Published:Updated:

“நம் வீட்டு நிம்மதி போச்சு!” - கலங்கவைத்த கதறல்

“நம் வீட்டு நிம்மதி போச்சு!” - கலங்கவைத்த கதறல்
பிரீமியம் ஸ்டோரி
“நம் வீட்டு நிம்மதி போச்சு!” - கலங்கவைத்த கதறல்

“நம் வீட்டு நிம்மதி போச்சு!” - கலங்கவைத்த கதறல்

“நம் வீட்டு நிம்மதி போச்சு!” - கலங்கவைத்த கதறல்

“நம் வீட்டு நிம்மதி போச்சு!” - கலங்கவைத்த கதறல்

Published:Updated:
“நம் வீட்டு நிம்மதி போச்சு!” - கலங்கவைத்த கதறல்
பிரீமியம் ஸ்டோரி
“நம் வீட்டு நிம்மதி போச்சு!” - கலங்கவைத்த கதறல்

‘‘எங்க தெருவுக்கே எம்புள்ளதான் செல்லம். ஆட்டோ சவாரி முடிச்சிட்டு நைட்டு வீடு திரும்ப எனக்கு லேட்டாயிடும். ஆனாலும், என்னோட விளையாடிட்டுதான் தூங்குவான். சாகுறதுக்கு முந்தினநாள்தான், ‘அண்ணாதுரை’ படம் பார்த்துட்டு வந்தோம். அன்னிக்கு நைட், ‘நான்தான் அண்ணாதுரை, நீ தம்பிதுரை. சரியா?’ன்னு சொல்லிக்கிட்டு என்கூட விளையாட்டா சண்டை போட்டான்’’ என்று கல்லறையில் நின்றுகொண்டு கதறி அழுகிறார் லக்‌ஷனின் தந்தை சுதாகர்.

“நம் வீட்டு நிம்மதி போச்சு!” - கலங்கவைத்த கதறல்

அலட்சியம் ஏற்படுத்தும் ஆபத்தை முகத்தில் அறைந்தாற்போல உணர்த்தியது ‘அறம்’ திரைப்படம். இன்னமும் நாம் திருந்தவில்லை என்பதற்கு உதாரணமாக அமைந்துவிட்டது சிறுவன் லக்‌ஷனின் மரணம்.

சென்னை, நெற்குன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுதாகர் - பவானி தம்பதியரின் நான்கு வயது மகன் லக்‌ஷன். இவர்களின் வீட்டுக்கு எதிரே புதிய வீடு கட்டும் பணி நடக்கிறது. அதற்காக வெட்டப்பட்டிருந்த 10 அடி ஆழமுள்ள ‘செப்டிக் டேங்க்’ குழியினுள், மழைநீர் தேங்கியுள்ளது. இந்தக் குழிக்குள் தவறிவிழுந்த லக்‌ஷன், தண்ணீரில் மூழ்கி இறந்துபோனான்.

சுதாகரைச் சமாதானப்படுத்திய அவருடைய அண்ணன் விக்ரம் நம்மிடம், “சுதாகர் சவாரி முடித்து வீடு திரும்ப லேட் ஆகுமென்பதால், ராத்திரி 10 மணி வாக்கில், பக்கத்துத் தெருவில் உள்ள அப்பா வீட்டுக்குப் போவதற்காக வீட்டைப் பூட்டியிருக்கிறார் பவானி. அப்போது, தெருவில் ஓடிய பூனையின் பின்னாடி போன லக்‌ஷன், தடுப்புகள் ஏதுமின்றி இருந்த செப்டிக் டேங்க் குழியினுள் தவறி விழுந்திருக்கிறான். வீட்டைப் பூட்டிவிட்டுத் தெருவுக்கு வந்த பவானி, குழந்தையைத் தேடி அலைந்திருக்கிறார்.

