Published:Updated:

வருகிறது ரஜினி பேரவை!

வருகிறது ரஜினி பேரவை!
பிரீமியம் ஸ்டோரி
வருகிறது ரஜினி பேரவை!

வருகிறது ரஜினி பேரவை!

வருகிறது ரஜினி பேரவை!

வருகிறது ரஜினி பேரவை!

Published:Updated:
வருகிறது ரஜினி பேரவை!
பிரீமியம் ஸ்டோரி
வருகிறது ரஜினி பேரவை!

மிழக அரசியலில் மாறாத சில காட்சிகள் எப்போதும் உண்டு. ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த பரபரப்பும் அப்படிப்பட்டதுதான். ‘‘அரசியலுக்கு வருவது தொடர்பான முடிவை டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கிறேன்’’ என ரஜினி சொல்ல, மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது. ‘ரஜினி என்ன சொல்லப்போகிறார்’ என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்திருக்க, அரசியல் தலைவர்களும் மாறி மாறிக் கருத்து சொல்லிக்கொண்டிருக் கிறார்கள்.

டிசம்பர் 26-ம் தேதி, ராகவேந்திரா திருமண மண்டபம் ரசிகர்களால் நிறைந்திருக்க, தன் வழக்கமான வெள்ளுடையில் கம்பீரமாக மேடை ஏறினார் ரஜினி. அவருக்கு அருகில் போடப்பட்ட இரண்டு நாற்காலிகளில் இயக்குநர் மகேந்திரனும், தயாரிப்பாளர் கலைஞானமும் அமர்ந்தார்கள். ‘‘அதிர்ஷ்டம் வரும்போது யாரும் குறுக்கே நிற்கமுடியாது’’ என்று கலைஞானம் அர்த்தத்துடன் பேச, ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். ‘‘அரசியல் பற்றி பேசக்கூடாது என்று சொல்லியே ரஜினி என்னை அழைத்தார்’’ என்று சொன்ன மகேந்திரன், அரசியல்தான் பேசினார். ‘‘தமிழகம், தலைவன் இல்லாமல் தவிக்கிறது. ரஜினி என்ன சொல்லப்போகிறார் என்பதை அறிந்துகொள்ள பொறுமை அவசியம். ரஜினியின் அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்’’ என்றார் அவர்.

வருகிறது ரஜினி பேரவை!

ரஜினியின் பேச்சு வழக்கம் போலவே மர்மங்கள் நிறைந்ததாக இருந்தது. ‘‘ரசிகர்களைப் பார்த்தவுடன் புத்துணர்வு ஏற்பட்டுள்ளது. என் பிறந்த நாளின்போது தனியாக இருக்க ஆசைப்பட்டதால்தான், ரசிகர்களைச் சந்திக்காமல் தவிர்த்தேன்’’ என்றவர், நேரடியாக அரசியல் பற்றிப் பேசினார். ‘‘அரசியல் எனக்குப் புதிதல்ல; அரசியல் பற்றித் தெரிந்ததால்தான், கஷ்ட நஷ்டங்கள் புரிந்ததால்தான் வரத் தயங்குகிறேன். போர் என்றால் அரசியல்தான். போருக்குச் சென்றால் ஜெயிக்க வேண்டும். வெற்றி பெற வீரம் மட்டும் போதாது; வியூகமும் வேண்டும்’’ என்றார் ரஜினி.  

‘31-ம் தேதி ரஜினியின் அறிவிப்பு என்னவாக இருக்கும்’ என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம். ‘‘ரஜினி ‘வியூகம்’ என ஒரு வார்த்தை சொன்னாரே... அதில்தான் எல்லா அர்த்தங்களும் இருக்கின்றன’’ என்றார்கள் அவர்கள். ‘‘கடந்த முறை ரசிகர்கள் சந்திப்பு நடந்தபோதே, 10 பேர் கொண்ட குழு ஒன்றை ரஜினி உருவாக்கினார். பல துறைகளிலும் அனுபவம் பெற்ற நபர்களைக் கொண்ட குழு அது. அவர்களுக்கு பல வேலைகளைக் கொடுத்திருக்கிறார். தமிழக அரசியலை மட்டுமின்றி, தமிழகத்தைப் பற்றியும் பல்வேறு தகவல்களை அவர்கள் அலசி ஏகப்பட்ட புள்ளிவிவரங்களை எடுத்திருக்கிறார்கள்’’ என்றனர் அவர்கள்.

