Published:Updated:

பெரியவரும் ரமேஷும் - சேகர் ரெட்டி டைரி ரகசியம்

பெரியவரும் ரமேஷும் - சேகர் ரெட்டி  டைரி  ரகசியம்
பிரீமியம் ஸ்டோரி
பெரியவரும் ரமேஷும் - சேகர் ரெட்டி டைரி ரகசியம்

பெரியவரும் ரமேஷும் - சேகர் ரெட்டி டைரி ரகசியம்

பெரியவரும் ரமேஷும் - சேகர் ரெட்டி டைரி ரகசியம்

பெரியவரும் ரமேஷும் - சேகர் ரெட்டி டைரி ரகசியம்

Published:Updated:
பெரியவரும் ரமேஷும் - சேகர் ரெட்டி  டைரி  ரகசியம்
பிரீமியம் ஸ்டோரி
பெரியவரும் ரமேஷும் - சேகர் ரெட்டி டைரி ரகசியம்

த்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து நடந்த வருமான வரிச் சோதனையின் வெளிப்பாடாக, தமிழகம் முழுக்க அறியப்பட்டவர் சேகர் ரெட்டி. ‘யார் இந்த சேகர் ரெட்டி’ என்ற கேள்விக்கான பதில் யாவரும் அறிந்ததே. சேகர் ரெட்டியின் டைரி, சமீபத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இரட்டை இலையை மீட்ட மகிழ்ச்சியில் இருந்த ஆளும் தரப்புக்கு அடுத்த தலைவலியாக அமைந்தது அந்த டைரி விவகாரம்.

அந்த டைரியில் 24.08.2016 என்று தேதி குறிப்பிட்டிருக்கும் பக்கத்தில், யார் யாருக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் தெளிவாக எழுதப்பட்டிருக் கிறது. அதில், 31.8.2016 தேதி குறிப்பிட்டு ’பெரியவர்/ரமேஷ் – 3,50,00,000’ என்று எழுதப்பட்டிருக்கிறது. யார் அந்தப் பெரியவர்?

பெரியவரும் ரமேஷும் - சேகர் ரெட்டி  டைரி  ரகசியம்

பெரியவர் என்ற பன்னீர்செல்வம்...

ஆட்சி அதிகாரத்தின் தயவால் லாபம் பார்க்கும் பெரிய கான்ட்ராக்டர்கள் மத்தியில் பிரபலமான பெயர், ‘பெரியவர்’. அந்தப் பெரியவர் சாட்சாத் ஓ.பன்னீர்செல்வம்தான்! ‘யாராலும் முடிக்கமுடியாத காரியமும், பெரியவரால் முடியும்’ என்பது கான்ட்ராக்டர்களின் கமுக்கமான டயலாக். அதன்படி, சரியாகச் செய்துகொடுப்பாராம் பன்னீர்செல்வம். பெரிய அளவிலான கான்ட்ராக்ட்களை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் கொண்டுசேர்த்து அனுமதி வாங்க வேண்டும்; அதில் எந்தச் சொதப்பலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, கான்ட்ராக்டர்கள் முதலில் சந்திப்பது பெரியவரைத்தான். அவர் மூலமாக, சசிகலா குடும்பத்துக்கு விஷயம் செல்லும். பின் கான்ட்ராக்ட்கள் முடிவாகும். பெரியவரைச் சந்திப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு, பெரியவரின் உதவியாளர் ரமேஷைத் தொடர்புகொள்ள வேண்டும்.

யார் இந்த ரமேஷ்?

தேனி மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தர்மபுரியைச் சேர்ந்தவர் ரமேஷ். பன்னீர் செல்வத்துக்கு அக்கா மகன் உறவு. பி.காம் முடித்துவிட்டு வேலை எதுவும் அமையாமல், ஊரில் இருந்தார். சில நாள்கள் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டும், தோட்ட வேலைகள் செய்துகொண்டும் இருந்தார். வெளிநாடு சென்று வேலையில் சேரலாம் என்று நினைத்தபோதுதான், பன்னீர்செல்வத்துக்கு உதவியாளராகச் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. முதலில் அதை விருப்ப மில்லாமல் ஏற்றுக்கொண்டார் ரமேஷ். ‘நம்ம அக்கா மகன்தானே’ என்ற பாசத்தில் தன்னுடன் சேர்த்துக்கொண்டார் பன்னீர்செல்வம்.

ஜெய்லானி, மதன் என இரு உதவியாளர்கள் ஏற்கெனவே இருந்தபோதும், ரமேஷின் வேகம் பன்னீருக்குப் பிடித்துப்போனது. பன்னீர்செல்வம் நினைத்ததை, செய்து முடிக்கும் திறமை ரமேஷுக்கு இருந்தது. அதிகாரிகள், அமைச்சர்களுடனான பேச்சில் சாமர்த்தியம் காட்டிய ரமேஷை, பன்னீர்செல்வத்துக்கு மிகவும் நெருக்கமான இடத்தில் வைத்தது. விளைவு... அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், பெரிய கான்ட்ராக்டர்கள், அவ்வளவு ஏன்... பிரதமர் மோடியே பன்னீர்செல்வத்திடம் பேச வேண்டும் என்றாலும் முதலில் ரமேஷிடம்தான் பேசியாக வேண்டும் என்ற நிலைமை.

32 வயதாகும் ரமேஷ், கடந்த 11 ஆண்டுகளாக பன்னீர்செல்வத்துடன் இருக்கிறார். பன்னீர்செல்வம் கடந்துவந்த பாதையில் எடுத்த மிக முக்கிய முடிவுகளின் போது, கூடவே ரமேஷ் இருந்திருக்கிறார். குறிப்பாக, 2016 தேர்தலுக்கு முன்பு பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் உள்பட ஐவரை ஜெயலலிதா தனிமைப்படுத்தி நெருக்கியபோது, சசிகலா குடும்பத்தால் தனி வீட்டில் பல நாள்கள் சிறை வைக்கப்பட்டி ருக்கிறார் ரமேஷ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரியவரும் ரமேஷும் - சேகர் ரெட்டி  டைரி  ரகசியம்

பன்னீர்செல்வம் பேசச் சொல்வதையும், பன்னீர்செல்வம் பேச வேண்டியதையும் மட்டுமே ரமேஷ் பேசுவார். ரமேஷ் இல்லாமல் பன்னீர்செல்வத்திடம் எதுவும் செல்லாது. ரமேஷ் அனுமதிக்காமல் பன்னீர்செல்வத்தை யாரும் நெருங்க முடியாது. சேகர் ரெட்டி டைரியில் பெரியவர்/ரமேஷ் என்று இருந்ததை வைத்தே இதைப் புரிந்துகொள்ள முடியும்.

தனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை என்று சொல்லும் சேகர் ரெட்டி, இரண்டு முறை மட்டுமே பன்னீர்செல்வத்தைச் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார். பன்னீர்செல்வம் பேச வேண்டியதைக்கூட, ரமேஷ்தான் பேசுவார் எனும்போது, ரமேஷ் பெயரைக் குறிப்பிட்டு மூன்றரை கோடி ரூபாய் எழுதி வைத்தது ஏன் என்பதையும் சேகர் ரெட்டி சொல்ல வேண்டும்.

- எம்.கணேஷ்
படம்: சு.குமரேசன்

கட்டம் கட்டப்பட்ட காசி!

சே
கர் ரெட்டி டைரியில், ‘அட்வகேட் காசி’ என்று குறிப்பிட்டு ஒரு கோடி ரூபாய் எழுதப்பட்டிருந்தது. யார் இந்த காசி? ‘பன்னீர்செல்வத்தின் மகள் கவிதா பானுவின் கணவர் காசி என்ற காசி விஸ்வநாதன்தான் இவர்’ என்கிறார்கள். கடந்த வருடம் வரை அரசு வழக்கறிஞராக இருந்தவர் காசி. பன்னீர்செல்வம் உள்பட ஐவர் சுற்றிவளைக்கப்பட்டபோது, ரமேஷ் போலவே கட்டம் கட்டப்பட்டார் காசி விஸ்வநாதன். காசி விஸ்வநாதனுக்கு சேகர் ரெட்டி ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை. காசி விஸ்வநாதனின் குடும்பம் முழுவதுமே வழக்கறிஞர்களால் நிரம்பி வழியும். கான்ட்ராக்ட்களில் ஏதாவது சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டால், அதைத் தீர்த்துவைக்கும் ஆஸ்தான வழக்கறிஞர்களாக சுப்ரீம் கோர்ட் வரை ஆஜராக இவர்கள் வருவார்கள். அதனால் பணம் கொடுக்கப்பட்டிருக்கலாம்.