பகல் கனவுகள் விளையும்
பருவ வயல்களின்
துருவ வரப்புகளில் அமர்ந்திருக்கிறோம்
காட்சிகளை வருடியபடி
இமைகளைப்போல
எதிரும் புதிருமாக.

ஒரு நொடியில் விடிந்து
மறு நொடியில் அடையும்
மின்மினிப் பொழுதுகளில்
கரைந்துகொண்டிருக்கின்றன
சதா சர்வ காலமும்
செக்கச்சிவந்த கண்ணின் மணிகளும்

மூச்சுக்காற்றில் கொதிக்கும்
ஆத்திச்சூடியின் இளஞ்சூட்டில்
ஆடியசைகின்றன உன் வார்த்தைகள்
நீ பேசும்போது.

நாடி நரம்புகளெங்கும் இயல்பாக
முடிச்சுகளாகி இறுகுகின்றன
ஓசைப் பந்தெனத் துள்ளிச் செல்லும்
உன் பேச்சை
கேட்பதா பார்ப்பதா என்ற குழப்பம்

வானத்தில் நீந்தும் விண்மீன்களின்
மச்ச மந்திர நடனங்களை
கண்டு கேட்டு உண்டுயிர்த்து
ரசித்தபடி லயித்திருக்கிறது
விடிந்துவிட்டதைக்கூட அறியாத
இந்த இரவு

ஒரு கையில் இருளையும்
மறு கையில் வெயிலையும் ஏந்தியபடி
என்ன செய்வதென்று தெரியாமல்
குழம்பிக்கொண்டிருக்கிறோம்
நானும் மற்றும் இந்தச் சபிக்கப்பட்ட நாளும்

உன் சொற்களிலிருந்து
அறுந்துவிழும் அர்த்தங்கள்
சுழன்ற வண்ணம் மிதக்கின்றன
அந்தரத்தில்
இப்போது நீ இக்கணத்தில்
ஆகாயத்தின் அந்தப்புரத்திலிருந்தாலும்
மிகமிக நெருங்கி வந்துவிட்டது
மிதமான சூட்டோடு
உயிரின் மெல்லிசையில்.
ஒரு முத்தம்!

பகல் கனவுகள் விளையும்
பருவ வயல்களின்
துருவ வரப்புகளில் அமர்ந்திருக்கிறோம்
காட்சிகளை வருடியபடி
இமைகளைப்போல
எதிரும் புதிருமாக.

ஒரு நொடியில் விடிந்து
மறு நொடியில் அடையும்
மின்மினிப் பொழுதுகளில்
கரைந்துகொண்டிருக்கின்றன
சதா சர்வ காலமும்
செக்கச்சிவந்த கண்ணின் மணிகளும்

மூச்சுக்காற்றில் கொதிக்கும்
ஆத்திச்சூடியின் இளஞ்சூட்டில்
ஆடியசைகின்றன உன் வார்த்தைகள்
நீ பேசும்போது.

நாடி நரம்புகளெங்கும் இயல்பாக
முடிச்சுகளாகி இறுகுகின்றன
ஓசைப் பந்தெனத் துள்ளிச் செல்லும்
உன் பேச்சை
கேட்பதா பார்ப்பதா என்ற குழப்பம்

வானத்தில் நீந்தும் விண்மீன்களின்
மச்ச மந்திர நடனங்களை
கண்டு கேட்டு உண்டுயிர்த்து
ரசித்தபடி லயித்திருக்கிறது
விடிந்துவிட்டதைக்கூட அறியாத
இந்த இரவு

ஒரு கையில் இருளையும்
மறு கையில் வெயிலையும் ஏந்தியபடி
என்ன செய்வதென்று தெரியாமல்
குழம்பிக்கொண்டிருக்கிறோம்
நானும் மற்றும் இந்தச் சபிக்கப்பட்ட நாளும்

உன் சொற்களிலிருந்து
அறுந்துவிழும் அர்த்தங்கள்
சுழன்ற வண்ணம் மிதக்கின்றன
அந்தரத்தில்
இப்போது நீ இக்கணத்தில்
ஆகாயத்தின் அந்தப்புரத்திலிருந்தாலும்
மிகமிக நெருங்கி வந்துவிட்டது
மிதமான சூட்டோடு
உயிரின் மெல்லிசையில்.
ஒரு முத்தம்!