Published:Updated:

சேகர் ரெட்டி டைரி... கழற்றிவிடப்பட்ட வி.ஐ.பி.க்கள்!

சேகர் ரெட்டி டைரி... கழற்றிவிடப்பட்ட வி.ஐ.பி.க்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சேகர் ரெட்டி டைரி... கழற்றிவிடப்பட்ட வி.ஐ.பி.க்கள்!

சேகர் ரெட்டி டைரி... கழற்றிவிடப்பட்ட வி.ஐ.பி.க்கள்!

சேகர் ரெட்டி டைரி... கழற்றிவிடப்பட்ட வி.ஐ.பி.க்கள்!

சேகர் ரெட்டி டைரி... கழற்றிவிடப்பட்ட வி.ஐ.பி.க்கள்!

Published:Updated:
சேகர் ரெட்டி டைரி... கழற்றிவிடப்பட்ட வி.ஐ.பி.க்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சேகர் ரெட்டி டைரி... கழற்றிவிடப்பட்ட வி.ஐ.பி.க்கள்!

சேகர் ரெட்டி டைரி மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால், ‘இது என்னுடைய டைரி விவரங்கள் இல்லை’ என்று சேகர் ரெட்டி உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளார். பரபரப்புகளுக்கு இவை உதவலாம். ஆனால், சேகர் ரெட்டிமீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை போட்டுள்ள வழக்குகளைக் கவனிக்கும்போது, நமக்குத் தெரியவந்த உண்மைகள் அதிர்ச்சி ரகம். ஆளும்வர்க்கம் நினைத்தால் யாரையும் எந்த வழக்கிலிருந்தும் தப்பவும் வைக்கலாம், எந்த வழக்கிலும் சிக்கவும் வைக்கலாம் என்பது புரியும். 

சேகர் ரெட்டி டைரி... கழற்றிவிடப்பட்ட வி.ஐ.பி.க்கள்!

டைரியில் யார் யார் பெயர்கள்?

  2016 டிசம்பர் 8-ம் தேதி தமிழகத்தின் மொத்த மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் அதிரடியான ரெய்டுகள் தொடங்கின. வருமானவரித் துறை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அத்தனை துறைகளும் சேகர் ரெட்டியைத் துளைத்தெடுத்தன. புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கிய பரபரப்பில், சேகர் ரெட்டி வீட்டில் சிக்கிய மற்ற ஆவணங்கள் வெளிச்சத்துக்கு வரவில்லை. அதிலும் குறிப்பாக, சேகர் ரெட்டியின் வீட்டில் சிக்கிய வரவு செலவுக் கணக்கு நோட்டில்தான், இன்றைய தமிழக அரசியலின் போக்கு ஒளிந்திருந்தது.

அந்த நோட்டில், அவரிடம் ஒவ்வொரு மாதமும் பணம் வாங்கிய அமைச்சர்கள்,   எம்.எல்.ஏ-க்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களும், அவர்கள் வாங்கிய தொகையின் விவரமும் பக்காவாக இருந்தன. முக்கியப் புள்ளிகள் 68 பேர் அதில் சிக்கினார்கள். அவர்களில் 18 பேர் அமைச்சர்கள் எனச் சொல்லப்பட்டது. பல கட்சிகளின் மூத்த அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் 25  பேர்  என அந்தப் பட்டியலில் பலரின் பெயர்கள் உள்ளன. இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பு உதவியாளராக இருந்த ஒருவர், ஓ.பன்னீர்செல்வம் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது பதவியில் இருந்த ஆறு தலைமைப் பொறியாளர்கள், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பு ஆலோசகராக இருந்த ஒருவர், முன்னாள் தலைமைச் செயலாளர் ஆகியோரும் லிஸ்ட்டில் இருந்தார்கள்.

தவிக்கும் சி.பி.ஐ!


சேகர் ரெட்டிமீது இந்தியத் தண்டனைச் சட்டம் 120பி (கூட்டுச் சதி), 409, 420 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. ‘சேகர் ரெட்டியிடமிருந்து 8 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட நேரத்தில், அவ்வளவு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், வங்கிகள் மூலம்தான் சேகர் ரெட்டிக்குக் கிடைத்திருக்க வேண்டும். அதனால், இந்தப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்பது அரசுத் தரப்பின் வாதம். ஆனால், ‘எந்த வங்கியிலிருந்து இந்த ரூபாய் நோட்டுகள் சேகர் ரெட்டிக்குக் கிடைத்தன, அதற்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் யார்?’ என்பதைப் புலனாய்வு அதிகாரிகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

சேகர் ரெட்டியோ, ‘என்னுடைய தொழில் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அதன் மூலம் கிடைத்தவை இவை’ என்று குறிப்பிட்டுள்ளார். புலன் விசாரணை அதிகாரிகள் அதை மறுத்து வலுவான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. எனவே, இந்த இடத்தில் சேகர் ரெட்டியின் வாதமே பலப்படுகிறது. அதனால், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்ய முடியாமல் தவித்தது சி.பி.ஐ.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேகர் ரெட்டி டைரி... கழற்றிவிடப்பட்ட வி.ஐ.பி.க்கள்!

ஊழல் தடுப்புச் சட்டம் எதற்கு?

சேகர் ரெட்டிமீது இந்தியத் தண்டனைச் சட்டம் 120பி, 409, 420 போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதில் அரசு ஊழியர் மற்றும் பொது ஊழியர்மீது போடப்படும் ஊழல் தடுப்புச் சட்ட வழக்குப் பிரிவும் அடக்கம். சேகர் ரெட்டி பொது ஊழியரோ, அரசாங்க ஊழியரோ இல்லை. எனவே, அவர்மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய என்ன காரணம் என விசாரித்தோம். வருமானவரித் துறை அதிகாரிகள் சொன்ன காரணம், ‘புதிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்த வங்கி அதிகாரிகள் அரசாங்க ஊழியர்கள் என்பதால், அவர்களை அடையாளம் கண்டு சேர்ப்பதற்காக இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டது’ என்பது! ஆனால், இப்போதுவரை ஒரே ஒரு வங்கிகூட அடையாளம் காணப்படவில்லை. ஒரே ஒரு வங்கி அதிகாரிகூட வழக்கில் சேர்க்கப்படவில்லை. அதனால், சேகர் ரெட்டிக்கு எதிரான அந்தப் பிரிவு அடிபட்டுப் போகும்.

ஆனால், சி.பி.ஐ வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, ‘‘சேகர் ரெட்டி வழக்கு நீதிமன்றத்தில் ஒன்றுமில்லாமல் போனாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ஏனென்றால், டெல்லியின் உத்தரவுப்படி போடப்பட்ட வழக்குகள் அவை. சேகர் ரெட்டி வாக்குமூலத்தை வைத்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அந்த வழக்கில் சேர்க்கும் நிலை இருந்தது. ஆனால், காலப்போக்கில் அவர்களின் பெயர்கள் கழற்றிவிடப்பட்டன. அவர்களின் பெயர்களைச் சேர்த்தால் மட்டுமே சேகர் ரெட்டிக்கு எதிரான இந்த வழக்கு வலுப்பெறும்’’ என்கிறார்கள்.

- நமது நிருபர்