சீழ்பிடித்த வாழ்க்கை மீது வந்தமரும்
ஈக்களுக்காக விசிறி கைகள் ஓய்ந்துவிட்டன.
பிழைப்பதற்காக மண்டியிட்டுக் கண்ணீர் சிந்தும்
மூட்டுகளோடு நீளும் பாதையில்
இரவல் கேட்டே தேய்ந்துபோன பற்களை
வெண்குச்சி கொண்டு தட்டி
உப்பு இருக்கிறதாவெனக் கேட்கும் தளுக் நங்கைக்கு வணக்கங்கள்.
நமக்கெனத் தேநீர் சொல்கையில்தான்
காத்திருந்தாற்போல விழும் சிறு வண்டு அதில்.
“எடுத்துப் போட்டுக் குடி” என
கண்கள் உருட்டி எச்சரிக்கும்
சிப்பந்தி அன்புக்குத் தாழ்ப்பணிந்து
வண்டை முத்தமிடுகிறேன்.
பெரும்பாறையெனச் சமைந்து நிற்கும் ஒவ்வொரு நாளையும்
நகர்த்தும் தோளெங்கும் பரவச வலி.
மீனுக்கும் கீரைக்கும் பேரம் பேசுவதில்
கரையும் சாமர்த்தியங்கள் மீறியும்
சொத்தைகள் கூடைப் பார்த்து விழுவதை
கைகொட்டி மகிழும் சமூகத்தில்தான்
நேற்று ஒரு துக்கத்தை மிகுந்த இரங்கலுடன் விசாரித்து வந்தேன்.
ஆயினும்,
தன் எச்சிலில் உருண்டு புரளும் சிலந்தியென
அறுபட இழைத்துக் கடக்கும் பாடு எனது.
தோழர்களே
நீங்கள் மட்டும் ‘உச்’ கொட்டி
“வாழ்க்கையென்பது...” என ஆரம்பிக்காதிருந்தால் போதுமானது.
இயலுமெனில்
குளிர் கொல் இவ்விரவில்
நடைமேடைக் குடிலுக்குள்ளிருந்து நீளும்
நோயாளியின் மீந்திருக்கும் விரல்களை
இந்த நகரத்தின் மொத்தக் கருணையெனப் போர்த்தும்
நீலம் சிவப்பு மாறிமாறி எரியும் நெருப்பு
தன் இசைத்தலை முடித்துக்கொள்ளும் முன்பு
ஓட்டமும் நடையுமாய் வந்து
கண்ணிலொற்றிக் கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்களேன்.