20 நிமிடங்கள் தேடி அலைந்தவர்கள், குழியினுள் தேங்கியிருந்த தண்ணீரில் லக்‌ஷனின் செருப்பு மிதப்பதைக் கண்டபிறகுதான், குழிக்குள் இறங்கித் தேடியிருக்கிறார்கள்... அதற்குள் மூச்சுத் திணறி இறந்துவிட்டான். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான், அவங்க தாத்தா வீட்டுக்குப் போய், ‘நா புது செருப்பு போட்டிருக்கேன் தாத்தா’ன்னு சிரிச்சுப் பேசிய குழந்தை, அடுத்த அரை மணி நேரத்துக்குள்ளே இல்லாம போயிட்டான்’’ என்றார் கம்மிய குரலில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நம் வீட்டு நிம்மதி போச்சு!” - கலங்கவைத்த கதறல்

வழக்கை விசாரித்துவரும் கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் அழகு நம்மிடம்,

“பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றாமல், அடுத்தவருக்கு இறப்பு ஏற்படும் வகையில் பணிகள் செய்துவந்ததாக, வீட்டு உரிமையாளர் சக்கரபாணியைக் கைது செய்துள்ளோம். நீதிமன்றம்தான் சம்பந்தப்பட்ட நபருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்’’ என்றார்.

சக்கரபாணி இப்போது ஜாமீனில் வெளிவந்துவிட்டார். அவருடைய குடும்பம் இப்போது அங்கே இல்லை. ஆனால், சம்பவம் நடைபெற்ற இடத்தில் மீண்டும் கட்டடப் பணிகள் ஜரூராக நடைபெறுகின்றன. கீழ்ப்பாக்கம் சின்ன கல்லறையில், லக்‌ஷனுக்குப் பிடித்த சாக்லேட், ஜூஸ், தயிர், பால் என உணவுப் பண்டங்களைப் படையலிட்டு பவானியும் சுதாகரும் அழுகின்றனர். 

“இப்படி இங்கே வந்து படுத்துக்கிட்டியேடா... இந்தக் கல்லறை இப்ப அழகாயிருச்சு. ஆனா, நம் வீட்டு நிம்மதி போயிடுச்சு. எழுந்து வந்துடுடா செல்லம்’’ எனச் சமாதியின் மண்ணை இறுகப்பற்றியபடி கதறித்துடிக்கும் அந்தப் பெற்றோரின் குரல், நம் ஈரக்குலையை அறுப்பதுபோல இருந்தது.

- த.கதிரவன்
படங்கள்: ப.சரவணகுமார்

‘அலட்சியம் இருக்கும் இடத்தில் அறம் இருக்காது!’- இயக்குநர் கோபி நயினார்

தறவைக்கும் இந்த உயிர்ப்பலி குறித்து, ‘அறம்’ திரைப்பட இயக்குநர் கோபி நயினாரிடம் பேசினோம். “தாங்கமுடியாத சோகம் இது. உயிர் குறித்தான அக்கறையோ, மனிதாபி மானமோ நம்மிடம் கொஞ்சமும் கிடையாது. அதனால்தான், இதுபோன்ற அலட்சிய மனோபாவம் உருவாகிறது. அதிவேகமாக கார் ஓட்டுவது, பைக் ஓட்டுவது என ஆரம்பித்து, மணல் அள்ளுவது வரை எல்லா விஷயங் களிலுமே ஆதாரமாக இருப்பது, பிறர் மீதான அக்கறையின்மையே. இந்த மனநிலையில் இருப்பவர்களிடம் அக்கறை குறித்த கவனமோ, அலட்சியம் குறித்த பயமோ இருக்காது. இந்த நிலையில், ‘நாம் தோண்டியிருந்த ஒரு பள்ளத்தில் விழுந்து ஒரு குழந்தை இறந்துபோய்விட்டதே’ என்ற மனிதாபிமானச் சிந்தனை எப்படி வரும்?’’ என்றார் கோபி நயினார்.