் கலந்துகொள்ளும் பிரதமரோ, அமைச்சர்களோ, ‘மக்களுக்கு நீதியை விரைவாக வழங்க வேண்டும், நீதித்துறைக்கு அரசு ஒத்துழைப்புக் கொடுக்கும்’ என்றுதான் பொதுவாகப் பேசுவார்கள். ஆனால், சமீபத்தில் சட்ட நாள் விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ‘‘பொதுநல வழக்குகள் மூலம் அரசை மறைமுகமாக நீதித்துறை ஆள வேண்டும் என நினைக்காதீர்கள்’’ என்றார்.

ஒடிசாவில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர், ‘சாதகமாகத் தீர்ப்பு வாங்கித் தருவதாகக்கூறி பணம் பெற்றார்’ என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்த நீதிபதி நல்லவரா, கெட்டவரா என்ற கேள்விக்குள் நான் போகவில்லை. ஆனால், ‘ஒரு எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் ஒரு நீதிபதி கைது செய்யப்படுகிறார் என்றால், அதைத் தனி அமைப்பு மூலம் விசாரிக்க வேண்டாமா? இனி, எந்தவொரு நீதிபதியும் எஃப்.ஐ.ஆர் மூலம் பணிய வைக்கப்படும் சூழல் ஏற்படலாம்.

முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் திடீரென வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். சொரபுதீன் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி வெளியூர் சென்றபோது மர்மமான முறையில் இறந்து போனதாகவும், அதில் சந்தேகம் உள்ளதாகவும் அவருடைய குடும்பத்தினர் கூறிய புகார் குறித்த செய்தி ஊடகங்களில் வெளிவந்தது.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வெறுப்பு அரசியல் பேசிய வழக்கில், ‘இந்த வழக்கு விசாரணையை ஊடகங்கள் வெளியிடக்கூடாது’ என்று ஊடகத்தினர் எச்சரிக்கப்படுகிறார்கள். இதையெல்லாம் எதிர்கொள்ள, அனைத்து மக்கள் உரிமை அமைப்புகளும் ஒன்றாக இணைய வேண்டும்’’ என்றார் அரிபரந்தாமன்.

- செ.சல்மான்
படம்: ஈ.ஜெ.நந்தகுமார்