Published:Updated:

விளைபொருள் ஏற்றுமதிக்குத் தடை... உணவு தானிய சேமிப்புக்கு ஆப்பு!

விளைபொருள் ஏற்றுமதிக்குத் தடை... உணவு தானிய சேமிப்புக்கு ஆப்பு!
பிரீமியம் ஸ்டோரி
விளைபொருள் ஏற்றுமதிக்குத் தடை... உணவு தானிய சேமிப்புக்கு ஆப்பு!

உலை வைக்கும் உலக வர்த்தக அமைப்பு

விளைபொருள் ஏற்றுமதிக்குத் தடை... உணவு தானிய சேமிப்புக்கு ஆப்பு!

உலை வைக்கும் உலக வர்த்தக அமைப்பு

Published:Updated:
விளைபொருள் ஏற்றுமதிக்குத் தடை... உணவு தானிய சேமிப்புக்கு ஆப்பு!
பிரீமியம் ஸ்டோரி
விளைபொருள் ஏற்றுமதிக்குத் தடை... உணவு தானிய சேமிப்புக்கு ஆப்பு!
விளைபொருள் ஏற்றுமதிக்குத் தடை... உணவு தானிய சேமிப்புக்கு ஆப்பு!

‘வேலியில போற ஓணானை எடுத்து வேட்டியில விட்டுக்கிட்டு, குத்துதே குடையுதேனு கத்தி என்ன பிரயோஜனம்’ என்று ஒரு பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். உலக வர்த்தக அமைப்பில் (WTO-World Trade Organisation) இணைந்திருக்கும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது. ‘தேசத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்’ என்று சொல்லிக்கொண்டுதான் இந்த அமைப்பில் இந்தியா உள்பட பல நாடுகளும் இணைந்தன. போகப்போகப் பார்த்தால்... ‘நீ அவல் கொண்டுவா, நான் உமியைக் கொண்டு வருகிறேன். ஊதி ஊதித் தின்போம்’ என்பதுபோல வளரும் நாடுகளைப் பணக்கார நாடுகள் வஞ்சிக்கின்றன. மற்றவர்களுக்கு வரிசையாகக் கட்டுப்பாடுகளை விதிக்கும் பணக்கார மற்றும் வளர்ந்த நாடுகள், தங்கள் நாடுகளில் மட்டும் அவற்றைத் தளர்த்திக் கொள்கின்றன. இதனால், வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் - குறிப்பாக விவசாயிகள் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள்.

உலக வர்த்தக அமைப்பின் உலகளாவிய மாநாடு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், அர்ஜென்டினா நாட்டின் பியூனஸ் அயர்ஸ் நகரில் டிசம்பர் 7 முதல் 14 வரை இந்த மாநாடு நடைபெற்றது. இதில் உறுப்பினர்களாக உள்ள 164 நாடுகளின் சார்பில், அரசப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பல நாடுகளிலிருந்து ‘லா வியா கெம்பசினா’ (உலக விவசாயிகள் கூட்டமைப்பு) பிரதிநிதிகளும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்திருந்தார்கள். அவர்கள், கூட்டம் நடைபெற்ற வளாகத்துக்கு முன்பாகவும், வளாகத்துக்கு உள்ளேயும் தீவிரப் போராட்டங்களை நடத்தினர்.

விளைபொருள் ஏற்றுமதிக்குத் தடை... உணவு தானிய சேமிப்புக்கு ஆப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த அமைப்பை விவசாயிகள் எதிர்க்க முக்கியக் காரணம்... வளரும் நாடுகளில் விவசாயத்துக்கு வழங்கப்பட்டுவரும் மானியங்களை ஒரேயடியாக நிறுத்தச்சொல்லி இந்த அமைப்பு நிர்பந்தம் செய்துவருவதுதான். இதனால்தான், ‘உலக வர்த்தக அமைப்பின் வரையறைக்குள் விவசாயத்தைச் சேர்க்கவே கூடாது’ என்று தொடர்ந்து குரல் கொடுக்கின்றனர் விவசாயிகள். 2001-ம் ஆண்டு கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்ற மாநாட்டில், அன்றைய மத்திய வர்த்தக அமைச்சர் முரசொலி மாறன், ‘‘வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டின் விவசாயிகளுக்கு மானியங்களை அள்ளித் தருவதை நிறுத்தும்வரை, விவசாயத்தை உலக வர்த்தக அமைப்பின் வரையறைக்குள் கொண்டு வரக்கூடாது’’ என்று கறார் காட்டினார். அதனால், விவசாய மானியங்களை ரத்து செய்வது குறித்து முடிவெடுப்பதைத் தள்ளிப்போட்டார்கள். 

2013-ம் ஆண்டு, பாலி தீவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில், ‘ஏழை நாடுகளில் விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் மானியம், உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக்கூடாது’ என்ற தீர்மானத்தை வளர்ந்த நாடுகள் முன்வைத்தன. இந்தியா சார்பில் பங்கேற்ற மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா இதற்கு ஆட்சேபனை தெரிவித்தாலும், பரிசீலிப்பதாக ஒப்புக்கொண்டார். அப்போது பல்வேறு நாடுகளும் எதிர்குரல் கொடுக்கவே, அந்தத் தீர்மானம் நிறைவேறவில்லை. இதுபற்றி 2014-ம் ஆண்டு நாடாளு மன்றத்தில் பேசிய மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஒருபோதும் இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு ஒப்புக்கொள்ளாது’’ என்றார். ஆனால், அதே ஆண்டு மோடியின் அமெரிக்கப் பயணத்துக்குப் பிறகு, உலக வர்த்தக மையத்தின் தலைமை அலுவலகத்துக்குச் சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2015-ம் ஆண்டுக்கான கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். ‘அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் வழங்கப்படும் கொள்முதல் விலைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும்; விதைகள், மின்சாரம், உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியத்தை அதிகரிக்காமல், இப்போதுள்ள அளவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்; நான்கு ஆண்டுகளில் மானியங்களை முழுமையாக நிறுத்திவிட வேண்டும்; மானியங்களைத் தொடர்ந்தால், வேளாண் பொருள்கள் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்படும்; உணவு தானியங்களை எதிர்காலத் தேவைக்காக சேமித்து வைக்கக்கூடாது’ என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை எதிர்ப்பதாகவோ, ஏற்றுக்கொள்வதாகவோ இந்தியா சார்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், முன்னர் கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி 2018 -ம் ஆண்டு முதல், உணவு தானியங்களை எதிர்காலத் தேவைக்காக சேமிப்பதை இந்தியா உள்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் அனைத்தும் நிறுத்திக்கொள்ள வேண்டும். விளைபொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமானால், விவசாய மானியங்களை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும்.

விளைபொருள் ஏற்றுமதிக்குத் தடை... உணவு தானிய சேமிப்புக்கு ஆப்பு!

இந்தத் தீர்மானங்களை நிறைவேற்ற இன்னும் சில நாள்களே மிச்சமுள்ளன. உணவு தானிய சேமிப்பு தொடர்பான இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் கோரிக்கைகளை அமெரிக்கா தடுத்ததால், எந்த முடிவும் எடுக்கப் படாமலேயே பியூனஸ் அயர்ஸ் மாநாடு முடிந்தது.

‘இந்தியா உணவு தானியங்களைச் சேமிப்பதை நிறுத்திக்கொள்ளுமா... விவசாயத்துக்கு அளிக்கப்படும் மானியங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுமா?’ என்கிற கேள்விகளுக்கு விரைவிலேயே பதில் கிடைத்துவிடும்.

- துரை.நாகராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism