கர்நாடகாவில் உள்ள ஒரு முறுக்கு கம்பெனியில் கொத்தடிமையாக வேலை செய்யக் கடத்திச்செல்லப்பட்ட 11 வயது மகனை மீட்பதற்கு, ஓர் ஏழைத்தாய் நடத்திய போராட்டம் கண்ணீரை வரவழைக்கிறது.

மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் முறுக்கு கம்பெனி வைத்துள்ளனர். அவற்றில் கொத்தடிமைகளாக வேலை செய்ய மதுரை, தேனி மாவட்டங்களில் வறுமையின் பிடியில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளைக் கூட்டிச் செல்வார்கள். ஒரு தொகையை வாங்கிக்கொண்டு பெற்றோர் களே தங்கள் குழந்தைகளை அனுப்பி வைப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால், முதல்முறையாக இந்த விவகாரத்தில் கடத்தல் புகார் கிளம்பியுள்ளது.

தேனி மாவட்டம் குன்னூர் கிராமத்தைச் சேர்ந்த கபிலன் என்ற சிறுவன், கடந்த ஆண்டு பள்ளிக்குச் சென்றபோது கடத்தப்பட்டான். பெரிய சட்டப் போராட்டத்துக்குப் பிறகு அவன் இப்போது மீட்கப்பட்டுள்ளான்.

இது தொடர்பாக, ‘சோஷியல் ஜஸ்டிஸ்’ என்ற அமைப்பைச் சேர்ந்த ஆறுமுகத்திடம் பேசினோம். ‘‘ஏழை, எளிய மக்களுக்குப் பாதிப்புகள் நேர்ந்தால், அவர்களுக்கு வழக்கறிஞர் நண்பர்கள் மூலமாக சட்டஉதவிகளைச் செய்துவருகிறோம். கடந்த ஆண்டு மார்ச் மாதம், தேனி மாட்டம் குன்னூரில் வசிக்கிற பூங்கொடி என்பவர் எங்களிடம் வந்தார். ‘பள்ளிக்குச் சென்ற என் 11 வயது மகன் கபிலன் காணாமல் போய்விட்டான். போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை’ என்று அழுதார். நோய்வாய்ப்பட்ட கணவர் ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், கூலி வேலை செய்து குழந்தைகளை வளர்ப்பதாகவும் கூறினார். அவருக்கு உதவிசெய்ய நாங்கள் களத்தில் இறங்கினோம்.

ஆனால், அது எங்களுக்குப் பெரும் சவாலான வழக்காக இருந்தது. காரணம், அந்தச் சிறுவன் எங்கே இருக்கிறான் என்பது போலீஸுக்குத் தெரிந்தும், அதை அவர்கள் சொல்லத் தயாராக இல்லை. ‘நீ பிள்ளைய ஒழுங்கா வளர்க்காம எங்களை வந்து தொந்தரவு செய்யுற. நோட்டீஸ் அடிச்சி ஒட்டியிருக்கோம். யாராவது பார்த்துட்டுத் தகவல் சொன்னா உண்டு. நடுவுல உன் பையன் போன் பேசினா, எங்களுக்குத் தகவல் சொல்லு...’ என்று பூங்கொடியிடம் போலீஸார் கிண்டலாகக் கூறியுள்ளனர். அதனால், ‘தேனி எஸ்.பி-யிடம் நேரில் சென்று ஒரு மனு கொடுங்கள்’ என்று பூங்கொடியிடம் சொன்னோம்.

எஸ்.பி அலுவலகம் சென்றபோது, ‘அதான் தேடிக்கிட்டு இருக்கோம்ல. அப்புறம் ஏன் மறுபடியும் மனு கொடுக்க வந்தே?’ என்று அங்கிருந்த சில போலீஸ்காரர்கள் அந்தப் பெண்ணை உள்ளேவிட மறுத்துள்ளனர். ‘மனுவை வாங்க ஏன் மறுக்கிறீர்கள்?’ என்று நாங்கள் எஸ்.பி அலுவலகத்தில் கேட்டதும், வேறு வழியில்லாமல் மனுவை வாங்கிக்கொண்டார் கள். அதற்குப்பிறகும், போலீஸ் இதில் மெத்தன மாகவே இருந்தது.

அதனால், இதுகுறித்து வழக்கறிஞர் கருணாநிதியிடம் முறையிட்டேன். பூங்கொடி சார்பில் அவர், சிறுவன் கபிலைனைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைக்கக் கோரும் ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார். உடனே பூங்கொடியைக் காவல் நிலையத்துக்கு வரவழைத்து, ‘ஹைகோர்ட்ல கேஸ் போடுற அளவுக்கு உனக்கு ஐடியா கொடுத்தது யாரு? உனக்கு அவ்வளவு தைரியமா? நீ செஞ்ச கொடுமையாலதான் உன் மகன் காணாமல் போயிட்டான்னு உன் மேல நாங்க கேஸ் போடவா?’ என்று மிரட்டியுள்ளனர்.

பயந்துபோய் எங்களிடம் வந்து இந்தத் தகவலைச் சொன்ன பூங்கொடிக்கு, ‘போலீஸ் மிரட்டலுக்கெல்லாம் பயப்பட வேண்டாம்’ என்று தைரியம் கொடுத்தோம். ‘நாங்கள் தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கிறோம்’ என்று போலீஸ் அளித்த தவறான தகவல்களை நம்பி, அந்த வழக்கை நீதிமன்றம் முடித்துவைத்துவிட்டது. அதனால் துவண்டுபோன அந்த ஏழைப்பெண், ‘என் மகன் இனி கிடைக்கவே மாட்டானா’ என்று கதறியழுதார். வழக்கறிஞர் கருணாநிதி அதே நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இம்முறை ‘இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரிக்கவேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமை யிலான டீம் விசாரணையில் இறங்கி, பெங்களூரு சென்று சிறுவன் கபிலனை மீட்டு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜர்படுத்தியது. மகனைக் கண்டதும், அந்தத் தாயின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்ற ஆறுமுகம் மேலும் தொடர்ந்தார்.

“போலீஸ் நினைத்திருந்தால் உடனடியாக அந்தச் சிறுவனை மீட்டிருக்க முடியும். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. தேனி மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பலர் வெளி மாநிலங்களில் முறுக்கு கம்பெனிகளை நடத்துகிறார்கள். வட இந்திய மாநிலங்கள் வரை அவர்கள் இந்தத் தொழிலில் இருக்கிறார்கள். யார் யார் எங்கெங்கே கம்பெனி நடத்துகிறார்கள் என்ற விவரமும், அவர்கள் இங்கிருந்து எத்தனைக் குழந்தைகளை அழைத்துச்சென்று கொத்தடிமையாக வைத்திருக்கிறார்கள் என்பதும் போலீஸுக்குத் தெரியும். ஆனாலும் அவர்கள் அதைக் கண்டுகொள்வதில்லை. கொத்தடிமைகளாக அழைத்துச் செல்லப்படும் குழந்தைகள் பெரும்பாலும் தலித் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பெற்றோர்கள் இல்லாத ஆதரவற்ற குழந்தைகளும் உண்டு. இந்தக் கொடுமையை, அரசு அமைப்புகள் கண்டுகொள்வதில்லை. இது சம்பந்தமான சட்டங்களைக் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமோ மதிப்பதில்லை” என்றார் கவலையுடன்.

இதுபற்றி தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனிடம் கேட்டோம். ‘‘தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியான குழந்தைக் கடத்தல் சம்பவங்களெல்லாம் இல்லை. எந்தப் புகார் மீதும் அலட்சியம் காட்டிய தில்லை. இந்தச் சிறுவன் காணாமல் போன புகாரைக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வந்தனர். எங்களுக்குக் கிடைத்த தகவல்படி, அந்தச் சிறுவனை அவனுடைய அம்மா சூடு வைத்துக் கொடுமைப் படுத்தியதால்தான், அவன் எங்காவது செல்ல முடிவெடுத்தி ருக்கிறான். அவனே சின்னமனூர் முருகனிடம் போய், ‘என்னை எங்காவது வேலைக்குச் சேர்த்து விடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறான்” என்று சொல்லி நம்மை அதிரவைத்த எஸ்.பி., “வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாறினாலும், எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம். அதைத் தொடர்ந்தே அவன் கண்டுபிடிக்கப்பட்டான். மற்றபடி, அவர்கள் சொல்வதுபோல் இல்லை. பையனின் அம்மா, அவர் பக்கமுள்ள விஷயங்களை மறைத்துப் பேசுகிறார்’’ என்றார்.

கபிலனைக் கடத்திச்சென்று முறுக்கு கம்பெனியில் விற்ற சின்னமனூர் முருகன் என்பவரையும், அந்த முறுக்கு கம்பெனியைச் சேர்ந்த பாண்டி என்பவரையும் இப்போது போலீஸார் கைதுசெய்துள்ளனர். தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் காணாமல் போன குழந்தைகள் பற்றிச் சிறப்புப்படை அமைத்து விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்