‘பத்திரப்பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படும்’ எனத் தமிழக அரசு உத்தரவு போட்டிருக்கிறது. ‘பிரிக்க முடியாதது எதுவோ?’ என்ற கேள்விக்கு ‘பத்திரப்பதிவு அலுவலகமும் புரோக்கர்களும்’ எனப் பதில் சொல்லலாம். புரோக்கர்கள் இல்லாமல் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்குவதில்லை.

‘பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. புரோக்கர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதை நீதிமன்றம் தடுக்க வேண்டும்’ என்று 2017 நவம்பரில் சென்ன உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடுத்தார். மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், “தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள் புரோக்கர்களின் பிடியில்தான் இருக்கின்றன. இதற்கு மனுதாரர் தரப்பில் போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சத்தையும், புரோக்கர்கள் ஆதிக்கத்தையும் ஒழிக்கத் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் தமிழக பத்திரப்பதிவுத் துறை ஓர் உத்தரவை வெளியிட்டிருக்கிறது. அதில், ‘மார்ச் ஒன்றாம் தேதி முதல் சார் பதிவாளர் அலுவலகங்க ளுக்குச் சொத்துகளை விற்பனை செய்வோர், சொத்துகளை வாங்குபவர் ஆகிய இரண்டு தரப்பு ஆட்கள் மட்டுமே வர வேண்டும். புரோக்கர்கள் சார் பதிவாளர் அலுவலகங்களுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படும்’ என்று கூறப்பட்டிருக்கிறது. இது சாத்தியமாகுமா? இப்போது சார் பதிவாளர்கள் அலுவலகங்கள் எப்படி இருக்கின்றன? சில அலுவலகங்களுக்குச் சென்றோம்...

இலவச விண்ணப்பமே இல்லை!

சென்னை அடையாறு சார் பதிவாளர் அலுவலகம் ஒரு கட்டடத்தின் முதல் தளத்தில் இருக்கிறது. சொத்து வாங்குபவர்கள், விற்பவர்களைத் தவிர வேறு யாரையும் இங்கு காண முடியவில்லை. வில்லங்கச் சான்று, நகல் ஆவணங்கள் வாங்குவதற்காகத் தனி கவுன்ட்டர் உள்ளது. விண்ணப்பப் படிவங்களுக்கு எந்தக் கட்டணமும் வாங்காமல் இலவசமாகவே கொடுக்கின்றனர்.

அடுத்ததாக, சைதாப்பேட்டை சென்றோம். அங்கே மாவட்டப் பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் இரண்டு சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் ஆவண எழுத்தர்கள், பத்திரங்கள் விற்பனை செய்வோர் பலரும் கடைகள் வைத்திருக்கின்றனர். தரைத்தளத்தில் ‘தென் சென்னை இணை சார் பதிவாளர் இரண்டு’ அலுவலகம் இருக்கிறது. அங்கு நுழையும் முன்பே வாசலில் ஒருவர் நம்மை வழிமறித்தார்.

‘‘என்ன வேணும் சார்?’’ என்றவரிடம், ‘‘வில்லங்கம் பார்க்கணும்’’ என்றோம். ‘‘வில்லங்க ஃபார்ம் வாங்கி எழுதிட்டுப் போங்க. இருபது ரூபாய்தான்” என்றார். “இல்லை, நான் சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் சென்று விண்ணப்பம் வாங்கி, நானே எழுதிக் கொள்கிறேன்” என்று அவரிடம் கெத்தாகச் சொல்லிவிட்டுப் போனோம். ஆனால், நம் நம்பிக்கை வெற்றி பெறவில்லை. அலுவலகத்தில் சென்று அங்கிருந்தவர்களிடம் ‘வில்லங்கச் சான்றுக்கான விண்ணப்படிவம் வேண்டும்’ என்று கேட்டோம். “இங்கு இல்லை. வெளியில்தான் வாங்க வேண்டும்” என்றனர். “அடையாறு சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்த விண்ணப்பம் இலவசமாகக் கொடுக்கிறார்களே” என்று கேட்டோம். “இங்கே இப்படித்தான்” என்றார் அங்கிருந்த ஊழியர் ஒருவர். நொந்து கொண்டபடியே வெளியே வந்து, 5 ரூபாய் கொடுத்து ஒரு விண்ணப்பம் வாங்கினோம். அந்த அளவுக்கு இந்த அலுவலகத்தில் புரோக்கர்களின் கை ஓங்கி இருக்கிறது.

புரோக்கர்களே ஆபீசர்ஸ்!

நாம் இரண்டாம் தளத்தில் உள்ள ‘தென் சென்னை இணை சார் பதிவாளர் ஒன்று’ அலுவலகத்துக்குச் சென்றோம். அலுவலகத்தின் உள்ளே, பதிவு செய்ய வந்தவர்கள், அவர் களுடன் வந்த புரோக்கர்கள் என்று அலுவலகம் களை கட்டியிருந்தது. ஆனால், ‘வில்லங்கச் சான்று ஆவணம் பெறும் பகுதி’ என்ற அறிவிப்பு இருந்த இடத்தில் உள்ள இருக்கையில் அலுவலர் யாரும் இல்லை. அவரது சீட்டில், வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்கள் கட்டி வைக்கப் பட்டிருந்தன. மனுக்களுடன், அவர்களுக்கான சான்றிதழ்களும் இணைக்கப்பட்டிருந்தன. இது போன்று இரண்டு மூன்று கட்டுகள் மேஜையில் கிடந்தன. யாருடைய அனுமதியையும் கேட்காமல், அங்கு இருந்த புரோக்கர்கள் வந்து வில்லங்கச் சான்றிதழ் கட்டுகளை எடுத்து, தாங்கள் கொடுத்த விண்ணப்பங்களுக்கான சான்றிதழ்களை உருவிக் கொண்டு சென்றனர். புரோக்கர்களே ஆபீசர்களாக செயல்படுவதை உணர முடிந்தது.

கமிஷன் கொடுத்தால் கைடுலைன் வேல்யூ குறையும்!

அடுத்து தாம்பரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்றோம். சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தின் கீழ்தளத்தில் ஆவண எழுத்தர்கள், பத்திரங்கள் விற்பனை செய்வோரின் கடைகள் இருந்தன. முதல் தளத்தில் சார் பதிவாளர் அலுவலகம் இருக்கிறது. அலுவலகத்துக்குள் சொத்துகளை விற்பனை செய்பவர்கள், வாங்குபவர்கள் மட்டுமே இருந்தனர். வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட விண்ணப்பங்களை வாங்குவதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெறுவதற்கும் தனி கவுன்ட்டர் உள்ளது. அங்கிருந்த சார் பதிவாளர் மனோகரனிடம் பேசினோம். ‘‘சார் பதிவாளர் அலுவலகங்களுக்குள் புரோக்கர்கள், இடைத்தரகர்கள் வரக்கூடாது என்று பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி உத்தரவு போட்டிருக்கிறார். அதை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இதற்கு மேல் இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை’’ என்றார்.

ஆலந்தூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் அண்மையில் பத்திரப்பதிவு செய்த ஒருவரின் அனுபவம் இது... “என்னுடைய உறவினர் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் பெயரில் சொத்து வாங்குவதற்காக எனக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்திருந்தார். அதன் பேரில் ஒரு சொத்து வாங்கினேன். அதன் மதிப்பு, கைடுலைன் வேல்யூவின் படி ரூ.65 லட்சம்தான். ஆனால், வங்கிக் கடன் ரூ.1.65 கோடி அனுமதிக்கப்பட்டிருந்தது. எனவே அந்தத் தொகைக்குத்தான் பத்திரப்பதிவு செய்யமுடியும். ஆலந்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்த ஆவண எழுத்தரே பதிவுக்கான ஏற்பாடுகளைச் செய்தார். ‘ரூ.65 லட்சம் மதிப்புள்ள இடத்தை எதற்காக ஒரு கோடி ரூபாய் கூடுதலாக மதிப்பிட்டுப் பதிவு செய்கிறீர்கள்? பத்திரப்பதிவு செலவுதானே அதிகமாகும்? எனக்கு 20 சதவிகிதம் கொடுங்கள். கைடுலைன் வேல்யூவைவிடக் குறைவாகப் பதிவுசெய்து தருகிறேன்’ என்றார். அதற்கு நாங்கள், ‘பதிவுக் கட்டணம் அதிகரித்தாலும் பரவாயில்லை. வங்கிக்கடன் எவ்வளவு அனுமதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கே பதிவு செய்யுங்கள்’ என்றோம். இப்படித்தான் புரோக்கர்கள் நடமாடுகின்றனர். புரோக்கர்கள் பிடியில்தான் சார் பதிவாளர்கள் இருக்கின்றனர். இவர்கள் வழியாகத்தான் பெரும்பாலான பதிவுகள் நடைபெறுகின்றன. புரோக்கர்கள் வசூலிக்கும் லஞ்சப்பணம் அன்றைக்கு இரவு ஏதாவது ஒரு ஹோட்டலில் வைத்தோ, அல்லது தெருமுனைகளிலோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சேர்க்கப்படும்’’ என்றார், விஷயம் அறிந்த அவர்.

பெண்களும் இப்போது புரோக்கர்கள்!

தாம்பரத்தில் பத்திர விற்பனையாளர் ஒருவரிடம் பேசினோம். “புரோக்கர்கள் யாரும் நுழையக் கூடாது என்று ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து சொல்லியிருக்கிறார்கள். இதனால்தான் இங்கு கூட்டம் குறைந்திருக்கிறது. ஆனால், பத்திரப்பதிவுத்துறையில் லஞ்சத்தை நிச்சயமாகத் தடுக்க முடியாது. வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். பத்திரப்பதிவு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவுதான். ஆனால், வேலைப்பளு அதிகம். இதைச் செய்ய தினக்கூலி அடிப்படையில் ஆட்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு யார் சம்பளம் கொடுப்பது? சிலர் வாங்கும் லஞ்சப்பணத்தில்தான் அவர்களுக்குப் பணம் கொடுக்கின்றார்கள். இப்போதைக்கு புரோக்கர்கள் உள்ளே வராவிட்டாலும், பின்னர் வருவார்கள். புரோக்கர்களை வளர்ப்பதே அதிகாரிகள்தான். ஆண்கள் மட்டும் இல்லை. இப்போது சில பெண்களும் புரோக்கர்களாக இருக்கின்றனர்’’ என்றார்.

பூனைக்கு நீதிமன்றம்தான் வலுவான மணியைக் கட்ட வேண்டும்!

- கே.பாலசுப்பிரமணி
ஓவியம்: கோ.ராமமூர்த்தி
படம்: தெ.அசோக்குமார்

‘‘அடாவடி ஆசாமிகளும் இருக்கிறார்கள்!’’

சென்னையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் ஒருவரிடம் பேசினோம். ‘‘பத்திரப்பதிவு ஆவணங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் எல்லாமே இணையதளத்தில் இருக்கின்றன. இவற்றை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம். ஆனால், பலருக்கும் இது தெரிவதில்லை. பத்து நாள்களுக்கு முன்பு திருமணத்தைப் பதிவு செய்வதற்காக ஒருவர் வந்தார். அவரிடம், ‘150 ரூபாய் அரசு கட்டணம் மற்றும் வெப் கேமராவில் பதிவாகும் காட்சிகள் அடங்கிய சி.டி-க்கு 30 ரூபாய் என்று சேர்த்து, அரசு வசூலிக்கும் கட்டணம் 180 ரூபாய் மட்டும் கொடுங்கள்’ என்று சொன்னேன். அவர் என்னை நம்பவில்லை. சில மணி நேரம் கழித்து இன்னொரு புரோக்கரை அழைத்துக்கொண்டு உள்ளே வருகிறார். இதை என்னவென்று சொல்வது?

பொதுமக்களுக்கு இதில் விழிப்புஉணர்வு ஏற்பட வேண்டும். அதே போல அலுவலகத்துக்குள் வரும் புரோக்கர்களை நிச்சயமாகத் தடுத்து விட முடியாது. புரோக்கர்கள் உள்ளே வரக்கூடாது என்ற உத்தரவு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கிறது. ஆனால், இதை நடைமுறைப்படுத்தவில்லை. ஒரு புரோக்கர் அலுவலகத்துக்கு வந்ததைத் தடுக்க முயன்றபோது, ‘பத்திரப்பதிவு அலுவலர்கள் லஞ்சம் வாங்குகின்றனர்’ என்று, அந்த புரோக்கர் ஊழல் கண்காணிப்புத் துறைக்குக் கடிதம் எழுதி விட்டார். இப்படியும் அடாவடியான புரோக்கர்கள் இருக்கிறார்கள். பத்திரம் பதிவு செய்ய சிலர் வழக்கறிஞர்களை அழைத்து வருகின்றனர். ‘வழக்கறிஞர்களை உள்ளே நுழையக் கூடாது’ என்று சொல்லவே முடியாது. இப்போது அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. இவை தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருக் கின்றன. இருந்தாலும், அலுவலகத்துக்கு வெளியே நிகழும் பரிமாற்றங்களைக் கண்காணிப்பது சாத்தியமில்லை. அதனால் முறைகேடுகளைத் தடுக்க முடியவில்லை” என்றார்.