‘‘பஸ் கட்டண உயர்வைத் தவிர்க்கவே முடியாது’’ என்று சொல்லும் நடுநிலையாளர்கள்கூட, இந்த முறை தமிழக அரசு அறிவித்துள்ள பஸ் கட்டண உயர்வை விமர்சனம் செய்கிறார்கள். தமிழக மக்களைக் கடுமையாகக் கொந்தளிக்க வைத்துள்ளது கட்டண உயர்வு. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல கடுமையாக பஸ் கட்டணத்தை உயர்த்திய ஜெயலலிதாவின் வழியிலேயே, எடப்பாடி பழனிசாமி அரசும் இதைச் செய்திருக்கிறது.

நாலு ஊர் நாலு தெருவுக்குள் போய்வரும் மினி பஸ்களை இயக்குபவர்களாலேயே இரண்டு ஆண்டுகளில் ஆறேழு மடங்கு வருமானத்தை ஈட்டமுடிகிறது. தமிழக அரசோ, 22,509 பேருந்துகளை இயக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டத்தைச் சமாளிக்கவே கட்டண உயர்வு என்கிறது. என்னதான் நடக்கிறது போக்குவரத்துக் கழகங்களில்?

‘‘அண்மையில் ஏழு நாள்கள் நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது நடந்த பேச்சுவார்த்தையில் எங்கள் முதல் கோரிக்கையே, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளியை அரசு ஏத்துக்கணும்ங்கிறதுதான். அதுக்கு, ‘அரசு அதைப் பார்த்துக்கும். உங்க கோரிக்கையை மட்டும் சொல்லுங்க’னு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னார். ஆனா, இப்போ ஊழியர்களின் ஊதியத்தைக் காரணமா சொல்லி, மக்களுக்கும் எங்களுக்கும் இடையில மனஸ்தாபம் உண்டாக்கப் பாக்குறது அரசு’’ என்கிறார் ஏ.ஐ.டி.யு.சி-யின் மாநிலப் பொதுச் செயலாளர் லட்சுமணன்.

‘‘வருமானத்தைப் பெருக்குறதுக்கு பல வழிகள் இருந்தும், அரசு அதையெல்லாம் செய்யுறதில்லை. எப்போதுமே, நெரிசல் நேரத்தில நல்ல வருமானம் வரும். அந்த நேரத்து லாபத்தைத் தனியாருக்குக் கிடைக்கிறபடி அதிகாரிங்க செய்றாங்க. இதை ஊக்கப்படுத்தினா, எப்படி அரசுப் போக்கு வரத்துக்குப் பலன் கிடைக்கும்? அதிகாலை மூன்று மணிக்கு வேலூரிலிருந்து சென்னைக்கு ஒரு பஸ்ஸை ஓட்டுனா, 10 பேர், 20 பேர்தான் பஸ்ல இருப்பாங்க. சில நேரம் ஓட்டுநரும் நடத்துநரும் மட்டும்தான் இருப்பாங்க. இதையெல்லாம் ஒழுங்குபடுத்தணும்.

மக்கள் நலனுக்காகத்தான் அரசுப் போக்குவரத்துக் கழகம் செயல்படுது. அரசுப்பேருந்துகளுக்குப் பயன்படுத்துற டீசல் கலால் வரியை ரத்து செய்தா, போக்குவரத்துக் கழகங்களுக்கு லாபம் கிடைக்கும். இதைப் போல, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி வசூலிக்கப்படும் வரிக்கு விலக்கு கொடுத்தா, சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் இழப்பு இருக்காது. அரசுப் பேருந்துகளுக்கு சுங்கச்சாவடிக் கட்டணமா மட்டும் ஆண்டுக்கு ரூ.900 கோடி கட்டுறோம். மத்திய அரசுகிட்ட சொல்லி, இதுக்கு விலக்கு பெறலாம்.

சென்னையில 24 பணி மனைகள், மாநிலம் முழுக்க 321 பணிமனைகள், எட்டு கோட்டம், 65 மண்டல அலுவலகங்கள் இருக்கு. பல நகரங்களில் மையமான இடங்கள்ல இதையெல்லாம் காலியா வெச்சிருக்காங்க. திருச்சியில கவிதா ஹோட்டலுக்குப் பக்கத்தில பெரிய இடம், கட்டடத்தை இடிச்சிட்டு வெறும் மைதானமா இருக்கு. இதைப் போல, சேலத்தில, தஞ்சாவூர்ல, மதுரையில நிலம் இருக்கு. இந்த இடங்கள்ல கட்டடம் கட்டி வணிகரீதியா பயன்படுத்தலாம். மும்பையில பெஸ்ட் போக்குவரத்துக் கழகப் பணிமனை, பகல்ல பேருந்து களை எடுத்துட்டுப்போன பிறகு, சும்மாதான் இருக்கு. விமான நிலையத்தில நெரிசல், அதிக வரி, கட்டணம்னு இந்தப் பணிமனையில சிறு விமானங்கள், ஹெலிகாப்டர்களை நிறுத்தப் பயன்படுத்துறாங்க. இதனால் போக்குவரத்துக் கழகத்துக்கு லாபம். சென்னையில திருவொற்றியூர், அம்பத்தூர், அண்ணா நகர் போன்ற பெரிய பணிமனை வளாகங்கள இப்படி வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும்.

1969-ல் அரசாங்கம் அமைச்ச கமிட்டி சொன்னதுபடி, ஒரு பேருந்துக்கு 7.5 பேர் அதாவது ரெண்டு பேருந்துகளுக்கு 15 பணியாளர்கள் இருக்கணும். அந்த ஏழரைங்கிறது இப்போ 6.5 ஆகிருச்சு. பஸ்ல உண்டாகிற பழுதுகளை நீக்குறதுக்கு போதுமான ஆள் இல்லை. உரிய தொழில்நுட்பப் பணியாளர்கள் இல்ல. தேவையான பொருள்கள் இல்ல. மோட்டார்வாகனச் சட்டப்படி, ஏழு லட்சம் கி.மீ அல்லது எட்டு ஆண்டுகள் ஓடிட்டா, அந்த பஸ்ஸை ஒதுக்கிடணும். ஆனா, 16 ஆண்டுகளுக்கும் மேலா பல அரசு பஸ்கள் ஓடுது. எப்படி விபத்து ஏற்படாம இருக்கும்?

லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கிற அரசுப் பேருந்து களுக்கு காப்பீடு எடுக்கப்படுறது இல்ல. தொலைநோக்கு இல்லாத அதிகாரிகள் எடுக்கிற தவறான முடிவால, இப்போ பல நீதிமன்றங்கள்ல நூற்றுக் கணக்கான பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டு நிக்கிது. ஒரு கட்டத்துல இவை பயன் படுத்தவே முடியாத பஸ்களா ஆகிடுது. இதை முன்கூட்டியே தடுக்கமுடியும்தானே? இந்த யோசனைகளைக் கேக்குறதுக்கோ செய்றதுக்கோ அரசுத் தரப்புல தயாரா இல்ல.

இது இல்லாம வேலை வாய்ப்பு, கொள்முதல்னு எல்லா வற்றிலும் ஊழல். அரசியல்வாதி களுக்குக் காமதேனு மாதிரி இந்தத் துறை ஆகிப்போச்சு. நிதி நெருக்கடின்னு சொல்ற அரசாங்கம், எந்த எம்.எல்.ஏ சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்காருன்னு சம்பளத்த உயர்த்தியிருக்கு? திரிபுரா மாநிலத்தில எம்.எல்.ஏ-க்களோட சம்பளம் வெறும் 17 ஆயிரம் ரூபா தான். இந்தியாவுலேயே எம்.எல்.ஏ-க்களுக்கு அதிக சம்பளம் தர்றது தமிழ்நாட்டுலதான். நிதி நெருக்கடினு சொல்லி பஸ் கட்டணத்தை உயர்த்துற இந்த அரசு, எம்.எல்.ஏ சம்பளத்தை ஏன் இப்படி எக்குத்தப்பா ஏத்துது, பஸ் கட்டணத்தை உயர்த்தி, அப்பாவி மக்களைத் துன்புறுத்துறதை ஏத்துக்கவே முடியாது’’ எனப் பொரிந்து தள்ளுகிறார் லட்சுமணன்.
சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வைக்கும் லாப-நட்டக் கணக்கு, எளிதில் புறக் கணிக்கக்கூடியதாக இல்லை.

‘‘தமிழ்நாட்டில கற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், தனிநபர் சராசரி வருமானம் அதிகரிக்கவும், மாநிலத் தினுடைய மொத்த உற்பத்தி அதிகரிக்கவும், அரசு உண்டாக்கின போக்குவரத்து வசதிதான் காரணம். இழப்பு ஏற்படக்கூடிய கிராம, மலைப்பகுதி வழித்தடங்களில் இயக்கப்படும் 11 ஆயிரம் பேருந்துகளால், தொடக்கத்தி லிருந்தே அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு நஷ்டம்தான். லாபம் வரக்கூடிய பேருந்து களின் மூலம் இதை ஈடுகட்டி வந்தோம். இப்போ 10 ஆண்டு களாக முழுக்க முழுக்க நஷ்டம். 50 சதவிகிதம் லாபமில்லாத வழித்தடங்கள்ல ஓட்டுறோம். ஆனா, இதனால சமூகத்துக்கு லாபம். கிராமத்திலிருந்து மாணவர்கள் நகரங்களுக்குப் போய் படிக்க முடிகிறது. பெண் கல்வி முன்னேற்றம் அடைந்து ள்ளது. ஏழைகள், பெண்கள் அடைந்த வளர்ச்சியை அளவிட முடியுமா? இந்தச் சமூகத் தேவையை அரசுதானே ஈடுகட்டணும்! லாபம் வருதுன்னா அரசு கொடுக்க வேணாம்; இழப்பு வந்தா தரணு மில்லையா? 20 ஆண்டுகளா எப்படி வேணும்னாலும் நீங்க சமாளிச்சுக்கங்கனு விட்டதால உண்டான கூட்டு விளைவு இது. மாணவர்களுக்கான பஸ் பாஸ் தொகையைக் கல்வித் துறை கொடுத்திருக்கணும். கொடுக்கலை.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் 53 ரூபாயா இருந்த ஒரு லிட்டர் டீசல் 66 ரூபாயா ஆகிப் போச்சு. 2011-ல் ஜெயலலிதா கட்டணத்தை உயர்த்தினபோது, அன்றைக்கு இருந்த டீசல் விலையைவிட, அதிகரிச்ச தொகையை அரசே தரும்னு உத்தரவு போட்டாங்க. இன்னைக்குவரைக்கும் அந்தத் தொகையைத் தரலை.

ஊழல், முறைகேடுகளாலும் இயக்கச்செலவுகள் கூடியிருக்கு. மொத்தப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் சேர்த்து ஒரு நிர்வாக இயக்குநர், தலைவர் போதும். ஆனால், எட்டு கழகங்கள், எட்டு நிர்வாக இயக்குநர்கள். கீழேவரைக்கும் போனால் இன்னும் எத்தனையோ அதிகாரிகள்! தேவையில்லாம அதிகமா அதிகாரிகளை நியமிக்கிறதால, கமிஷன் அடிக்கிறது, மட்டரகமான பொருள்களை வாங்குறதுனு எல்லாம் நடக்குது. கொள் முதலுக்கு பல வரையறைகளை வெச்சிருக்காங்க. அதையும் தாண்டித்தான் கொள்ளையடிக்கி றாங்க. இதெல்லாம் சேர்ந்துதான் நஷ்டம்னு பொதுவா பார்வைக்கு வருது.

மத்திய அரசு டீசல் விலையை ஏத்தினா, இவங்க ஏன் விற்பனை வரியையும் ஏத்தணும்? இதனால எத்தனையோ கோடிகள் போகுது. மோட்டார் வாகன வரியை அப்படியே எடுத்துக் கொள்கிறது, மாநில அரசாங்கம்.

50 சதவிகிதம் கட்டணத்தை உயர்த்தினா வருமானம் அதிகரிக்கும்ங்கிற கணக்கு சரிவராது. இதனால தனிநபர் வாகனங்கள் அதிகரிக்கும். சுற்றுச்சூழல் பாதிக்கும். சாலைகளில் நெரிசல் ஏற்படும். எந்தப் பார்வையும் இல்லாமல், எடுக்கப்பட்ட மூர்க்கத்தனமான நடவடிக்கை. இது வட்டிக்கடைக் காரன் சிந்தனை.

இந்த இழப்பு, தொழிலாளியால் வந்தது இல்ல. பிரச்னைக்கு இந்தக் கட்டண உயர்வு தீர்வல்ல. பட்ஜெட் ஒதுக்கீடுதான் அவசியமா வேணும். அரசுக்கு அது வேற வழியில திரும்பவரும். பொருளாதார நடவடிக்கைகள் அதிகமாகும். வர்த்தகம் பெருகும். வேலைவாய்ப்பு பெருகும். மக்களின் வருமானம் அதிகரிக்கும். மக்களை ஏழையாக்கினா என்ன கிடைக்கும்? செழிப்பாக்கினாத் தானே, அரசாங்கத்துக்கு வரும்’’ எனச் சமூக, பொருளாதார அம்சங்களை இணைத்து கணக்கு சொல்கிறார் சவுந்தரராசன்.

மக்களை வதைத்து ஆட்சியாளர்கள் சம்பாதிக்கவே உயர்ந்துள்ளது பஸ் கட்டணம்.

- இரா.தமிழ்க்கனல்

‘‘தவறான அதிகாரிகள்தான் பாதிப் பிரச்னை!’’

நேதாஜி போக்குவரத்து தொழிற்சங்க மாநில நிர்வாகி க.அன்பழகன், ‘‘25 ஆண்டுகள் நடத்துநராகவும், மூன்று ஆண்டுகள் பயணச்சீட்டு பரிசோதகராகவும் பணியாற்றியவர்களைப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளராக ஆக்கவேண்டும். ஆனால், இப்போது குறுக்குவழியில் நான்கைந்து ஆண்டுகள் பணியாற்றியவர்களே கட்டுப்பாட்டாளராக வந்து, வருவாய் பாதிக்கும்வகையில் செயல்படுகின்றனர். 2012-ல் அண்ணா மேம்பாலத்தில் ஒரு பேருந்து தலைகீழாக விழுந்தது ஞாபகம் இருக்கலாம். நான் நடத்துநராகப் பணியாற்றிய வண்டி அது; பழுதாகியிருந்ததால் அதை விட்டுவிட்டேன். அந்தப் பழுதைச் சரிசெய்யாமல் இன்னொருவரிடம் அந்த வண்டியைக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். அவர் செல்போனில் பேசியதுதான் விபத்துக்குக் காரணம் என்று கூறி, வேலையிலிருந்தே அவரைத் தூக்கிவிட்டார்கள். பிறகு நீதிமன்றத்துக்குப் போய், வேலையைப் பெற்றார். அனுபவமுள்ள ஓட்டுநர்களுக்கு உரிய பணியைக் கொடுக்காமல் இருப்பது, ஆளும் கட்சியில் செல்வாக்குள்ளவர்கள் வேலையே பார்க்காமல் இருப்பது, கையாடல் செய்தவர்களை விட்டுவிட்டு சம்பந்தமில்லாதவர்களைப் பலிகடா ஆக்குவது எனத் தவறான அதிகாரிகளின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தினாலே, பாதிப் பிரச்னைகள் சரியாகிவிடும்’’ என நம்பிக்கையுடன் சொல்கிறார்.