Published:Updated:

அடுத்து என்ன? - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்

அடுத்து என்ன? - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்

அடுத்து என்ன? - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்

அடுத்து என்ன? - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்

அடுத்து என்ன? - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்

Published:Updated:
அடுத்து என்ன? - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்

ரு சமூகத்தின் வாழ்வை அதன் எழுச்சி மற்றும் வீழ்ச்சியோடு படைப்பாக்கம் செய்வது ஒரு கலையல்ல.

அடுத்து என்ன? - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்

அது ஒரு தரிசனம்.

தரிசனம், எழுத்து வல்லமையால் வாய்ப்பதல்ல; கற்றுக்கொண்ட உத்திகளால் வாய்ப்பதும் அல்ல; வாழ்வே ஒரு துறவெனும் விதி வந்து சேர்வதால் வசியப்பட்டுப் போவது. அதை எழுத்தாக்கம் செய்யும்போது படைப்பெனும் பரிமாணம் பெறுகிறது. ஒருவேளை இந்தக் ‘கர்ப்ப நிலம்’ என்ற நாவல், வாசிப்பவனுக்கு ஒரு தரிசனத்தைத் தந்தால், துர்விதியொன்று நல்விதியாக பரிவர்த்தனமாகி மகிமைகொள்ளலாம். என் வாழ்வுக்கு அது மகத்துவம் சேர்க்கலாம். ஒரு தவசியின் வரம்போல அப்போது அதை ஏற்றுக்கொள்வேன்.

அரசில்லாத மக்கள்சமூகங்கள், தம்மைச் சூழும் அரசியலால் எப்படி அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பது பற்றி இந்த உலகம் கவனம் கொள்ளவில்லை. கவலைப்படவும் இல்லை. ஏனெனில், இது அரசுகளின் உலகம். அரசுள்ள மக்கள் சமூகங்களின் மனித வாழ்க்கைப்பாடுகள்தான் பேசப்படுகின்றன. பேசவைக்கப்படுகின்றன.

அரசிழந்த மக்கள்சமூகத்தில் தம்மைச் சூழும் அரசியலால் எப்படித் தனிமனிதர்கள் வாழ்க்கையில் தாக்கத்துக்கு உள்ளாகிறார்கள்; அவர்களின் வாழ்வுச் சிக்கல்கள் எங்கேயிருந்து பிறக்கின்றன; எப்படி வடிவம்கொள்கின்றன என்ற கண்ணோட்டத்தில், அவர்களின் வாழ்வை, கலைப்படைப்பாக முன்வைக்க எழுத்துலகமும் கலையுலகமும் தவறிவருகிறது. நைஜீரிய எழுத்தாளரும் போராட்டக்காரருமான சினுவா ஆச்சுபே இந்தக் கண்ணோட்டத்தில் படைப்பை அணுக முயன்றார் எனக் காண்கிறேன். இந்தக் கண்ணோட்டத்தில் அந்த மக்களின் துர்விதியான துயர்ப்பாடுகளை ஒரு வாசகன் அவரது படைப்புகளில் தரிசிக்க முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து என்ன? - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்

தனிமனித வாழ்க்கையின் ஒவ்வோர் இழையும் அரசியல் அகற்றிப் பார்க்க முடியாதது. மனிதன் அரசியல் விலங்காகிவிட்டபோது, வாழ்வை அதன் பின்னணியில் வைத்து ஒளிபாய்ச்சிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் முழுமையான தரிசனத்தைப் பெற முடியும்.

 ஈழத் தமிழ்ச் சமூகம், தன் வாழ்வின் இடர்களுக்கு அரசியல் பரிகாரம் தேடுவதன் மூலம் இடர்களை நீக்க முடியும் என்ற ஓர்மையில் இயங்கிய சமூகம். அரசியல் விழிப்பு பெற்ற சமூகம். அந்த மண்கொண்ட கர்ப்பம் அது. அந்த ஓர்மையே போர் அரசியலில் அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தியது. முப்பதாண்டுக் காலம் உள்நாட்டு அரச அதிகாரத்திற்கு எதிராகவும் உலக சக்திகளுக்கு எதிராகவும் தனது ஓர்மையில் விட்டுக்கொடுப்பற்று தனித்து நின்று போர் செய்த சமூகம். இதனால், இரு தலைமுறைக் காலம் போரும் போர் சார்ந்த வாழ்வுமாக ஈழமண் புதிதான வாழ்வுப் பழக்கத்தைக்கொண்டது.

நவீனத் தமிழ் வரலாற்றில் போர்வாழ்வு வாய்க்கப் பெற்ற மக்கள்சமூகமாக ஈழத்தவர்களே உள்ளார்கள். நவீன இலக்கியத்திலும்  போர்இலக்கியம் என்ற வகைமாதிரி வந்துசேரவேண்டியிருப்பதும் ஈழத்தில் இருந்துதான். தமிழ் இலக்கியத்திற்கு செழுமையும் விரிவும் இந்தப் போர் இலக்கியத்தால் கிடைக்க வேண்டி இருக்கிறது. போர் தந்த வாழ்க்கைப்பாடுகள், மனித நாகரிகம், தான் அடைந்ததாக நம்பும் உயரத்தைக் கேள்விக்கு உட்படுத்துகின்றன. மறுபரிசீலனைக்கு நிர்பந்திக்கின்றன. மனிதன் ஓர் அரசியல் விலங்கு என்பதையும் மெய்ப்பிக்கின்றன. அரசியல் விலங்கு கட்டமைக்கும் கற்பிதங்களைத் தட்டி உடைத்து இந்த வாழ்வனுபவம் மெய்ப்பொருளை வேறு திசையில் தேட வைக்கின்றன. இங்குதான் வாழ்வின் தரிசனத்திற்கான புதியவெளி உருவாகின்றது. இந்தத் தரிசனவெளி உலக மக்கள் அனைவருக்குமானது. அதைக் கையளிக்கும்  கடப்பாடு, அந்த அனுபவத்தை ஏந்திய மக்களுக்கானதாக இருக்கிறது. இந்தப் புரிந்துகொள்தலே என்னை எழுத்தில் இயங்கத் தூண்டுகிறது. மனிதன் அடைந்த ஞானம், பண்பாடு, அறம், ஒழுக்கம் அனைத்தும் போர் என்ற அனர்த்தத்தில், அது உருவாக்கும்  கொந்தளிப்பான  உணர்ச்சியில் எத்தகைய வடிவத்தை எடுத்துக்கொள்கின்றது என்பது, மனிதன் உள்ளபடிக்கு என்னவாக இருக்கிறான் என்பதைத்  தரிசிக்க உதவுகின்றது.

அடுத்து என்ன? - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்

‘எத்தகையத் தொன்மமும் பண்பாட்டுத் தொடர்ச்சியும்கொண்ட மக்கள்’ தமது கூட்டுவாழ்வைக் காத்துக்கொள்ள அரசு எனும் அலகில்லாததால் அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதை, அவர்களின் வாழ்வுப் போக்கினூடே விரிக்க முயல்கிறது; வேரையும் விழுதையும் ஆழமாகத் தேடுகிறது எனது ‘கர்ப்ப நிலம்’ எனும் புதிய நாவல்.

அன்பு, அரவணைப்பு, காதல், காமம்  என்ற மென்உணர்வுகளையும் பகை, வீரம், துரோகம், ஈகம் என்ற வன் உணர்வுகளையும்  விசாரணை செய்வதென்பதே எழுத்தில் பெரும் அனுபவம்தான். அத்தகைய ஒரு களமாகத்தான் ‘கர்ப்ப நிலம்’ வாசகர் முன்  வைக்கப்படுகிறது. மனிதப் பெருநாடகத்தின் இன்னோர் பிரதியாகவும் இந்த நாவலைக் காணலாம் என்று நம்புகிறேன். ஒரு நாவலில் கதையைத் தேடுபவர் சிலர், மொழியைத் தேடுபவர் சிலர், கலையம்சத்தைத் தேடுபவர் வேறுசிலர். இப்படித் தேடல்கள்  வாசகருக்கு வாசகர் வேறுபடலாம். நானோ வாய்த்த வாழ்வை அதற்குண்டான அக-புறக் காரணிகளின் வெளிச்சத்தில் வைத்து விசாரணையைத் தேடுபவன். அதனூடே தரிசனம் பெற அவாவி நிற்பவன்.

என் வாழ்காலத்தில் கேட்டும் பார்த்தும் உணர்ந்தும் அறிந்தும் பட்டும் அனுபவித்த பேருண்மைகளைப் படைப்பாக்கம் செய்வதே எனது படைப்பின் நெறி. அதுவே படைப்பின் தர்மம் எனக்கொள்ளும் ஒழுக்கம் என்னுடையது. இனிவரும் உங்களிடம் ‘கர்ப்ப நிலம்’. கசடோடு கடந்து போவதும் கசடறுத்துக் கண்டுகொள்வதும் என் கடனல்ல. இது பாழில் விழுமா, பார்வை தருமா என்பதறியேன். நீரே அறிவீர் அதை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism