Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

‘ஆனந்த விகடன் - நம்பிக்கை விருதுகள் விழா’ என்ற பிரமாண்டமான திறமைத் திருவிழா

தலையங்கம்

நடந்துமுடிந்திருக்கிறது. 2017-ம் ஆண்டின் சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் அளிக்கப்பட்டது குறித்த விரிவான பதிவுகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன. விழாவில் கலந்துகொண்டு சிறப்பு செய்த அனைத்து ஆளுமைகளையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறோம். தொடர்ச்சியாகத் தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுக்க இதுபோன்ற முயற்சிகள் உதவும் என்று நம்புகிறோம்.

இந்த மாதத்தில் ‘காதலர் தினம்’ வருகிறது. காதலை வாழ்வியலின் ஒரு பகுதியாகக்கொண்டு வாழ்ந்தவர்கள் தமிழர்கள். சங்க இலக்கிய காலம் தொடங்கி நவீன இலக்கிய காலம் வரை காதலை எழுதாத கவிஞர்களோ படைப்பாளிகளோ இல்லை. காதலுக்கான ஒரு முக்கியமான இடத்தைத் தமிழ் இலக்கியம் எப்போதுமே வழங்கிவந்திருக்கிறது. அதுபோல் நாட்டுப்புறப் பாடல்கள், கூத்து தொடங்கி இன்றைய சினிமா வரை காதல் முக்கியமான கருப்பொருளாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஓவியங்கள், சிற்பங்கள் என்று நுண்கலைகளும் காதலைக் காட்சிப்படுத்தியிருக்கின்றன.

‘அகம், புறம்’ என்று பிரித்து காதலுக்கான இடத்தை வழங்கிய தமிழர்களுக்குக் காதலர் தினம் என்பது புதிதில்லை. ஆனால், இன்றைய சமகாலச் சூழலில் ‘காதலர் தினம்’ என்பது தனிப்பட்ட மனிதர்களின் உணர்வுகள் தொடர்பானது என்பதைத் தாண்டி, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறிவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலையங்கம்

சாதிய, மதவாத அடிப்படைவாத சக்திகள் காதலர் தினத்தைக் கடுமையாக எதிர்க்கின்றன. காதலர் தினத்தை எதிர்ப்பது என்ற பெயரால் அநாகரிகமான போராட்டங்களும் அரங்கேற்றப்படுவது ஆண்டுதோறும் வழக்கமாகிவிட்டது. மறுபுறத்தில் சாதி, மத மறுப்புத் திருமணங்களுக்கு அடிப்படையான காதலையும் காதலர் தினத்தையும் முற்போக்காளர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். குறிப்பாக அகமண முறையின் மூலம் காப்பாற்றப்பட்டு வரும் சாதியத்தை வீழ்த்த, காதலே சிறந்த ஆயுதம் என்பது வரலாறு நமக்குக் கற்றுத் தந்திருக்கும் பாடம்.

இலக்கியம் படிக்க, படைக்க, பேதங்கள் ஒழிய, சமத்துவம்

ஆதலினால் காதல் செய்வீர்!

- ஆசிரியர்