Published:Updated:

‘‘பிரதமருக்கு மூன்று வந்தன... மீனவர்களுக்காக ஒன்றும் வரவில்லை!’’

‘‘பிரதமருக்கு மூன்று வந்தன... மீனவர்களுக்காக ஒன்றும் வரவில்லை!’’
பிரீமியம் ஸ்டோரி

‘‘பிரதமர் வந்தபோது மூன்று ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்திருந்தன. அவற்றில் ஒன்றை, புயல் தாக்கிய ஓரிரு தினங்களில் அனுப்பித் தேடியிருந்தாலே பல உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்’’ என்ற ஆதங்கக் குரல் ஒலிக்கிறது கன்னியாகுமரியில். ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக, பிரதமர் மோடி டிசம்பர் 19-ம் தேதி கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி சுற்றுலா மாளிகையில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளை பிரதமர் சந்தித்தார். இந்த இரண்டு மணி நேரப் பயணத்தில் கவர்னர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் உடன் இருந்தனர்.

மீனவ சமூகத்தினர் சுமார் 40 பேர், மீனவ கிராமங்களில் இருக்கும் பங்குத் தந்தையர்கள் ஆறு பேர் ஆகியோரை வரவழைத்து சந்தித்தார் மோடி. பிரதமரைச் சந்தித்த சிலரிடம் பேசினோம். “எங்களிடம் மிகுந்த அக்கறையுடன் பிரதமர் பேசினார். எங்களின் குறைகளைக் கேட்டார். மீனவர்கள், அவரிடம் தமிழில்தான் பேசினர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது புரியவில்லை என்றாலும், அவர்களின் உணர்வைப் பிரதமர் புரிந்துகொண்டார்’’ என்று பிரதமரைச் சந்தித்த பங்குத் தந்தையர்கள் கூறினர்.

‘‘பிரதமருக்கு மூன்று வந்தன... மீனவர்களுக்காக ஒன்றும் வரவில்லை!’’

பிரதமர் மேடையில் அமர்ந்திருக்க, மக்கள் தூரத்திலிருந்து அவரிடம் பேசுவதாகத்தான் திட்டம். ஆனால், கூட்டமாக இருந்த மீனவர்களைக் கண்டதும், மேடையிலிருந்து இறங்கி அவர்களின் அருகே வந்துவிட்டார் பிரதமர் மோடி. ‘‘இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்காதுதான். ஆனாலும், என் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று மோடி சொன்னார்.

விவசாயிகள் தரப்பில் பிரதமரைச் சந்தித்த கருங்கல் ஜார்ஜ், “புயலால் நெல், வாழை, ரப்பர், மிளகு, கிராம்பு உள்ளிட்ட பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. அதுபற்றி பிரதமரிடம் எடுத்துச்சொல்லி, ‘விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினோம். இடிந்த வீடுகளைப் புதுப்பித்து தரக் கோரினோம். ஒகி புயலால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். கவனமாகக் கேட்ட பிரதமர், ‘உங்களின் பாதிப்பு எனக்குப் புரிகிறது. உங்களின் சோகத்தில் நானும் பங்கேற்கிறேன். நீங்கள் கேட்டுக்கொண்டவற்றை முதல்வரிடம் பேசி உடனடியாக நிறைவேற்றச் சொல்கிறேன்’ என்று உறுதியளித்தார்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘பிரதமருக்கு மூன்று வந்தன... மீனவர்களுக்காக ஒன்றும் வரவில்லை!’’
‘‘பிரதமருக்கு மூன்று வந்தன... மீனவர்களுக்காக ஒன்றும் வரவில்லை!’’

‘மீனவர்களையும், விவசாயிகளையும் ஓர் இடத்துக்கு வரவழைத்துப் பேசிய பிரதமர், மீனவ கிராமங்களுக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை, பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் பார்க்கவில்லை’ என்ற வருத்தம் குமரி மாவட்ட மக்களிடம் உள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின், “நூற்றுக்கணக்கான மீனவர்களை இன்னும் காணவில்லை. தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பிரதமர் இங்கு வந்ததை வரவேற்கிறோம். ஆனாலும், பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்திக்க வராததைக் குறையாகவே கருதுகிறோம். ஆழ்கடல் மீன்பிடிக்க 700 கடல் மைல்களுக்கு அப்பால் மீனவர்கள் செல்வார்கள். ஆனால், கடலோரக் காவல் படையினரோ, 100 கடல் மைல்களுக்கு உள்ளேயே தேடினர்.

வள்ளவிளை கிராமத்திலிருந்து ஐந்து விசைப்படகுகளில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீனவர்கள், கடலில் சிக்கிக்கொண்டார்கள். அவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், அந்தக் கிராம மீனவர்களே சொந்தச் செலவில் டீசல் போட்டு,  எட்டு விசைப்படகு களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். எட்டு நாள்களுக்குப்பின், ஒரு விசைப்படகில் நடுக்கடலில் தத்தளித்த 10 மீனவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை கொச்சின் துறைமுகம் வழியாக வள்ளவிளை கிராமத்துக்கு அனுப்பினர். தொடர்ந்து மீனவர்கள் தேடியதில், 300 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள பகுதியில் டீசல், உணவு, தண்ணீர் என ஏதுமின்றி உயிருக்குப் போராடிய 47 மீனவர்களுடன் தத்தளித்த நான்கு விசைப்படகுகளை மீனவர்கள் கண்டுபிடித்தனர்.  அவர்களுக்கு மீனவர்களே முதலுதவி அளித்து அழைத்து வந்தனர். வெறும் ஜி.பி.எஸ் உதவியுடன் தங்கள் சொந்தங்களை அவர்கள் மீட்டு வந்துள்ளனர். ஆனால், வல்லரசான நமது நாட்டு கடலோரப் படையினர், இதுவரை எத்தனை மீனவர்களை மீட்டுள்ளனர்?’’ என்று படத்தார்.

‘‘பிரதமருக்கு மூன்று வந்தன... மீனவர்களுக்காக ஒன்றும் வரவில்லை!’’

ஆறுதல் சொல்ல தலைவர்கள் வருவது இருக்கட்டும்... துயர் தீர்க்கும் நடவடிக்கைகளே முக்கியம்!

- பி.ஆண்டனிராஜ்
படங்கள்: ஏ.சிதம்பரம், ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism