‘‘2ஜி வழக்கில் நான் கண்டிப்பாக விடுதலையாகிவிடுவேன் என்று சொன்னபோது, 99 சதவிகிதம் பேர் அதை நம்ப மறுத்தனர். ஆனால், இன்று அதுதான் நிஜமாகியிருக்கிறது’’ எனச் சிரித்தபடி தன் புத்தக வெளியீட்டு விழாவில் சொன்னார் ஆ.ராசா. 2ஜி வழக்கு பற்றி ஆ.ராசா எழுதியுள்ள ‘2G SAGA Unfolds’ புத்தகம், ஒரு க்ரைம் த்ரில்லர் போலவே பரபரப்புத் திருப்பங்களுடன் இருக்கிறது. அதன் வெளியீட்டு விழாவும் அதேபோன்ற பரபரப்புகளைச் சந்தித்தது.

இந்தப் புத்தகத்தை எப்படியும் தடுக்க வேண்டும் என்று சிலர் முயற்சி செய்தனர். அனைத்தையும் சவால்களாகக் கடந்து, ஜனவரி 20-ம் தேதி சனிக்கிழமை மாலை, டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் புத்தக வெளியீட்டு விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் ராசா. இரண்டு நாள்களுக்கு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பெயரில் அந்த அரங்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முந்தின நாள்தான், ‘2ஜி வழக்கில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு, மத்திய சட்ட அமைச்சகம் சி.பி.ஐ-க்கு ஒப்புதல் தந்துவிட்டதாக’ செய்தி வெளியாகி இன்னும் பரபரப்பைக் கூட்டியது.

விழாவுக்கு முந்தின நாள் இரவு பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், நண்பர்களுக்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் தவிர தமிழகத்திலிருந்து பெரிய தலைகள் யாரும் வரவில்லை. விருந்து நிகழ்ச்சிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் போன்றோர் வந்திருந்தனர். பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் சுதான்சு மிட்டல் வந்திருந்தாலும், ராசா வருவதற்கு முன்பே கிளம்பிவிட்டார். புத்தக வெளியீட்டுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே ஆ.ராசா வீடு பிஸியாக இருந்தது. தினமும் காலை, மாலை என்று ஆங்கில, இந்தி தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளுக்குத் தனித்தனியாகப் பேட்டிகள் கொடுத்தார் ராசா. ‘‘புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துவிட்டுக் கேள்வி கேளுங்கள்’’ என்று சொல்லி, அவர்களுக்கு முன்கூட்டியே புத்தகங்களைக் கொடுத்து, படிக்க வைத்த பின்னரே பேட்டி கொடுத்தார். புத்தக வெளியீட்டுக்கு சில மணி நேரம் முன்புதான் தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளும் பேட்டி அளித்தார்.

ஆ.ராசாவின் பேச்சில் அதிகம் வறுத்தெடுக்கப் பட்டவர், மத்திய கணக்குத் தணிக்கைக் குழு தலைவராக இருந்த வினோத் ராய். ‘‘1,76,645 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்கிற அவரின் தப்புக்கணக்குதான் வழக்குக்கான காரணம். மன்மோகன் சிங் தலைமையில் இரண்டாவது முறையாக அமைந்த காங்கிரஸ் அரசைக் கொல்வதற்காக அனுப்பப்பட்ட கான்ட்ராக்ட் கில்லர்தான் வினோத் ராய். அவர் யாருக்காக வேலை பார்த்தார் என்பதுதான் கேள்வி. நான் தவறு செய்யவில்லை என்று தெரிந்தாலும், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கண்மூடி மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இவற்றையெல்லாம் புத்தகத்தில் விரிவாக விளக்கியிருக் கிறேன். சிறையிலிருந்தபோதே, அந்தக் கோபமும் வேதனையுமான மனநிலையில் புத்தகத்தை எழுதுவதைத் தொடங்கி விட்டேன். புத்தகம் முடியும் தறுவாயில் தீர்ப்பும் வந்துவிட்டது’’ என்றார்.

இப்போது ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பும் தயாராகிவருகிறது. ‘‘விரைவில் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தமிழ்ப் பதிப்பை வெளியிடுவார்’’ என்றார் ஆ.ராசா.‘‘புத்தகம் தயாராகி இரண்டு பிரதிகள் என் கைக்கு வந்ததும், மன்மோகன் சிங்குக்கு போன் செய்தேன். ‘சார், நான் உங்களைச் சந்திக்க வேண்டும்’ என்று மட்டும் சொன்னேன். வரச் சொன்னார். ‘என் புத்தகத்தின் முதல் பிரதியை உங்களுக்குக் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே வந்தேன்’ என்று சொல்லி அவரிடம் புத்தகத்தைக் கொடுத்தேன். நான் வழக்கில் சிக்க வைக்கப்பட்டது குறித்து அவர் ரொம்பவே வருத்தப்பட்டார். நானும் அவரும் நிறைய விஷயங்களைப் பேசினோம். அதில் அரசியல் பேச்சுகளும் அடக்கம். நாங்கள் என்ன பேசினோம் என்பதை இப்போது சொல்லமுடியாது. ஆனால், எல்லாவற்றையும் பகிரங்கமாகச் சொல்வதற்கு ஒருநாள் வரும்!’’ எனப் பேச்சில் சஸ்பென்ஸ் வைத்து முடித்தார் ஆ.ராசா.

ஆக, அடுத்த சஸ்பென்ஸ் ரெடி!

- டெல்லி பாலா

சுவாமிக்கும் ராசாவுக்கும் ஒரே நிறுவனம்!

ஆ.ராசாவின் புத்தகத்தை வெளியிட முதலில் பென்குவின் நிறுவனம்தான் ஒப்பந்தம் போட்டிருந்தது. திடீரென அந்த நிறுவனம் பின்வாங்கியதைத் தொடர்ந்து, டெல்லியைச் சேர்ந்த ஹர் ஆனந்த் பப்ளிகேஷன் என்ற நிறுவனம், இந்தப் புத்தகத்தை வெளியிட முன்வந்தது. அதன் பதிப்பாளர் நரேந்திரகுமார்தான் நிகழ்ச்சியில் ராசாவில் புத்தகத்தை வெளியிட்டார். காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். ஆ.ராசாமீது சி.பி.ஐ தொடுத்த 2ஜி வழக்கின் புகார்தாரர்களில் ஒருவர், சுப்பிரமணியன் சுவாமி. ராசா சிறைக்குச் செல்லக் காரணமாக இருந்த சுவாமியின் இரண்டு புத்தகங்களை வெளியிட்டதும் இதே ஹர் ஆனந்த் பப்ளிகேஷன் நிறுவனம்தான் என்பது வேடிக்கை.