Published:Updated:

பறிக்கப்படும் மீன்வளப் பல்கலைக்கழகம்!

பறிக்கப்படும் மீன்வளப் பல்கலைக்கழகம்!
பிரீமியம் ஸ்டோரி
பறிக்கப்படும் மீன்வளப் பல்கலைக்கழகம்!

கொதிக்கும் நாகப்பட்டினம்

பறிக்கப்படும் மீன்வளப் பல்கலைக்கழகம்!

கொதிக்கும் நாகப்பட்டினம்

Published:Updated:
பறிக்கப்படும் மீன்வளப் பல்கலைக்கழகம்!
பிரீமியம் ஸ்டோரி
பறிக்கப்படும் மீன்வளப் பல்கலைக்கழகம்!

ங்கீகாரமே இல்லாமல் தமிழக அரசு ஒரு பல்கலைக்கழகத்தை நடத்திவருகிறது. நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம்தான் அது. ‘கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஸ்டார்ட் ஆகும்’ என்கிற கதையாக, ‘சென்னைக்கு மாற்றினால் அங்கீகாரம் கிடைத்துவிடும்’ என்று சொல்லி, அதை சென்னைக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. அதைக் கண்டித்துப் போராட்டம் வெடித்துள்ளது.  

நாகை மாவட்டத்தில் மீன்பிடித்தொழிலை மேம்படுத்தவும், கடல்சார் ஆய்வுகளை மேற்கொள்ள வும், மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டது. ‘‘மீன்வளப் பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் அமைக்கப்படும்’’ என அன்றைய முதல்வர் ஜெயலலிதா 2012-ல் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, நாகை கிழக்குக் கடற்கரை சாலை அருகே 85 ஏக்கரில், ரூ. 34.08 கோடி செலவில் மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. அதை, 2013-ல் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

பறிக்கப்படும் மீன்வளப் பல்கலைக்கழகம்!

தூத்துக்குடி, பொன்னேரி, மாதவரம் ஆகிய இடங்களில் உள்ள மீன்வளக் கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டன. இந்தப் பல்கலைக்கழக வளாகத்திலேயே மீன்வளப் பொறியியல் கல்லூரியும் இயங்கிவருகிறது. அங்கு,  கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி, கடல் உணவு பராமரித்தல், பதப்படுத்துதல், மீன்வளப் பொறியியல், மீன்வள பொருளாதாரம் போன்ற பட்டயப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. முதுகலைப் பட்டயப் படிப்புகளும், பிஹெச்.டி ஆராய்ச்சிப் படிப்புகளும் வந்தன. எட்டரை கோடி ரூபாய் செலவில் ஆய்வகக் கட்டடம், வகுப்பறைகள், விடுதிகள், ஆசிரியர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 

சமீபத்தில் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில், பல்கலைக்கழகத்தை சென்னைக்கு மாற்றம் செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த முடிவுக்கு நாகை அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நாகை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வும், இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலச் செயலாளருமான நிஜாமுதீன், ‘‘ஜெயலலிதா தொடங்கிய பல்கலைக்கழகம் இது. ஏற்கெனவே நாகையில் இயங்கி வந்த ரயில்பெட்டித் தொழிற்சாலை திருச்சிக்கும், எண்ணெய் எரிவாயு அலுவலகம் புதுச்சேரிக்கும், செவிலியர் பயிற்சிக் கல்லூரி திருவாரூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டன. இதனால், நாகையில் வளர்ச்சியும் வேலை வாய்ப்பும்  பறிபோயுள்ளன. பல்கலைக்கழகத் துணைவேந்தர், சுயநலத்தின்பேரில் இதை சென்னைக்கு மாற்ற முயற்சி செய்வதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. பல்கலைக்கழகம் மாற்றப்பட்டால், மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்’’ என்று எச்சரித்தார். 

நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, ‘‘இந்த முடிவைக் கைவிடக் கோரி தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். இதற்காக, இறுதிவரை போராடுவேன்’’ என்று கொந்தளித்தார்.  

‘உண்மையில் என்னதான் நடக்கிறது’ என்று மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஃபெலிக்ஸிடம் கேட்டோம். ‘‘பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்தவர்களில் சிலர், நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தடையாணை வாங்கியுள்ளனர். அதனால், கட்டடப் பணிகள் முடிக்கப்பட வில்லை. இந்தப் பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. அதனால், இங்கு படித்த மாணவர்கள், வேறு கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்க முடியவில்லை; வேலைக்கும் செல்ல முடியவில்லை. மத்திய அரசின் அங்கீகாரம் இல்லாத நிலையில் மாணவர் சேர்க்கையும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, நிர்வாக அலுவலகத்தை மட்டும் தற்காலிகமாக சென்னைக்கு இடம்மாற்றினால் அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைக்கிறோம். மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். தமிழக அரசு அனுமதி அளித்த பின்னரே சென்னைக்கு மாற்ற முடியும். பல்கலைக்கழகத்தை நிரந்தரமாக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்போவதாக கிளம்பும் செய்திகளில் உண்மையில்லை’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பறிக்கப்படும் மீன்வளப் பல்கலைக்கழகம்!

‘‘பல்கலைக்கழகத்துக்கு இடம் கொடுத்தவர்களுக்கு இன்றுவரை அரசிடமிருந்து முழுமையாக இழப்பீடு வழங்கப்படவில்லை. அதைச் செய்தால் பிரச்னை முடிந்து விடும்’’ என்றார் பேராசிரியர் ஒருவர்.

நாகையைச் சேர்ந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் கேட்டதற்கு. ‘‘பல்கலைக்கழகத்தை மாற்றுவதற்குத் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதுமா? அதனாலேயே அது இடம் மாறிவிடுமா? அந்தத் தீர்மானத்தை ஒருபோதும் அரசு ஏற்றுக்கொள்ளாது. இது சென்னைக்கு இடம் மாறாது’’ என்றார் உறுதியாக.  

நாகை மக்களின் உணர்வுகளுக்குத் தமிழக அரசு மதிப்பளிக்குமா?

- மு.இராகவன், படங்கள்: செ.ராபர்ட்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism