Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

* ஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துக்கொண்டிருக்கும் ‘இறவாக்காலம்’ படத்தில், வில்லியாக நடித்திருக்கிறாராம் ஷிவதா நாயர். ரொமான்டிக் ஹாரர் திரைப்படமான இதில், ஷிவதாவின் கேரக்டருக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

* ‘‘2017 எனக்கு ரொம்ப ஸ்பெஷலான ஆண்டு. இதே சந்தோஷமும் உற்சாகமும் அடுத்த ஆண்டும் கிடைக்கணும்” என்கிறார், ஜனனி ஐயர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இவர் நடித்த ‘அதே கண்கள்’ படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். வருட இறுதியில் ரிலீஸ் ஆகவிருக்கும் ‘பலூன்’, ‘விதி மதி உல்டா’ படங்களில் முக்கியக் கேரக்டர்களில் நடித்திருக்கிறார். இவ்விரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவிருப்பதுதான், ஜனனி ஐயரின் உற்சாகத்துக்குக் காரணம்.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* டிகர்கள் பங்கேற்கும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியிலிருந்து விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் விலகியிருக்கிறார்கள். இதுகுறித்து இருவரும் செய்த ட்வீட் இணைய வைரல். ‘சி.சி.எல் கிரிக்கெட் நிர்வாகம் கொடுக்கும் பிரஷர்தான், இந்த முடிவுக்குக் காரணம். எல்லா விஷயங்களுக்கும் அவர்கள் கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. எங்களுக்கு கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாது என்பதைப்போல அவமதிக்கிறார்கள். எங்களுக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியம். அதனால்தான், நாங்கள் இருவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்தோம்’’ எனத் தெரிவித்திருக்கிறார், விஷ்ணு விஷால்.

* ங்கத் தேர்தல் சர்ச்சை, கந்துவட்டி, பஞ்சாயத்து, கருத்து வேறுபாடு... இப்படி தமிழ் சினிமாவுல ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்குனு சாதாரண ரசிகர்களுக்கும் புரிய ஆரம்பிச்சிருக்கு. ஆனாலும், கதை பிடிக்கலைன்னாலோ, இயக்குநர் அல்லது நடிகருடன் கருத்து வேறுபாடு வந்தாலோ, நடிகைகள் சொல்ற ‘கால்ஷீட் பிரச்னையால் விலகிட்டேன்’ங்கிற காலாவதியான வசனத்தை எப்போ மறப்பீங்க?

மிஸ்டர் மியாவ்

* தீபிகா படுகோனுக்கு ‘இந்த வருடத்தின் வைரல் நாயகி’ எனத் தாராளமாகப் பட்டம் கொடுக்கலாம். நடித்த முதல் ஹாலிவுட் படம் ரிலீஸ் ஆனது, ரன்வீர் கபூருடனான டேட்டிங், ட்விட்டரில் 2 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்களைப் பெற்றது, ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் ‘பத்மாவதி’ திரைப்பட சர்ச்சைகள்... எனத் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கிறார், தீபிகா.

* பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு உத்தரப்பிரதேசத்தின் பரேலி பல்கலைக்கழகம், கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது.யுனிசெஃப் அமைப்பின் குழந்தைகள் உரிமைகளுக்கான நல்லெண்ணத் தூதுவராக பிரியங்கா சிறப்பாகப் பணிபுரிந்து வருவதற்காக கொடுக்கப்பட்ட பட்டம் இது.

மிஸ்டர் மியாவ்

* ‘மாயவன்’ திரைப்படம் பரவலான வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குநராகவே களமிறங்கவிருக்கிறார், தயாரிப்பாளர் சி.வி.குமார். மூன்று கதைகளைக் கையில் வைத்திருக்கும் அவர், இப்போது திரைக்கதை உருவாக்கத்தில் பிஸி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism