தமிழகமே ‘ஆன்மிக அரசியல்’ பற்றிய விவாதத்தில் மூழ்கியிருக்கும் நேரத்தில், திராவிடர் கழகம் திருச்சியில் உலக நாத்திகர் மாநாட்டை நடத்தியுள்ளது. இந்த மூன்று நாள் மாநாடு, திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. நாத்திகர் மாநாட்டை எதிர்த்து, ‘ஆத்திகர் மாநாடு’ நடைபெறும் என வாட்ஸ்அப்பில் தகவல் பரவியதால் திருச்சியில் பதற்றம் ஏற்பட்டது. மேலும், இந்த மாநாட்டுக்கு அரசுத் தரப்பில் பல நெருக்கடிகள் தரப்பட்டன. அதனால், திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்துக்கு மாநாடு மாற்றப்பட்டது.

இந்த மாநாட்டில் பேசிய டுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப் போவதாக ரஜினி கூறுகிறார். ஆன்மிக அரசியல் என்பதே மதம் சார்ந்ததுதான். ஆன்மிக அரசியல் என்று கூறுவதால், மதவாதத்தின் இன்னொரு முகமாக ரஜினி பார்க்கப்படுகிறார். வட இந்தியாவிலும், தமிழகத்திலும் பல அரசியல் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகளால் இயக்கப்படு கிறார்கள். அதைப்போல, ரஜினியை இயக்குவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான்” என்று விளாசினார்.

கி.வீரமணி பேசுகையில், “நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு மட்டுமல்ல. மக்களை சாதிரீதியாகவும், மதரீதியாகவும் பிரிக்கும் ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, பெண்ணடிமை ஆகியவற்றை ஊக்குவிப்பதை எதிர்ப்பதுமாகும். ஆன்மிக அரசியல் நடத்தப் போகிறார்களாம், ஆத்மா என்பது பித்தலாட்டம்” என்றார்.

தி.மு.க-வின் கொள்கைப்பரப்புச் செயலாளர் ஆ.ராசா, ‘‘நாத்திகக் கொள்கை உள்ளவர்கள், தங்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளால், கடவுள் ஏற்பாளர்களாக மாறும் நிலை ஏற்படுவது உண்டு. ஆனால், திகார் சிறையில் இருந்த காலத்தில், தீவிர நாத்திகராக மாறுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பகுத்தறிவுதான் என்னைப் பக்குவப்படுத்தியது” என்றார்.

தி.மு.க எம்.பி-யான கனிமொழி, “உலகில் உள்ள அனைத்து மதங்களும், மனிதனைப் பிரிக்கின்றன. நாத்திகம்தான் மனிதர்களை இணைக்கிறது. பெரியாரை நாத்திகர் என்று மட்டும் கூற முடியாது. அவர் ஒரு மனிதநேயர். பெண்களை அடிமையாக நடத்துவதற்கு அடிப்படையாக மதம் உள்ளது. உலக யுத்தங்களைவிட, மதங்களாலும் மதச்சண்டை களாலும்தான் மனித ரத்தம் அதிகமாகச் சிந்தப் பட்டது. சாதி - மத அடிப்படை வாதங்கள் தகர்க்கப்பட வேண்டுமானால் மனிதநேயத்தையும் பகுத்தறி வையும் மக்களிடம் விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்” என்றார்.

- சி.ய.ஆனந்தகுமார்
படம்: ஆ.மணிகண்டன்