ஒவ்வோர் ஆண்டும் யானைகள் நலவாழ்வு முகாம் ஆரம்பித்துவிட்டால், சந்தோஷத்துக்கும் சர்ச்சைகளுக்கும் குறைவிருக்காது. இந்த வருடமும் அப்படியே! முகாமில் குதூகல கும்மாளம் போடுகின்றன கோயில் யானைகள். அதை வியந்து வேடிக்கைப் பார்க்கவேண்டிய தேக்கம்பட்டி கிராமத்து மக்களோ, வேதனையில் துடிக்கிறார்கள்.

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் ஜனவரி 4-ம் தேதி தொடங்கிய யானைகள் நலவாழ்வு முகாமில், புதுச்சேரியைச் சேர்ந்த இரண்டு யானைகள் உள்பட தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 33 யானைகள் கலந்துகொண்டுள்ளன. 48 நாள்கள் நடக்க இருக்கும் இந்த முகாமை, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை நடத்துகிறது. 2003-ம் ஆண்டுக்குப் பிறகு, அ.தி.மு.க ஆட்சியில் தவிர்க்க முடியாத நிகழ்வாகிவிட்டது இந்த முகாம். 2003-ல் முதுமலையில் முதன்முதலாக யானைகள் முகாம் ஆரம்பிக்கப்பட்டபோதே எக்கச்சக்க சர்ச்சைகள். ‘ஜோசியர்கள் சொல்லித்தான் கோயில் யானைகளுக்கு ஜெயலலிதா முகாம் நடத்துகிறார்’ என்பதில் ஆரம்பித்து, ‘கோயில் யானைகளால் காட்டுயானைகளுக்குத் தொற்று நோய்கள் ஏற்படும்’ என்பதுவரை பல்வேறு எதிர்ப்புகள். இப்போதுவரை இந்த முகாமுக்கு ஏதாவதொரு ரூபத்தில் எதிர்ப்பு எழுந்தபடி உள்ளது.

‘இங்கே முகாம் நடத்தக்கூடாது’ என்று தேக்கம்பட்டியைச் சுற்றியுள்ள 23 கிராமங்களின் பொதுமக்களும் விவசாயிகளும் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். யானைகள் முகாமை எதிர்த்து தேக்கம்பட்டி வீதிகளில் கறுப்புக் கொடிகள் பறக்கின்றன. என்னதான் பிரச்னை? ஆர்ப்பாட்டம் நடத்திய, 23 கிராம விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாண்டுரங்கனிடம் பேசினோம். ‘‘வெளியில இருந்து பாக்குறவங்களுக்கு, ‘யானைகளுக்கு முகாம் நடத்தினா இவங்களுக்கு என்னவாம்’னு தோணும். ஆனா, ‘தலைவலியும் வயித்துவலியும் தனக்கு வந்தாதான் தெரியும்’ங்கிற கதைதான் இது. இங்கே இருந்து பார்த்தாதான் எங்களோட வேதனை புரியும்’’ என்று திகிலுடன் ஆரம்பித்தார்.

‘‘வனப்பகுதியில் பவானி ஆற்றங்கரையில்தான் முகாம் நடக்குது. இது காட்டு யானைங்க இடம்விட்டு இடம் மாறுகிற நேரம். இந்த வழியாதான் காட்டு யானைங்க கூட்டம் கூட்டமா போவும். இந்த நேரத்துல இங்கே கோயில் யானைகளுக்கு முகாம் நடத்துறது நியாயமா. முகாமில் இருப்பது பெண் யானைங்க. அதுங்களோட வாசத்துக்கு மயங்கி, காட்டுலேருந்து ஆண் யானைங்க படையெடுத்து வந்துரும். பக்கத்துல இருக்கிற நெல்லிமலையில இப்போ இருக்கிற காட்டு யானைங்க எப்ப வேணும்னாலும் முகாமை நோக்கி வரலாம்.

‘ஐந்து கண்காணிப்புக் கோபுரங்கள் அமைச்சிருக்கோம். தொங்கும் மின்வேலி அமைச்சிருக்கோம்’னு ஃபாரஸ்ட்காரங்க இங்க உள்ள மக்களுக்கு சமாதானம் சொல்றாங்க. காட்டு யானைகளை அவ்வளவு சாதாரணமா விரட்டிட முடியாது. வெடி போட்டு விரட்டுனா, அதுங்க வெறியோட ஊருக்குள்ளதான் வரும். அப்போ, என்ன வேணும்னாலும் நடக்கலாம். விவசாயப் பயிர்களை நாசம் செஞ்சாகூட, போனால் போகுதுனு பொறுத்துக்கலாம். மக்கள் உசுர எடுத்துடுச்சின்னா, அந்த உசுர யாரால திருப்பித்தர முடியும்? 48 நாளும் எங்களுக்குப் பொட்டுத் தூக்கம் இருக்காது. 2015-ல் முகாமுக்குள்ள காட்டு யானைங்க புகுந்து களேபரம் ஆகியிருக்கு. இப்போ மட்டும் இல்லை... முகாம் முடிஞ்ச பிறகும் எங்களுக்குப் பிரச்னை இருக்கு. முகாமில் இருக்கும் கோயில் யானைங்க வாசத்துக்கு வரும் காட்டு யானைங்க ஊருக்குள்ள புகுந்து பயிர்களை பார்த்துச்சிருன்னா, அதுங்க ருசி கண்டுரும். அப்புறம் வருஷா வருஷம் ஊருக்குள்ள வர ஆரம்பிச்சிரும்.

அதுங்களை சொல்லிக் குத்தமில்ல. இதெல்லாம் தெரிஞ்சும் செய்யுறாங்களே அதிகாரிங்க... அவுங்கள சொல்லணும். யானைகள் நலனில் அக்கறைகாட்ட வேண்டாம்னு சொல்லலை. எங்கள் நலனையும் நினைச்சுப் பாருங்கன்னுதான் சொல்றோம். அரசாங்கத்துக்கு எங்க பிரச்னை புரியவே மாட்டேங்குது. மக்கள் குடியிருப்பு இல்லாத எத்தனையோ இடங்கள் இருக்கு. அங்கே இந்த முகாமை நடத்தினால் என்ன? யார் தடுக்கப்போறாங்க?’’ என்று நொந்துகொள்கிறார் பாண்டுரங்கன்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ‘‘கோயில் யானைகளின் வாசத்தால் ஈர்க்கப்பட்டுக் காட்டு யானைகள் வரும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. அப்படி வந்தால், அவற்றை விரட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். அதனால், மக்களின் பயம் அவசியமற்றது. இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெயாவிடம் இந்தப் பிரச்னை குறித்து எடுத்துச்சொல்லியிருக் கிறோம். அடுத்த முறை திருச்சியில் நடத்தலாம் என்ற ஆலோசனையும் கூறியுள்ளோம். இதுகுறித்து பரிசீலனை செய்வதாகச் சொல்லி யிருக்கிறார்’’ என்கிறார்கள்.

யானைகளுக்குப் புத்துணர்வு முகாம் முக்கியம்; மனிதர்களின் பாதுகாப்பு அதைவிட முக்கியம்.

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்