Published:Updated:

காவு வாங்கக் காத்திருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள்!

காவு வாங்கக் காத்திருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள்!
பிரீமியம் ஸ்டோரி
காவு வாங்கக் காத்திருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள்!

திருச்சி ‘பெல்’லுக்கு ஆபத்து

காவு வாங்கக் காத்திருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள்!

திருச்சி ‘பெல்’லுக்கு ஆபத்து

Published:Updated:
காவு வாங்கக் காத்திருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள்!
பிரீமியம் ஸ்டோரி
காவு வாங்கக் காத்திருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள்!

லாபத்தில் இயங்கக்கூடிய பொதுத்துறை அமைப்பான திருச்சி பெல் நிறுவனத்தைச் சீர்குலைக்கும் வேலையில் மத்திய ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சில நெருக்கடிகள் காரணமாக, திருச்சியில் உள்ள ‘பெல்’ எனப்படும் பாரத மிகுமின் நிறுவனத்துக்குக் கிடைத்துவந்த ஆர்டர்கள், கடந்த சில ஆண்டுகளில் குறைந்தன. பெல் நிறுவனத்தைச் சார்ந்து, பல தொழில் நிறுவனங்கள் இங்கு செயல்படுகின்றன. பெல் நிறுவனமே தடுமாறியதால், இவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தற்போது, பெல் நிறுவனத்துக்கு ஆர்டர்கள் கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்க ஆரம்பித்துள்ள நிலையில், அந்த ஆர்டர்களைத் தட்டிப்பறிப்பதற்கு, வடமாநிலங்களில் உள்ள சில கார்ப்பரேட் நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காவு வாங்கக் காத்திருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள்!

திருச்சி பெல் நிறுவனத்தின் சார்பு சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் கூட்டமைப்பான ‘பெல்சியா’வின் தலைவர் அசோக் சுந்தரேசனிடம் பேசினோம். “திருச்சியில் 1968-ம் ஆண்டு பெல் நிறுவனம் தொடங்கப்பட்டது. நாட்டின் மிக முக்கியமான பணிகளை இந்த நிறுவனம் செய்துள்ளது. மின் உற்பத்தி சாதனங்கள், நீராவிக் கொதிகலன்கள், அனல்மின் உற்பத்தி சாதனங்கள், காற்றாலை உற்பத்திக்கான ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. திருச்சியில் திருவெறும்பூர், அரியமங்கலம், துவாக்குடி, மண்டையூர், புதுக்குடி போன்ற பகுதிகளில் சுமார் 500 சிறுதொழில் நிறுவனங்கள் பெல் நிறுவனத்தைச் சார்ந்து இயங்கிவந்தன. மூன்று ஆண்டுகளாக ஏற்பட்ட நெருக்கடிகளால் ஆர்டர்கள் குறைந்தன. இதனால், பல கம்பெனிகள் மூடப்பட்டு, பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

அதனால், பெரும் துயரத்தில் இருந்த எங்களுக்கு பெரும் ஆறுதல் அளிப்பதுபோல இந்த ஆண்டு நிறைய ஆர்டர்கள் பெல் நிறுவனத்துக்கு வந்தன. ரூர்கேலா மின் உற்பத்தித் திட்டம், விஜயவாடாவில் 1,600 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டம், விசாகப்பட்டினம் 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டம் எனப் பல ஆர்டர்கள் கிடைத்தன. சில நாள்களுக்கு முன்பு, சுமார் 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளுக்கான டெண்டர் வெளியாகியுள்ளது.

அதற்கு, எங்கள் கூட்டமைப்பில் உள்ள தொழிற்சாலைகள் விண்ணப்பித்துள்ளன. அதேசமயம், நாக்பூரில் இயங்கிவரும் ரூ.3,000 கோடி மதிப்புடைய ‘சுனில் ஹைடெக்’ என்ற பெருநிறுவனத்தின் துணை நிறுவனமான சீம் இண்டஸ்ட்ரீஸும் விண்ணப்பித்துள்ளது. 38 பணிகளில் 24 பணிகளுக்கு இந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

அதில், நியாய விலையைவிட 20 சதவிகிதம் குறைத்து டெண்டருக்கு விண்ணப்பித்துள்ளது. இந்தப் பணியில், பொதுவாக மூன்று முதல் ஐந்து சதவிகிதம்தான் லாபம் கிடைக்கும். பெல் நிறுவனத்தின் டெண்டரை எடுத்தால், அதைக் காட்டியே ஷேர்மார்க்கெட்டில் நல்ல லாபமடைந்துவிடலாம் என இவ்வளவு குறைவாக டெண்டர் கேட்டுள்ளது” என்றார் அவர்.

சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார், “பிரதமர் மோடி, தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த இளந்தாமரை மாநாட்டில் ‘மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாகத் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சிறு குறு தொழிற்சாலைகளுக்கு உதவியாக இருப்போம்’ எனப் பேசினார். அதன்படி, பெல் நிறுவனத்துக்கு நிறைய உதவிகளைச் செய்துவந்தார். சில பிரச்னைகளை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவற்றைத் தீர்ப்பதற்கான முயற்சிகளையும் அவர்கள் எடுத்தனர். அவற்றையெல்லாம் கெடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை இருக்கிறது. இப்படிப் பணிகளைப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தருவது, பெல் நிறுவனத்தை நம்பியுள்ள 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை மூடும் நிலைக்குத் தள்ளும்; கிட்டத்தட்ட 1.50 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவு வாங்கக் காத்திருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள்!

மூன்று வருடங்களுக்கு முன்பு, இதே ‘சுனில் ஹைடெக்’ நிறுவனம் எடுத்த பணிகளைச் சரியாகச் செய்யாததால், அவற்றை நாங்கள் செய்தோம். மேலும், என்.டி.பி.சி எனப்படும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷனிடம் இந்த நிறுவனம் சர்ச்சையில் சிக்கியது. இப்படியான நிறுவனத்தைப் பணிக்கு அனுமதித்தால், அது பெல் நிறுவனத்துக்கே ஆபத்தாகிவிடும்’’ என்றனர்.

பெல் நிறுவனத்தில் பேசியபோது, ‘‘இது அகில இந்திய அளவிலான டெண்டர். யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.  நிறுவனங்களின் தனிப்பட்ட விஷயங்களை நாங்கள் பார்ப்பதில்லை. அவர்கள் தகுதியானவர்களா என்று மட்டும்தான் பார்ப்போம்’’ என்றனர்.

இப்போது பெல்சியா கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்து, சுனில் ஹைடெக் நிறுவனத்துக்கு டெண்டரைத் தர தடை உத்தரவு பெற்றுள்ளனர். பெல் நிறுவனத்தையும், அதைச் சார்ந்திருக்கும் சிறு, குறு நிறுவனங்களையும் அரசு காப்பாற்ற வேண்டும்.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism