Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

புத்தாண்டு பிறந்திருக்கிறது. புதிய சிந்தனைகளோடும் நம்பிக்கைகளோடும் 2018-ஐ எதிர்நோக்குகிறோம்.

தலையங்கம்

சென்ற ‘2017’ பல பாரிய தாக்கங்களை நம்மில் ஏற்படுத்தி, விடைபெற்றிருக்கிறது. ஆண்டின் தொடக்கத்திலேயே ‘ஜல்லிக்கட்டுக்கான போராட்டம்’ பண்பாட்டு அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்வதை நினைவூட்டி நடத்தப்பட்டது. ‘இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா?’ என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது நீதிமன்றத் தீர்ப்பு. பண்பாட்டுணர்வும் மக்கள்திரள் போராட்டங்களும் எதையும் சாதிக்கும் என்ற நம்பிக்கையை 2017 நமக்குத் தந்திருக்கிறது. இந்தப் புதிய நம்பிக்கை அளித்திருக்கும் மனஎழுச்சியுடன் நாம் இந்த ஆண்டிலும் பண்பாடு குறித்த உரையாடல்களைத் தொடர்வோம்.

ஜனவரி என்பது இலக்கிய வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தனித்துவமான மாதம். சென்னைப் புத்தகக்காட்சி ஓர் இலக்கியத் திருவிழாவாகவே எதிர்கொள்ளப்படுகிறது. நம்பிக்கையூட்டும் இளம் எழுத்தாளர்கள் ஒவ்வோர் ஆண்டிலும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். வாசிப்புக்கான தளம் விரிவுபடுத்தப்பட்டு, புதிய வாசகர்களும் உருவாகிவருகிறார்கள். சிறியதும் பெரியதுமாக நடத்தப்படும் புத்தக வெளியீட்டு விழாக்கள், இந்த மாதத்தை இன்னும் இனிமையாக்கும். ‘புதிய புத்தகங்கள் படிக்கக் கிடைக்கும்’ என்னும் உணர்வே, நமக்குள் இன்னும் உற்சாகத்தை அதிகரிக்கிறது.

இயற்கை விவசாயம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியம், விவசாயிகளின் நிலை போன்ற பல விஷயங்கள் இன்று தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன. ஆனால், பல நூற்றாண்டுகளாக விவசாயத்தையும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலையங்கம்

கால்நடைகளையும் கொண்டாடும் மரபு தமிழர்களுக்கு உண்டு. மதச்சார்பற்று நடக்கும் பண்பாட்டு விழாவான பொங்கல், தமிழர்களுக்கே உரிய தனித்துவமான நிகழ்வு. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழரின் வாழ்வியல் என்பதை போகியும் அடுத்துவரும் பொங்கலும் உணர்த்துகின்றன. அந்தவகையில் காலத்துக்கு ஒவ்வாத பழமைவாதச் சிந்தனைகளை அகற்றுவதும் புதிய சிந்தனைகளை எதிர்கொள்வதும் இன்றைய தேவை. நவீன உலகின் மாற்றங்கள் குறித்த புரிதல் என்பது இருத்தலுக்கு அத்தியாவசியமானது.

புதிய சிந்தனைகளை உருவாக்கிக்கொள்ள வாசிப்பை விரிவுபடுத்த வேண்டும். எனவே, பழமையின் வீழ்ச்சியையும் இயற்கையைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தையும் சொல்லும் போகியும் பொங்கலும் வரும் அதே மாதத்தில், சென்னைப் புத்தகக்காட்சி நடக்கிறது என்பது கூடுதல் பொருத்தமானது. சென்ற ஆண்டில் கீழடி ஆய்வுகள் நிறுத்தப்பட்டது குறித்துப் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. தமிழர்களின் வரலாற்று உணர்வுக்கு இந்த எதிர்ப்புக்குரல்களே அடையாளம். இந்த ஆண்டில் கீழடி ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று, தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை குறித்து புதிய வெளிச்சங்களை உருவாக்கும் என்று நம்புவோம்.

‘விகடன் தடம்’ வாசகர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism