Published:Updated:

இரண்டாம் இதயம்: “மணி அண்ணன்தான் எங்களுக்குக் கடவுள்!”

இரண்டாம் இதயம்: “மணி அண்ணன்தான் எங்களுக்குக் கடவுள்!”
பிரீமியம் ஸ்டோரி
இரண்டாம் இதயம்: “மணி அண்ணன்தான் எங்களுக்குக் கடவுள்!”

இரண்டாம் இதயம்: “மணி அண்ணன்தான் எங்களுக்குக் கடவுள்!”

இரண்டாம் இதயம்: “மணி அண்ணன்தான் எங்களுக்குக் கடவுள்!”

இரண்டாம் இதயம்: “மணி அண்ணன்தான் எங்களுக்குக் கடவுள்!”

Published:Updated:
இரண்டாம் இதயம்: “மணி அண்ணன்தான் எங்களுக்குக் கடவுள்!”
பிரீமியம் ஸ்டோரி
இரண்டாம் இதயம்: “மணி அண்ணன்தான் எங்களுக்குக் கடவுள்!”
இரண்டாம் இதயம்: “மணி அண்ணன்தான் எங்களுக்குக் கடவுள்!”

“இன்னும் கூரைவீட்டில்தான் வசிக்கிறோம். ‘இவனுக்கே ஒண்ணும் இல்லை. ஊருக்குச் சேவை செய்யப் போயிட்டான்’னு பலரும் நக்கலா பேசுவாங்க. அதையெல்லாம் காதுல வாங்கிக்கறது இல்லை. இதுவரை 200-க்கும் மேற்பட்ட அப்பாக்கள், அம்மாக்கள், சகோதரிகள், சகோதரர்களைக் காப்பாற்றியிருக்கேன்” என நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ‘ஆம்புலன்ஸ்’ மணிகண்டன்.

புதுச்சேரி - தமிழக எல்லைப்பகுதியில் உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். விளிம்புநிலை குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர், பழைய இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை வாங்கிவிற்கும் தொழிலைச் செய்துவருகிறார். தனது சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்திவரும் இவர், அப்துல் கலாம் பெயரில் இலவசமாக ஆம்புலன்ஸ் சேவையையும் செய்துவருகிறார்.

மணிகண்டனைச் சந்தித்தோம். “2006-ம் வருஷத்துல ஒருநாள்... காலையில பாண்டிச்சேரிக்கு வேலைக்காகப் போயிட்டிருந்தேன். அப்போ பத்துக்கண்ணு ஜங்ஷனுக்குக் கொஞ்சம் தள்ளி, ஒரே கூட்டம். என்னனு விசாரிச்சப்போ, ‘பைக்ல வந்த ஒரு காலேஜ் பையன், நாய் குறுக்கே வந்ததால மரத்துல மோதி உசுருக்குப் போராடிக்கிட்டு இருக்கான்’னு சொன்னாங்க. ‘உடனே ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டுப் போகணுமே’னு சொன்னபடி, கூட்டத்தை விலக்கிட்டுப்போய் பாத்தேன். அங்கே ரத்த வெள்ளத்துல அந்த இளைஞன் கிடந்தான். அவன் வேற யாருமல்ல... என் சொந்தத் தம்பி ஹரிகரன்” என்று சொன்னபோது, மணிகண்டனின் கண்கள் குளமாகின.

இரண்டாம் இதயம்: “மணி அண்ணன்தான் எங்களுக்குக் கடவுள்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சற்றுநேர மௌனத்துக்குப் பின் தொடர்ந்தார் மணிகண்டன். “ரத்த வெள்ளத்தில் அவனைப் பார்த்ததும் எனக்கு மயக்கமே வந்திடுச்சி. அவனைத் தூக்கி மடியில போட்டுகிட்டு, ‘யாராச்சும் சீக்கிரமா ஆம்புலன்ஸைக் கூப்பிடுங்களேன்’னு கதறுனேன். ஆம்புலன்ஸுக்கு போன் செய்தாங்க. ஆனா, அது வரலை. அப்புறம் வேற ஒரு வண்டியில தம்பிய தூக்கிட்டுப் போய் பாண்டிச்சேரி ஜி.ஹெச்ல சேர்த்தேன். ‘கொஞ்சம் முன்னாடி  கொண்டு வந்திருந்தா காப்பாத்தியிருக்கலாம்’னு டாக்டர்கள் சொன்னாங்க. இழப்பின் வலியை உணர்ந்தவங்களுக்குத்தான் உயிரோட முக்கியத்துவம் தெரியும். ‘என் தம்பி மாதிரி வேற யாரும் சாகக் கூடாது. அதுக்காக, நாம ஏதாவது செஞ்சாகணும்’னு முடிவுசெஞ்சேன்.

பாண்டிச்சேரியில, பத்துக்கண்ணு சந்திப்புதான் பெரிய ஜங்ஷன். நகருக்குள்ள நுழையறதுக்கு ஆறு பிரதான வழிகள் இங்கதான் இருக்கு. சிக்னல் போடாததால அது தெரியல. இப்பவும் விபத்துகள்ல உயிரிழப்புகள் நடக்குது. 108-க்கு போன் செய்தா, ஆம்புலன்ஸ் லேட்டாதான் வரும். அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடும். சிறுகச் சிறுக நான் சேர்த்து வெச்ச பணத்துல, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, தவணை முறையில ஒரு ஆம்புலன்ஸ் வாங்கினேன். அதுக்கு, அப்துல் கலாம் அய்யாவோட பெயரை வெச்சு, 2016 ஏப்ரல் மாசம், இலவச ஆம்புலன்ஸ் சேவையை ஆரம்பிச்சேன். முதலில் என் அப்பாதான் டிரைவரா இருந்தார். சம்பவ இடத்துக்குப் போனா, அடிபட்ட நபரை நாம்தான் ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தூக்கணும். அப்பாவுக்கு வயசானதால, அவரால் அதைச் செய்ய முடியலை. ஆம்புலன்ஸை இரவுல நான் ஓட்டுவேன். பகல்ல ஓட்டுறதுக்கு ஒரு டிரைவரை வேலைக்கு வெச்சிருக்கேன்.

இரண்டாம் இதயம்: “மணி அண்ணன்தான் எங்களுக்குக் கடவுள்!”

ஒவ்வொரு மாசமும் ஆம்புலன்ஸ் லோனுக்குத் தவணை கட்டணும்; டிரைவருக்குச் சம்பளம் கொடுக்கணும். சிரமப்பட்டுத்தான் சமாளிக்கிறேன். ஆனா, கோடி ரூபாய் சம்பாதிச்சாலும் கிடைக்காத சந்தோஷம், இந்தச் சேவையில எனக்குக் கிடைக்குது. இந்தப் பகுதியில் விபத்து என யாராவது 108-க்கோ, போலீஸ் ஸ்டேஷனுக்கோ போன் செஞ்சா, அவங்க என் செல்போன் நம்பரைத்தான் தர்றாங்க. சுற்றுவட்டார கிராமங்கள்ல பெரும்பாலான மக்களோட செல்போன்கள்ல என்னோட செல் நம்பர் இருக்கும். விபத்து மட்டுமல்ல... ஹார்ட் அட்டாக், பாம்புக்கடி, பிரசவம் என எல்லா அவசரத் தேவைகளுக்கும் போன் வரும். அந்த அளவுக்கு மக்கள் நம்பிக்கை வெச்சிருக்காங்க. பகல் முழுக்க வேலை செஞ்சுட்டு, ராத்திரி வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு இருப்பேன். அல்லது, தூங்கிட்டு இருப்பேன். அப்போ, போன் வரும். அப்படியே எழுந்து ஓடுவேன். ராத்திரியில நான் தூங்கி, பல மாதங்கள் ஆயிடுச்சி.

இதுவரை, 27 குழந்தைகளின் பாதங்கள் இந்த பூமியைத் தொடுவதற்கு என் ஆம்புலன்ஸும் ஒரு காரணமாக இருந்திருக்கு. இந்த வாகனத்திலேயே ஒரு குழந்தை பிறந்துச்சு. எங்கிருந்து போன் வந்தாலும், ஒரு சில நிமிடங்களில் அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸுடன் போயிடுவேன்.

சில நேரங்கள்ல சம்பவ இடம் தூரமா இருக்கும்; அல்லது டிராஃபிக் ஜாமா இருக்கும். அதனால, கொஞ்சம் லேட் ஆயிடும். அந்தச் சமயத்துல, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். ‘கூடப்பாக்கத்துல ஆக்சிடென்ட்’னு போன மாசம் போன் வந்துச்சி. அங்கே போறதுக்கு பத்து நிமிஷம் ஆச்சு. அப்போ, என் சட்டையைப் பிடிச்சு இழுத்து, ‘ஏண்டா இவ்ளோ லேட்’னு கேட்டு அசிங்கமா பேசிட்டாங்க. பல முறை இப்படி நடந்திருக்கு. அந்த சமயத்துல, அவங்களோட உணர்வுகளையும் வலியையும் புரிஞ்சுக்கிட்டு அமைதியா இருந்துருவேன். அவங்க திட்டுன வேதனை மனசுக்குள்ளே இருந்தாலும், ‘ஒரு உசிரக் காப்பாத்திட்டோம்’ங்கறசந்தோஷத்துல அது மறந்து போயிடும்.

 ‘விபத்துல அடிபட்டவங்களை யார் வேணாலும் அருகே இருக்குற ஆஸ்பத்திரிருக்கு தூக்கிட்டுப்போய் சேர்க்கலாம். அவங்ககிட்ட எந்த விசாரணையும் நடத்தப்படாது’னு அரசு சொல்லுது. ஆனா, யதார்த்தத்துல அப்படி இல்லை. அட்டெண்டர் இல்லாம, அடிபட்டவரைப் பார்க்க மாட்டாங்க. அதனால, அடிபட்ட நபரைத் தூக்கிட்டுப்போறது, ரத்தத்தைத் துடைக்கிறது என எல்லாத்தையும் நாமதான் செய்யணும். அவங்க உறவினர்கள் வந்தாதான் நாம அங்கிருந்து கிளம்ப முடியும்.

என் சேவையைக் கேள்விப்பட்டு புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி நேரில் வந்தும், ஆளுநர் மாளிகைக்கு என்னை அழைத்தும் பாராட்டினாங்க. அரசிடமோ, அரசியல் தலைவர்களிடமிருந்தோ, எந்த உதவியையும் நான் கேக்குறதில்ல. ஆம்புலன்ஸை இங்கே நிறுத்த அனுமதியும், ஒரு சின்ன இடமும்தான் நான் கேக்குறேன். ஏன்னா, மழையிலேயும், வெயில்லேயும் கிடந்து இது வீணாயிடக்கூடாதுல. இன்னொரு வாகனத்தை வாங்குற அளவுக்கு எனக்கு வசதி இல்லை” என்று சொல்லும்போதே, மணிகண்டனிடம் கவலையும் பதற்றமும் தெரிந்தது.

மணிகண்டனின் ஆம்புலன்ஸ் சேவையால் பயன்பெற்ற ஷைலஜாவிடம் பேசினோம். “பாண்டிச்சேரியில ஒரு பள்ளிக்கூடத்துல என் வீட்டுக்காரர் எலக்ட்ரீஷியனா வேலை செய்யிறாரு. போன வருஷம் நான் கர்ப்பமா இருந்தேன். டாக்டர் சொல்லியிருந்த தேதிக்கு முன்னாடியே, ஒரு நாள் நைட்ல எனக்கு பிரசவ வலி வந்துடுச்சி. இந்த ஊரு எங்களுக்குப் புதுசு. அந்த நைட்ல யாரை உதவிக்குக் கூப்பிடறதுனு தெரியல. பக்கத்துத் தெருவுக்குப்போய் ஒரு வீட்டின் கதவைத் தட்டி உதவி கேட்டார் என் வீட்டுக்காரர். அந்த வீட்டில் மணிகண்டன் அண்ணன் கொடுத்திருந்த காலண்டரில் அவசர ஆம்புலன்ஸ் உதவிக்கான செல்போன் நம்பர் இருந்தது. அவர்களே போன் செய்து அவருக்குத் தகவல் சொன்ன உடனே ஆம்புலன்ஸ் வந்து நின்றது. சில நிமிடங்களில் புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ஆண் குழந்தை,  நார்மல் டெலிவரியில் பிறந்துச்சி. இப்போ என் பையன் கமலேஷுக்கு எட்டு மாசம் ஆகுது. நானும் என் குழந்தையும் இன்னைக்கு இருக்கிறோம்னா அதுக்கு இந்த ஆம்புலன்ஸ்தான் காரணம். மணி அண்ணன்தான் எங்களுக்குக் கடவுள்” என்று நெகிழ்ந்தார்.

இரண்டாம் இதயம்: “மணி அண்ணன்தான் எங்களுக்குக் கடவுள்!”

போக்குவரத்துக் காவல் பிரிவில், தன்னார்வல ராக மணிகண்டன் பணிபுரிகிறார். மலேரியா, டெங்குக் காய்ச்சல் பற்றிய விழிப்புஉணர்வு பிரசாரத்தை ஒலிபெருக்கி மூலம் செய்துவருகிறார். “காலை, மாலை என இரண்டு வேளைகள்லேயும் சுமார் ரெண்டாயிரம் பேர் இந்த பத்துக்கண்ணு ஜங்ஷன்ல கூடுறாங்க. ஆனா, இந்த இடத்துல கழிப்பறைகளே இல்லை. அரசு அனுமதியோடு இங்க கழிப்பறை கட்டணும்னு விரும்புறேன்” என்கிறார் மணிகண்டன்.

இரண்டாம் இதயம்: “மணி அண்ணன்தான் எங்களுக்குக் கடவுள்!”

எளிய மனிதர்களின் மனங்களில் எப்போதும் ஈரம் இருக்கிறது என்பதற்கு வாழும் உதாரணம், மணிகண்டன். 

- ஜெ.முருகன்
படங்கள்: அ.குரூஸ்தனம், எஸ்.தேவராஜன்

திருத்தம்

10.
12.17 தேதியிட்ட ஜூ.வி இதழில் வெளியான ‘ஆறு கோடி ரூபாய் செலவிட்டும் அணையை உடைத்த ஊழல்’ என்ற செய்திக் கட்டுரையில், சஸ்பெண்டு செய்யப்பட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியின் படத்துக்குப் பதிலாக, பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் டி.முருகு சுப்பிரமணியனின் படம் தவறுதலாக வெளியாகிவிட்டது.

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism