‘குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்’ எனும் டார்வின் கூற்றே பொய்யானது என விஞ்ஞானத்துடன் வீம்பாக விளையாடியிருக்கிறார் மத்திய `மனித’வள மேம்பாட்டு இணை அமைச்சர் சத்யபால் சிங். ‘‘நம்முடைய முப்பாட்டன் மார்கள் இதைப்பற்றி எந்தக் கருத்தும் சொன்னதில்லை. எனவே, பள்ளி - கல்லூரிகளின் பாடத்திட்டத்திலிருந்து டார்வின் தியரியை நீக்கவேண்டும்’’ எனக் கல்வித்துறையைக் கற்காலத்துக்கே அவர் கூட்டிச் சென்றிருக்கிறார். இதேபோல் வேறு எதையெல்லாம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கலாம், சேர்க்கலாம் எனப் புத்தகங்களைப் புரட்டியதில்...

`ஒளிச்சேர்க்கை’ பற்றி பாடப்புத்தகங்களில் இருக்கும் பக்கங்களை `டர்ரென’ கிழித்துத் தாராளமாக சுண்டல் மடிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். அம்புட்டும் வேஸ்ட்டு! ஏதோ தாவரங்கள்தான் கார்பன்- டை ஆக்ஸைடை சுவாசித்து, ஆக்ஸிஜனை வெளியிடுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், பசுமாடுகள் ஆக்ஸிஜனை சுவாசித்துக்கொண்டு ஆக்ஸிஜனையே வெளியிடுகின்றன என்பதை மறந்துவிட்டார்கள். இதை, இந்தக் கோவாலு சொல்லலை... ராஜஸ்தான் கல்வி அமைச்சரே சொல்லியிருக்காரு!

அறிவியல் புத்தகத்தில், கலவியற்ற இனப்பெருக்கம், கலவிமுறை இனப்பெருக்கம் பற்றி எழுதியதையெல்லாம் கிழித்துவிட்டு, கண்ணீர்வழி இனப்பெருக்கம் பற்றி எழுதவேண்டும். ஆமப்பே! ஆண் மயில் பெண் மயிலுடன் கண்ணீர்வழியாக இனப்பெருக்கம் செய்யும்னு ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியே சொல்லியிருக்கார். ஆண் மயில்கள் எல்லாம் ஆயுள் முழுக்க பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து செத்துமடியுமாம். விர்ஜின் மயில்கள் சாபம், உங்களைச் சும்மா விடாது ஜி!

கங்கை நதியின் மூலம், கங்கோத்ரியா அல்லது மானசரோவர் ஏரியா என மத்திய நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புதுப்பித்தல் அமைச்சரான நிதின் கட்கரி அவர்கள் உறுதியாகக் கூறும்வரை, புவியியல் பாடத்தைப் பள்ளியிலிருந்து தடை செய்யவேண்டும். அதேபோல், நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்தது, தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தைக் கண்டுபிடித்தது என எதையுமே நம் முன்னோர்கள் பார்த்ததுமில்லை, வாய்வழியாகச் சொன்னதுமில்லை. அவற்றையெல்லாம் புத்தகத்திலிருந்து கொத்தோடு அத்து எறியலாம்.

காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் எல்லாம் உதார் டால்டா. இவை மாணவர்களைப் பயமுறுத்தவும் ஹாலிவுட் படங்களுக்குக் கதை கிடைக்கவும் மட்டுமே பயன்படுகின்றன. எனவே, அவை தொடர்பான வார்த்தைகளைக்கூட பாடப்புத்தகங்களிலிருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி அட்டையை மூடிவிடலாம். ஏனெனில், வயதானவர்களின் உடல், ஒவ்வோர் ஆண்டும் குளிரைத்தாங்கும் சக்தியைக் கொஞ்சம்கொஞ்சமாக இழந்துவருகிறது. அதனால், `‘போன வருஷத்தைவிட இந்த வருஷம் அதிகம் குளிருது’’ என புலம்புகிறார்கள். அதுதான் காரணமே தவிர, காலநிலையில் எந்த மாற்றமுமில்லை எனப் பிரதமர் மோடியே சொல்லிட்டாரு. .

ஓவியம்: பிரேம் டாவின்ஸி