Published:Updated:

“கூட்டத்தை நம்பி தனியாளாக நின்றேன்!”

“கூட்டத்தை நம்பி தனியாளாக நின்றேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“கூட்டத்தை நம்பி தனியாளாக நின்றேன்!”

மதுரையில் அன்னா ஹசாரே

“கூட்டத்தை நம்பி தனியாளாக நின்றேன்!”

மதுரையில் அன்னா ஹசாரே

Published:Updated:
“கூட்டத்தை நம்பி தனியாளாக நின்றேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“கூட்டத்தை நம்பி தனியாளாக நின்றேன்!”

‘‘முன்பு, இரவு நேரங்களில்தான் மணலைத் திருடுவார்கள். இப்போது, பகல் நேரத்திலேயே சர்வ சாதாரணமாக மணலைத் திருடுகிறார்கள்’’ என வேதனைப்பட்டார், பொதுப்பணித் துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் காமராஜ். மதுரையில் வைகைப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில்தான், அவர் இவ்வாறு பேசினார். ‘தண்ணீர் மனிதன்’ ராஜேந்திர சிங் மற்றும் காந்தியவாதி அன்னா ஹசாரே ஆகியோரும் அதில் கலந்துகொண்டனர்.

“கூட்டத்தை நம்பி தனியாளாக நின்றேன்!”

ராஜேந்திர சிங் பேசியபோது, ‘‘இதுவரை தென்னிந்தியாவுக்குப் பலமுறை வந்திருக்கிறேன். இந்த முறை மட்டுமே வைகையில் ஆர்ப்பரிக்கும் நீரைப் பார்க்கிறேன். இந்த நேரத்தில் வைகை மீட்புத் திட்டத்தைச் செயல்படுத்த, அந்த வைகை நதியும் நம்முடன் கைகோத்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மொத்தம் மூன்று முக்கியப் பிரச்னைகள் இருக்கின்றன. முதலாவது, நீர்நிலைகள்மீதான ஆக்கிரமிப்பு. இரண்டாவது, நீர்நிலைகள் அசுத்தம் அடைந்திருப்பது. மூன்றாவது, நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சுவது. இப்படி, நீர்க் கொள்ளையும், நதிகளின் அழிவும் தொடர்ந்தால் ஆபத்து. மக்கள் நினைத்தால், இழந்த நீர்நிலைகளை மீட்டெடுக்கவும், இருக்கும் நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தவும் முடியும்’’ என்றார்.

பிறகு, பலத்த கரகோஷங்களுக்கிடையே அன்னா ஹசாரே பேச ஆரம்பித்தார். ‘‘ஒரு சட்டத்தை உருவாக்கிக்கொண்டு மக்களை அதற்கு அடிபணியச் செய்வது ஜனநாயகம் அல்ல. மக்கள் வேண்டுகிற சட்டங்களை அங்கீகரிப்பதுதான் அரசின் கடமை. போராட்டம் நடத்தி சிறைக்குச் செல்ல பயப்படக்கூடாது. நான் சாதாரண மனிதனாகப் போராடி, லஞ்சம் வாங்கிய, ஊழல் செய்த ஆறு அமைச்சர்களையும், 400 அரசு அதிகாரிகளையும் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறேன். இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவரும் தங்கள் நிலையை உணர்ந்தால், இதுபோல் உங்களாலும் முடியும்.

நாடு முழுவதும் நீருக்காகவும் மண்ணுக்காகவும் மக்கள் போராடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். தனித்தனியாகப் போராடுவதால் நமது சக்தி வீணாகிறது. நம் குரல் ஒருமித்தால், மத்திய அரசை நம் முன்னே மண்டியிட வைக்க முடியும்’’ என்றார்.

அன்னா ஹசாரே பேசி முடிக்கும்போது, ‘‘என் போராட்டத்துக்கு மதுரையிலிருந்து எவ்வளவு பேர் வருகிறீர்கள்?’’ என்று கேட்டார். உடனே எல்லோரும் கையைத் தூக்க, ‘‘இந்த மாதிரி சொன்னவர்களை நம்பி, கடைசியில் நான் மட்டும் தனியாகப் போராடிய அனுபவம் உண்டு’’ என்றார் சிரித்துக்கொண்டே.

மக்களை நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார்.

- செ.சல்மான்,  விக்னேஷ், பவித்ரா
படம்: ராகுல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!