ரஜினி ரசிகர் மன்றங்களில் இருந்தவர்களில் பலர், பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்குச் சென்று பொறுப்புகளை வகித்துவருகிறார்கள். ‘அவர்கள் எங்கெங்கே இருக்கிறார்கள், மறுபடியும் ரஜினியுடன் வந்து இணைவார்களா’ என்று தகவல் திரட்டப்பட்டுள்ளது.

‘ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரவுகள் வருவது ஒருபக்கம் இருக்கட்டும்; எதிர்ப்புகள் எந்தெந்தப் பக்கங்களி லிருந்து வரும், அவற்றைச் சமாளிக்க என்ன செய்வது?’ என விவரங்கள் சேகரித்தார்கள். ‘அரசியல் கட்சியினர், சாதி அமைப்புகள், சமூக அமைப்புகள் என வெவ்வேறு தரப்பினரும் எப்படி ரியாக்ட் செய்வார்கள். அவர்களை எதிர்கொள்வது எப்படி’ எனத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வருகிறது ரஜினி பேரவை!

இதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் பிரச்னைகள், தமிழக வாக்காளர்களின் மனநிலை, என்னென்ன காரணங்களை அடிப்படையாக வைத்து அவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கிறார்கள் என இதுவரை நடந்த தேர்தல்களின் ‘டேட்டா’க்களை வைத்து அலசி ஆராய்ந்திருக்கிறார்கள் இந்தக் குழுவினர்.

‘‘இதைத்தான் வியூகம் என்கிறார் ரஜினி. இவர்கள் கொடுத்திருக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு, டிசம்பர் 31-ம் தேதி ‘ரஜினி பேரவை’ என்ற அமைப்பைத் தொடங்குவது பற்றி ரஜினி அறிவிப்பு வெளியிடுவார். அது, அரசியல் கட்சிக்கான முன்னோட்டமாக இருக்கும்’’ என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஆனால், ‘‘இந்த ஐந்து நாள்களில் தனக்குக் கிடைக்கும் தகவல்களை வைத்து, அவர் எந்த முடிவையும் எடுக்கக்கூடும்’’ என்றும் ரசிகர் மன்றத்தில் இருக்கும் சீனியர் நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

ரஜினி மனதில் என்ன இருக்கிறது என்பது அவருக்கு மட்டும்தானே தெரியும்!

- எம்.குணா
படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு

போட்டோவுடன் டோக்கன்கள்!

ற்கெனவே ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டபோது, விடுபட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுடன் டிசம்பர் 26-ம் தேதி முதல் ரஜினி புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். இதற்காக, ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு சென்னை தலைமை மன்றத்திலிருந்து முறைப்படி டோக்கன் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்துக்கு சராசரியாக 200 பேருக்கு அழைப்பு போயிருக்கிறது. கடந்த முறை, பல மாவட்டங்களில் நிர்வாகிகள் அந்த டோக்கன்களை விற்றுக் காசு பார்த்ததாகப் புகார் எழுந்தது. அதனால், இந்தமுறை உஷாராக ஒவ்வொரு நிர்வாகியின் புகைப்படத்தை ஒட்டியே டோக்கன் அனுப்பியுள்ளார்கள். ‘புகைப்படத்தில் உள்ளவர்களை மட்டுமே அனுமதிப்போம்’ என்று கண்டிப்பாக உத்தரவு போயிருக்கிறது. டிசம்பர் 31-ம் தேதி சென்னை நிர்வாகிகளுடன் சந்திப்பு நடக்கும்போதுதான் அரசியல் பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுகிறார்.

- எம்.இராகவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism