Published:Updated:

எப்போதும் உறங்காத கண்கள் - ஜூ.வி-யுடன் நாங்கள் - மனுஷ்யபுத்திரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எப்போதும் உறங்காத கண்கள் - ஜூ.வி-யுடன் நாங்கள் - மனுஷ்யபுத்திரன்
எப்போதும் உறங்காத கண்கள் - ஜூ.வி-யுடன் நாங்கள் - மனுஷ்யபுத்திரன்

எப்போதும் உறங்காத கண்கள் - ஜூ.வி-யுடன் நாங்கள் - மனுஷ்யபுத்திரன்

பிரீமியம் ஸ்டோரி

ஜூனியர் விகடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தருணத்தைக் கடந்துகொண்டிருக் கிறது. ஜூ.வி-யின் இந்த நீண்ட நெடிய பயணத்தில் அதன் முதல் இதழிலிருந்து நானொரு வாசகனாக இருந்துவந்திருக்கிறேன். ஜூ.வி., அதுவரையிலான தமிழ் இதழியலில் ஒரு திருப்புமுனை. புலனாய்வு இதழியலுக்கு அது ஒரு முழுமையான வடிவத்தைக் கொடுத்தது. ஊடகங்களின் முதன்மையான பணி, சமூக – அரசியல் நிகழ்வுகளைக் கண்காணிப்பது. அதை வெகு செம்மையாக ஜூ.வி நிறைவேற்றி வந்திருக்கிறது. அதற்கு முன்பு அரசியல் கட்டுரைகளைத் தீவிரமாக வெளியிடும் பல இதழ்கள் இருந்தபோதிலும்கூட, களத்திற்கு நேரடியாகச் சென்று செய்திகளுக்குப் பின்னே இருக்கும் உண்மைகளையும், எந்தப் பத்திரிகையிலும் இடம்பெறாத செய்திகளையும் வெளிக்கொணர்ந்தது ஜூ.வி.

எப்போதும் உறங்காத கண்கள் - ஜூ.வி-யுடன் நாங்கள் - மனுஷ்யபுத்திரன்

ஜூ.வி-க்கு மூன்று முகங்கள் உண்டு. ஒன்று, அரசியல் முகம். இரண்டாவது, சமூக முகம். மூன்றாவது, இலக்கிய முகம். தமிழகத்தின் இரவு வாழ்க்கையைப் பற்றிய பல புதிய சித்திரங்களை ‘ஆந்தை’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் வழங்கியது. ஜூ.வி-யின் செய்தியாளர்கள் இரவு முழுக்க தமிழகத்தின் இருண்ட மூலைகளைத் தேடிச் சுற்றித் திரிந்தார்கள். அதன் ரகசிய குற்ற நிழல்களை, பெருமூச்சுகளை, ஆசாபாசங்களைப் பதிவு செய்தார்கள். ‘ஆந்தை’, சமூகத்தின் வெளிச்சம் படாத பகுதிகளின்மேல் பறந்தது என்றால், ‘கழுகார்’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகளை ஜூ.வி ஊடுருவிப் பார்க்கிறது. ‘கழுகார்’ நம் முன்வைத்த பல அரசியல் யூகங்கள், பின்னர் துல்லியமாக நடந்த தருணங்கள் உண்டு.

நகர வாழ்க்கையை மட்டும் ஜூ.வி. பிரதிபலிக்கவில்லை. நமது கிராமத்து வாழ்க்கையின் வேர்களையும் விசித்திரங்களையும் தேடிச் சென்று பல உலுக்கும் கட்டுரைகளை வெளியிட்டது. விநோத சடங்குகள், பண்பாட்டு வழக்கங்கள், சாதியப் பண்பாட்டின் கூறுகள் எனப் பலவற்றையும் அவை பேசின.

புலனாய்வு இதழியலில் ஜூ.வி-க்குப் பெரும் கவனத்தைப் பெற்றுத் தந்த நிகழ்வு, ‘ஆட்டோ சங்கர்’ விவகாரம்தான். தமிழகத்தையே உலுக்கிய தொடர் குற்றங்கள் அவை. பாலியல் தொழிலுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் இடையே இருக்கும் தொடர்புகளை ‘ஆட்டோ’ சங்கர் விவகாரம் மூலமாக ஜூ.வி வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. அதற்குப் பிறகு வீரப்பன் விவகாரத்திலும், ஜூ.வி முக்கியமான பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தது.

எப்போதும் உறங்காத கண்கள் - ஜூ.வி-யுடன் நாங்கள் - மனுஷ்யபுத்திரன்

ஜூ.வி-யில் வெளிவந்த பல தொடர்களும், பத்திகளும் தமிழ் வாசகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஈழத்தில் 1983-ல் நடந்த ஜூலை கலவரத்தின்போது தமிழ்ப் போராளிகள் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகிய மூவருக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைப் பற்றி ஜூ.வி வெளியிட்ட தொடர், தமிழகத்தையே உலுக்கியது. அதுவே, ஈழப் போராட்டத்தின் பின்புலத்தை வெகுஜனத் தளத்தில் முதலில் பதிவுசெய்த தொடர் எனலாம். ‘சீவலப்பேரி பாண்டி’யின் கதையை ஜூ.வி வெளியிட்டபோது, அதைத் தமிழகமே பரபரப்பாக வாசித்தது. பின்னர் அது திரைப்படமாகவும் வெளிவந்தது. அது ஒரு கொள்ளைக்காரனின் கதையல்ல; சமூகத்தின் அநீதிகளையும், அந்த அநீதிகளின் வழியாக ‘சீவலப்பேரி பாண்டி’ போன்ற மனிதர்கள் எப்படி உருவாகிவருகிறார்கள் என்பதையும் உணர்த்திய நிஜம். போலி என்கவுன்ட்டர்கள் பற்றி வாசகர்கள் பரவலாகத் தெரிந்துகொண்டதும் அப்போதுதான்.

எப்போதும் உறங்காத கண்கள் - ஜூ.வி-யுடன் நாங்கள் - மனுஷ்யபுத்திரன்

ஜூ.வி-யில் சுஜாதா நீண்ட காலமாக எழுதிய ‘ஏன்? எதற்கு? எப்படி?’ கேள்வி பதில் தொடர், அறிவியல் தமிழை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றியது. கூகுள் தேடல் எந்திரம் வராத ஒரு காலகட்டத்தில், சிக்கலான அறிவியல் உண்மைகளைக் கடைக்கோடி வாசகனுக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் எளிய, அங்கதம் மிகுந்த, மின்னல் மொழியில் சுஜாதா எழுதிச் சென்றார். கி.ராஜநாராயணன் எழுதிய ‘கரிசல் காட்டுக் கடுதாசி’, கரிசல் இலக்கியத்துக்கு ஒரு பாதை போட்டுத் தந்தது. கவிக்கோ அப்துல் ரகுமான், தனது தொடர்கள் வழியாக சூபியிஸத்தையும், கஸல் கவிதைகளையும் தமிழுக்குப் பரவலாகக் கொண்டுவந்தார். தமிழ் வாசகர்கள் அதுவரை அறியாத ஒரு புதிய இலக்கியப் பரப்பைத் திறந்து காட்டினார். அதேபோல பிரபலங்கள் தங்கள் அனுபவங்களைச் சொல்லும் ‘காதல் படிக்கட்டுகள்’ தொடர், பெரும் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியது. முக்கியமாக, அந்தத் தொடரில் இடம்பெற்றிருந்த ‘ரகுவரன் – ரோஹிணி’யின் அனுபவங்களும், கலைஞரின் இளமைக்கால மனப்பதிவுகளும் இப்போதும் என் நினைவில் இருக்கின்றன.

ஜூ.வி-யில் வெளிவந்த வரலாற்றுத் தொடர்கள், பரந்துபட்ட வாசகர்களின் கவனத்தை ஈர்த்தன. மதன் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ தொடரில் முன்வைக்கப்பட்ட வரலாற்றுப் பதிவுகளின்மீது எனக்குச் சில விமர்சனங்கள் உண்டு என்றபோதிலும், வரலாற்றை ஒரு பரபரப்புத் தொடர்போல படிக்க வைத்தார் மதன். அதேபோல இந்திய வரலாற்றின் வெளிச்சம்படாத பல பக்கங்களைத் திறந்து காட்டிய ஒரு தொடராக எஸ்.ராமகிருஷ்ணனின் ‘எனது இந்தியா’ இருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், ஜூ.வி-யில் நீண்டகாலப் பத்தியொன்றை எழுதினார். சமூக, அரசியல், பண்பாட்டுப் பிரச்னைகள் குறித்தும், தமிழகத்தின் உரிமை சார்ந்த விவகாரங்கள் பற்றியும் ரவிக்குமார் எழுதினார். ப.திருமாவேலன் ஜூ.வி-யில் எழுதிவரும் அரசியல் கட்டுரைகள், சம கால அரசியல் குறித்துச் சமரசமற்ற விமர்சனங்களை முன்வைக்கின்றன.

எப்போதும் உறங்காத கண்கள் - ஜூ.வி-யுடன் நாங்கள் - மனுஷ்யபுத்திரன்

ஜனநாயகத்துக்காகவும், கருத்துச் சுதந்திரத்துக்காகவும் எப்போதும் போராடுகிற ஓர் இதழாக ஜூ.வி இருந்துவருகிறது. அந்தப் போராட்டத்துக்காக அது விலையும் கொடுத்திருக்கிறது. ஜூ.வி என்பது, கடந்துபோகிற நிகழ்வுகளின் பதிவேடு அல்ல; ஒரு காலகட்டத்தின் வரலாற்று ஆவணம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு