கிணறு வெட்டியதாகக் கணக்கை மட்டும் காட்டிவிட்டுப் பணத்தைச் சுருட்டிவிடுவது, வெறும் சினிமா காமெடி இல்லை. போடாத ரோட்டுக்கு பில் போட்டுச் சொந்த கஜானாவை நிரப்பிக்கொள்வது அரசியல்வாதிகளுக்கும், அவர்களுக்குத் துணைபுரியும் அதிகாரிகளுக்கும் கைவந்த கலை. அதையெல்லாம் மிஞ்சும் வகையிலான கொள்ளை ஒன்று நடந்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து, தங்கள் ஊர்களுக்கு சாலை கேட்டுப் போராடிவருகிறார்கள், 18 மலைக்கிராமங்களின் மக்கள். அந்த மலைக்கு ரோடு போட்டதாகக் கணக்குக் காட்டி, 12 கோடி ரூபாயைச் சுருட்டியிருக்கிறார்கள் அதிகாரிகள்.

தமிழகத்தில் மிச்சம் இருக்கும் பசுமையான மலைப்பகுதிகளில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூருக்கு அருகில் உள்ள அகமலையும் ஒன்று. இங்குள்ள 18 மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, காபி, ஏலக்காய், மிளகு, இலவம்பஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை விளைவித்து, பெரியகுளம், தேனி, போடி சந்தைகளுக்கு எடுத்துவந்து விற்பனை செய்வதுதான் பிரதான தொழில். இந்த மலைக்கிராமங்கள் போடி சட்டமன்றத் தொகுதிக்குள் வருகின்றன. ஒவ்வொரு தேர்தலின்போதும், ‘அகமலைக்கு ரோடு போட்டுத் தருகிறோம்’ என்று வாக்குறுதியைச் சொல்லியே அரசியல்வாதிகள் ஓட்டு வாங்கிவிடுகிறார்கள். ஆனால், இன்னும் ரோடு போடப்படவில்லை.

இப்போது அகமலைக்குச் செல்ல ஒரு சாலை வழியும், இரண்டு மலைப் பாதைகளும் உள்ளன. பெரியகுளத்திலிருந்து சோத்துப்பாறை, கண்ணக்கரை வழியாக அகமலைக்குச் செல்லும் சாலையையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். போடியிலிருந்து முசப்பாறை, முத்துக்கோம்பை, தம்பிரான் சோலை வழியாக அகமலைக்குச் செல்லும் 24 கிலோமீட்டர் நீளப் பாதையிலும், புதூர், உலக்குருட்டி, காணாமஞ்சி, கூனியாறு வழியாக அகமலைக்குச் செல்லும் 12 கிலோமீட்டர் நீளப் பாதையிலும் வாகனங்கள் செல்ல முடியாது. நடந்துதான் செல்ல வேண்டும். அரசுத் திட்டங்கள் தொடர்பான எல்லா உதவிகளுக்கும் போடிக்குத்தான் அகமலை மக்கள் வர வேண்டும். இன்றளவும் இந்தப் பாதைகள், பாறைகளும் புதர்களுமாகத்தான் இருக்கின்றன. தார்ச்சாலைக்கான எந்த அடையாளமும் இல்லை. ஆனால், இங்கு 2009-ம் ஆண்டு சாலை போடப் பட்டதாக தேனி மாவட்ட திட்ட அலுவலகத்தில் உள்ள ஆவணம் சொல்கிறது. ‘போட்ட சாலை எங்கேய்யா போச்சு?’ என்று அகமலை மக்கள் இன்றளவும் கேட்டுவருகிறார்கள்.

அகமலை சிறு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சி.ஈஸ்வரன் என்பவர், 2009-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், அகமலைக்குச் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விளக்கம் கேட்டார். ஈஸ்வரனின் மனுவுக்கு அப்போதைய மாவட்டத் திட்ட அலுவலர் மு.மாதவி பதில் கொடுத்தார். அதில், ‘போடியிலிருந்து முத்துக்கோம்பை வழியாக 24 கிலோமீட்டர் தூரத்துக்கு அகமலைக்குச் சாலை அமைக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைக் கேள்விப்பட்ட அகமலை மக்கள், அதிர்ச்சி யடைந்தனர். ‘சாலை போடுவதற்கு எப்போது திட்டம் தீட்டப்பட்டது. அந்தத் திட்டத்தை இனியாவது செயல்படுத்தலாமே’ என்று அதிகாரிகளை அணுகி இது குறித்துக் கேட்டனர். அதற்காக அந்த மக்கள் மிரட்டப்பட்டனர்.

அகமலையில் விவசாயம் செய்துவரும் சண்முகப்பிரியன், “என் தாத்தா காலத்திலிருந்து அகமலையில் விவசாயம் செய்துவருகிறோம். மலையில் விளையும் பொருள்களைக் குதிரை மூலமாகவோ, தலைச்சுமையாகவோ எடுத்துக் கொண்டு நடந்தே போடிக்கு வருவது சிரமமாக இருந்ததால், சாலை போட்டுக்கொடுக்க வேண்டும் என நீண்டகாலமாகக் கேட்கிறோம். இது தொடர்பாக விசாரிக்கும்போதுதான், 2009-ல் மாவட்ட நிர்வாகம் கொடுத்த பதில் பற்றி எனக்குத் தெரியவந்தது. உடனே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வன அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களிலும் தகவல்களைக் கேட்டோம். ‘அகமலைக்குச் சாலை இல்லை. சாலை போடவும் வாய்ப்பு இல்லை’ என்று பதில் வந்தது.

எனவே, ‘மாவட்டத் திட்ட அலுவலகத்தில் 2009-ல் சாலை அமைக்கப்பட்டதாக ஏன் சொன்னார்கள்’ என்று எங்களுக்குச் சந்தேகம் எழுந்தது. உடனே ‘எவிடன்ஸ் சட்டம்’ மூலமாக போடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அகமலை சாலைப்பணிகள் தொடர்பான தகவல்களைக் கேட்டுப்பெற்றேன். அதில், 2009-ல் மாவட்டத் திட்ட அலுவலராக இருந்த மாதவி, போடி வட்டார வளர்ச்சி அலுவலர் சுசீலாவிடம் அகமலையில் செய்யப்பட்ட வளர்ச்சிப்பணிகள் தொடர்பாக விளக்கம் கேட்டு எழுதிய கடிதம் கிடைத்தது. அந்தக் கடிதத்தில், ‘போடியிலிருந்து முத்துக்கோம்பை வழியாக அகமலைக்குச் சாலை அமைக்கப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைக் கண்டு எனக்கு மேலும் அதிர்ச்சி.

2009-ல் சாலை போட்டதாகச் சொல்கிறார்கள். இப்போது தேனி மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வன அலுவலரும் ‘சாலை இல்லை’ என்று சொல்கிறார்கள். ‘இது எப்படி’ என்று அதிகாரிகளிடம் கேட்டேன். ‘எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்றுதான் பதில் கிடைத்தது’’ என்றார்.

அகமலையைச் சேர்ந்த சீனிப்பாண்டியனிடம் பேசினோம். ‘‘2009-ம் ஆண்டு போடப்பட்டதாகக் கூறப்படும் சாலை, இப்போது எப்படிக் காணாமல் போனது? அந்தச் சாலைக்காக இடையிடையே சிறிய பாலங்கள், தடுப்புச்சுவர்கள் கட்டியதாகவும் கணக்குகள் எழுதி சுமார் 12 கோடி ரூபாய் வரை ஏப்பம் விட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக, 2009 காலகட்டத்தில் இங்கு வேலை பார்த்த அதிகாரிகள் அனைவரையும் விசாரிக்க வேண்டும். அகமலைக்கு உரிய சாலை வசதி செய்துகொடுக்க வேண்டும்’’ என்றார் ஆதங்கத்துடன்.

2009 காலகட்டத்தில் போடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தி.மு.க-வைச் சேர்ந்த லெட்சுமணன். அகமலையில் சாலை போடப்பட்டதா என்று அவரிடம் கேட்டோம். ‘‘போடியிலிருந்து அகமலைக்குச் செல்ல சாலை இல்லை. அங்கு சாலை போடப் படவும் இல்லை. காப்புக் காடுகள் (Reserve Forest) இருக்கும் இடத்தில் சாலை அமைப்பது சாத்தியமே இல்லை. விதிப்படி, வனத்துறையும் அனுமதி கொடுக்காது’’ என்றார்.

வனத்துறையில் விசாரித்தோம். “சாலை போடப்பட்டதாகச் சொல்லப்படும் 2009-ல்தான் அகமலை காப்புக் காடாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. அதற்குமுன் அகமலை ‘வளர்ப்புக் காடு’ என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது’’ என்றார் வனத்துறை அதிகாரி ஒருவர்.

சாலை அமைக்கப்பட்டதாக, அப்போதைய திட்ட அலுவலர் மாதவி 2.6.2009 அன்று பதில் கொடுத்தார். போடி வட்டார வளர்ச்சி அலுவலர் சுசீலா, 20.5.2009-ல் திட்ட அலுவலருக்குப் பதில் கொடுத்தார். அகமலை காப்புக்காடாக அறிவிக்கப்பட்ட நாள் 26.11.2009. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ‘காப்புக்காடாக அறிவிக்கப்பட்டால், அகமலைக்குச் சாலை போட்டதாகக் கணக்குக் காட்ட முடியாது’ என்று தெரிந்து, அதற்கு முன்பே சாலை அமைக்கப் பட்டதாக ஆவணங்களைத் தயாரித்துப் பணத்தைச் சுருட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது.

இது தொடர்பாக இப்போதைய தேனி மாவட்டத் திட்ட அலுவலர் வடிவேலை சந்தித்துக் கேட்டோம். ‘‘அகமலைக்குச் சாலை அமைத்ததாக எங்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. உங்களிடம் இருக்கும் தகவல்கள், அப்போது வேலை பார்த்த திட்ட அலுவலர், போடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய இருவரும் செய்த ‘கிளரிக்கல் மிஸ்டேக்’. அவ்வளவு தான்!’’ என்று விஷயத்தை சிம்பிளாக முடித்தார். இரண்டு அரசு அதிகாரிகளும் ஒரே மாதிரியான ‘கிளரிக்கல் மிஸ்டேக்’கை எப்படிச் செய்தார்கள் என்பதுதான் புரியவில்லை.

போடாத சாலைக்குக் கணக்குக் காட்டி 12 கோடி ரூபாயைக் கொள்ளையடித்தது யார்? அதிகாரிகளா, அரசியல்வாதிகளா? அவசியம் விடை தேடப்படவேண்டிய கேள்வி இது!

- எம்.கணேஷ்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி