Published:Updated:

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

விஷ்ணுபுரம் சரவணன், அழகுசுப்பையா ச. படங்கள்: கே.ராஜசேகரன்

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

விஷ்ணுபுரம் சரவணன், அழகுசுப்பையா ச. படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

லை, இலக்கியம், அரசியல், சமூகம் எனப் பல்வேறு களங்களில் பங்களிக்கும் மனிதர்களை எப்போதும் கவனப்படுத்தி, கௌரவப்படுத்தி வருவதைத் தன் அடிப்படைப் பணிகளில் ஒன்றாகக் கருதுவது ஆனந்த விகடன். ஆண்டுதோறும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து விருதளிப்பதையும், பல்வேறு துறைகளில் நம்பிக்கைக்குரிய இளைஞர்களையும், மகத்தான சாதனை புரிந்த மனிதர்களையும் ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் அடையாளப்படுத்துவதையும் பல ஆண்டுகளாகச் செய்துவருகிறது. இரண்டாண்டுகளாக, இதை ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியாக நடத்தி, தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு செய்துவருகிறது.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

இந்தத் திறமைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு ஆளுமைகளும் கலந்துகொண்டு, கருத்துகளைப் பதிவுசெய்தனர்; பகிர்ந்துகொண்டனர். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக நடைபெற்ற இந்தத் ‘திறமைக்கு மரியாதை’ விழாவில், 2017-ம் ஆண்டின் சிறந்த படைப்புகளுக்காக விருது பெற்றவர்களுக்குத் தமிழகத்தின் முக்கியமான இலக்கிய மற்றும் கருத்தியல் ஆளுமைகள், விருதுகளை வழங்கினர். 2017-ம் ஆண்டில் ஊடகத்தில் சாதித்தவர்களுக்கும், நம்பிக்கை இளைஞர்கள் மற்றும் நம்பிக்கை மனிதர்களுக்கும் ஆளுமைகள் விருதுகளை வழங்கி, உரையாற்றினார்கள்.

நாடகத்திலிருந்து திரைக்கு வந்த கலைஞர்கள் கலைராணி, குமாரவேலு, சமூகநீதிக்காகத் தன்னுயிரைத் துறந்த அனிதாவின் குடும்பம், தன் காதல் கணவனை இழந்தபின்னும் சாதி ஒழிப்புக்காகவும் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகவும் ஓங்கிக் குரல் கொடுக்கும் கௌசல்யா சங்கர், மாணவியாக இருந்துகொண்டு மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் வளர்மதி, தமிழ் தேசியப் போராளி திருமுருகன், மனித மலத்தை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு எதிராகக் கலை ஆயுதம் ஏந்திய ‘மஞ்சள் நாடகக் குழு’, சமூகப் பிரச்னைகளை நையாண்டி மொழியில் பதிவுசெய்யும் ‘நக்கலைட்ஸ்’ இணையக் குழுவினர், ஊழல் ஒழிப்புச் செயற்பாடுகளைத் துணிச்சலுடன் மேற்கொள்ளும் அறப்போர் இயக்கம், கல்விமுறையில் மாற்றங்களைக் கொண்டுவர உழைக்கும் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்,  ‘நியூஸ் 18’ தொலைக்காட்சியின் குணசேகரன், இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.பி.ஜனநாதன், தங்கர்பச்சான், ராஜூமுருகன், கோபி நயினார், திரைப்பட ஆய்வாளர் சுபகுணராஜன், மனித உரிமைச் செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ், தமிழ் தேசியச் சிந்தனையாளர் தியாகு, கல்விச் செயற்பாட்டாளர்கள் பேராசிரியர் பிரபா.கல்விமணி, பிரின்ஸ் கஜேந்திரபாபு, பெண்ணியச் சிந்தனையாளர் ஓவியா, சுப.உதயகுமாரன், அரங்க குணசேகரன், நீதியரசர் அரி பரந்தாமன், அற்புதம் அம்மாள், விடுதலை ராஜேந்திரன் - சரஸ்வதி, ஜோ டி குரூஸ், ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், பத்திரிகையாளர்கள் இரா.ஜவஹர், ஏ.எஸ்.பன்னீர்செல்வம், திரைப்படத்தைத் தாண்டியும் மாற்று கலை, இலக்கிய முயற்சிகளை முன்னெடுக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் எனப் பல்வேறு ஆளுமைகள் கலந்துகொண்டனர். தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

வண்ணதாசன், கலாப்ரியா, ஜெயமோகன்,  எஸ்.ராமகிருஷ்ணன், இந்திரன், நாஞ்சில்நாடன், சி.மோகன், மனுஷ்ய புத்திரன், ஷோபாசக்தி, ஆதவன் தீட்சண்யா, சு.தமிழ்ச்செல்வி, ஓவியர் மருது, தமிழச்சி தங்கபாண்டியன், இமையம், ஜெயராணி, தமயந்தி, சல்மா, சு.வெங்கடேசன், பாஸ்கர் சக்தி போன்ற பல இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டனர்.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

வெவ்வேறு அரசியல் போக்குகள், வெவ்வேறு சிந்தனைகளைக்கொண்ட பலரையும் ஒருசேர ‘ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா’ மேடையில் பார்த்தபோது, ‘இதுதான் பன்மைத்துவத் தமிழகம்’ என்று தோன்றியது.

மகத்தான மனிதர்களுக்கு மகுடம் சூட்டும் ஆனந்த விகடன் நம்பிகை விருது விழாவில், கலை இலக்கிய அரசியல் ஆளுமைகள் நிறைந்திருந்தனர். பிரமாண்ட மேடையில் இந்த ஆண்டின் ஆனந்த விகடன் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டன. படைப்பாளிகள் ஒன்றுகூடும் சங்கமமாகவும் இனிய உரையாடலுக்கான களமாகவும் அமைந்திருந்தது விழா. மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் தீவிர அரசியல் கருத்துகளும் பகிரப்பட்டன.

விருதாளர்கள் விருதை வழங்கிச் சிறப்பித்தவர்கள் பற்றிய சிறிய பகிர்வு இது. 

மாணவர்கள் குருவுக்கு ஆற்றிய...

கலை இலக்கியத்தில் மகத்தான சாதனை புரிந்திருக்கும் படைப்பாளர்களைக் கெளரவிக்கும் விதமாக, ஆனந்த விகடன்  ‘பெருந்தமிழர்’ விருதை இந்த ஆண்டிலிருந்து அளிக்க முடிவெடுத்தது. இந்தப் பிரிவின் முதல் விருதைப் பெறுவதற்காக நாடகக் கலை உலகின் மதிப்பிற்குரிய அடையாளமாக விளங்கும் கூத்துப்பட்டறை ந.முத்துசாமி தேர்வுசெய்யப்பட்டார். தன் மனைவியுடன் அவர் மேடைக்கு வந்தது விகடனுக்குப் பெரும் மரியாதை. ந.முத்துசாமிக்கு இவ்விருதை வழங்க, கூத்துப்பட்டறைக் கலைஞர்கள் அழைக்கப்பட்டனர். மேடை நிறைந்து நின்ற அவரின் மாணவர்கள் மகிழ்ச்சி ததும்பும் உணர்வோடு தங்கள் ஆசானுக்கு அவ்விருதை அளித்தனர்.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

ஏற்புரையாக ந.முத்துசாமி பேசுகையில், “கூத்துப்பட்டறை ஆரம்பித்து இத்தனை பேரைப் பயிற்றுவித்து, சினிமா, நாடக உலகிலும் பணியாற்ற அனுப்பியதற்கு நான் மட்டும் காரணமல்ல. பின்புலமாகப் பலரும் இருக்கின்றனர். ‘க்ரியா’ ராமகிருஷ்ணன்தான் ‘நம்முடைய நடிகர்களை நாமே உருவாக்கலாம்’ எனும் யோசனையைக் கூறியவர். முருகேச தெருவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு, இடதுசாரி இயக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிற வீராசாமி ‘கூத்துப்பட்டறை’ எனும் பெயரை முன்மொழிந்தார். அதிலிருந்து தொடர்ந்து, இன்றுவரை நடிப்பதற்கான பயிற்சி அளித்து வருகிறோம். எங்கள் வாழ்க்கையில் பெரும்பங்கு வகித்தது ‘ஆனந்த விகடன்’ இதழ் என்று சொல்வேன். எங்கள் கிராமத்தில் பல பத்திரிகைகள் வாங்கி, அவற்றைத் தெருவில் உள்ள 30 குடும்பங்களும் சுழற்சிக்குவிட்டுப் படிப்பார்கள். அவற்றில் ஆனந்த விகடனை விரும்பி வாசிப்பேன். அவ்வளவு சிறப்பான விகடன் நடத்தும் விழாவில் பங்குபெறுவதையும்  ‘பெருந்தமிழர்’ விருது பெறுவதையும் மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்” என்றார்.

ந.முத்துசாமியின் சீடர்களில் ஒருவரான கலைராணி பேசுகையில், “பொதுவாக, எழுத்துகள் சினிமாவாக வேண்டும் எனப் பலரும் பேசுகிறார்கள்.  நல்ல எழுத்துகள் நாடகமாகவும் மாற வேண்டும் என்பது என் போன்றோரின் ஆசை. நல்ல நடிகர்கள் சினிமாவில் மட்டுமல்ல, நாடக உலகிலும் இயங்கிவருகிறோம். ந.முத்துசாமி ஐயாவுக்கு விருது வழங்க, அவரிடமிருந்து உருவான எங்கள் எல்லோரையும் அழைத்ததற்காக விகடனுக்கு நன்றி தெரிவிக்கிறோம்!” என நெகிழ்ச்சியோடு முடித்தார்.

எம் மக்களுக்கும்
வட்டார மொழிக்கும் கிடைத்த அங்கீகாரம்

சிறந்த நாவலுக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருதைக் கவிப்பித்தன், ‘மடவளி’ நாவலுக்காகப் பெற்றார். விருதை, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வழங்கினார்.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்
பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

கவிப்பித்தன், “விகடனின் நம்பிக்கை விருது பெற்றதை மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். தொண்டை மண்டல மக்களின் வட்டார மொழியில் தொடர்ந்து எழுதிவரும் எனக்கு, பாரம்பர்யமிக்க விகடன் குழுமத்திலிருந்து வழங்கப்பட்ட இந்த விருது, எனக்கும், என் மக்களுக்கும், எமது மக்களின் வட்டார மொழிக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். மக்களாட்சியின் மிக உச்சமான வளர்ச்சியாகக் கருதப்படுகிற உள்ளாட்சித் தேர்தல் என்கிற வடிவத்தை, இன்றைய ஜனநாயகம் எங்கு கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது என்பதை ‘மடவளி’ நாவலில் எமது மக்களின் மொழிநடையிலேயே பதிவுசெய்திருந்தேன். ஒடுக்கப்பட்ட வர்களையும் பெண்களையும் மேலும் மேலும் ஒடுக்குகிற ஒரு கருவியாகவே பஞ்சாயத்துத் தேர்தல் தொடர்பான நிகழ்வுகளும் கையாளப்படுகின்றன என்பதை எனது பதினைந்து ஆண்டுக்கால அனுபவத்தின் வழியே அசலாகப் பதிவு செய்ததை விகடன் அங்கீகரித்து விருது வழங்கியதும், அதை நான் பெரிதும் மதிக்கிற எழுத்தாளுமை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கரங்களால் பெற்றுக்கொண்டதும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என் மகிழ்ச்சியை ‘மகிழ்ச்சி’ என்ற ஒற்றை வார்த்தையால் மட்டுமே உணர்த்திவிட முடியாது. சில உணர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்கிவிடுவதில்லைதானே! நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். ஓர் அரசு அலுவலனாக வாழ்க்கையை வாழ நேர்ந்தாலும் ஒரு விவசாயியாக வாழ்வதையே பெருமகிழ்வாக நினைப்பவன். ரத்தமும் சதையுமாக உலக மக்களெல்லாம் வாழ உயிர்கொடுக்கிற பசுமையும் அதனோடு இயைந்து கிடக்கிற விவசாயிகளின் வாழ்வும் ரசாயன உரங்களால் மலடாகிக் கொண்டிருக்கிற இன்றைய சூழலில், விகடனின் இந்த விருது என் வேருக்கு இடப்பட்ட ‘உயிர் உரமாக’க் கருதுகிறேன். எங்களின் வார்த்தையில் சொல்வதென்றால், இந்த விருது எங்களுக்கான அடி உரம்.

ஆழ்மனக் கதைகளை எழுத

உத்வேகம் அளிக்கும் விருது

சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருதை நரன், ‘கேசம்’ எனும் தொகுப்புக்காகப் பெற்றார். வியப்பும் மகிழ்ச்சியுமாக அரங்கைப் பார்த்துகொண்டிருந்த தன் மகள் சூசனோடு மேடையேறிய நரனுக்கு, எழுத்தாளர்கள் வண்ணதாசனும் நாஞ்சில் நாடனும் விருது வழங்கினார்கள்.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

விருதுக்கான ஏற்புரையில் நரன், “இந்த விருது எனக்குக் கலைப் படைப்பின் மீதான பெரும் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. விகடனுக்கு நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால், நான் எழுதிய சிறுகதைகள் எல்லாமுமே கடந்த 14 ஆண்டுகளாக எனக்குள் அரூபமாய்க் கிடந்தவை. தினமும் குறைந்தது 20 பக்கங்கள் இலக்கிய வாசிப்பு. வருடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு திரைப்படங்கள். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பயணங்கள். என்னுள்ளிருக்கும் அரூபக் கதைகளிலிருந்து 200 சொற்களாவது தினமும் எழுதுவது என வேலைத்திட்டங்களை வரையறுத்துக்கொண்டேன். இந்த ஆண்டும் என் அலுவலகப் பணிக்கான நேரம்போக மற்ற நேரம் அனைத்தையும் எழுதவும் வாசிக்கவுமே திட்டமிட்டிருக்கிறேன். நேரமும் வாய்ப்பும் கிடைக்கும்போது மற்ற எல்லாக் கதைகளையும் எழுத்தாகப் பதிவுசெய்ய வேண்டும். அதற்கான உத்வேகத்தை விகடன் விருது முழுமையாக அளித்திருக்கிறது. விகடனுக்கும் தேர்வுக் குழுவுக்கும் நன்றியும் அன்பும்” என்றார்.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

விருது வழங்கிய வண்ணதாசன் பேசுகையில், ”  ‘ஆத்தியப்பனுக்கு உடலில் எறும்புகள் ஊர்வதுபோல் உணர்வு. காலையிலிருந்தே அப்படித்தான் இருந்தது. இப்படியான உணர்வுகள் வரும்போது அவர் மனதில் இனம்புரியாத சந்தோஷம் கொப்பளிக்கும்’-  “நரனின் கேசம் சிறுகதையின் தொடக்க வரிகள் இவை. நரனின் கதைகளை வாசிக்கிறவனாக நான் அந்த ஆத்தியப்பனாக நிற்கிறேன். ஆத்தியப்பனின் புண்களைத் தன் கேசத்தால் வருடித் தந்த ஆவுடையாக நிற்கிறேன். அந்த ஆத்தியப்பனுக்கு நிகழ்ந்ததைப்போல... இந்த மேடையில் நரனுக்கு உண்டாவதைப்போல... என் மனதிலும் எறும்பு ஊர்வதை உணர்கிறேன்” என்றார் கவித்துவமாக.

விகடன் விருது....

வெகுசனத்திடம் சென்றடையச் செய்யும் பாதை

சிறந்த கவிதைத் தொகுப்புக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருதை யவனிகா ஸ்ரீராம், ‘அலெக்ஸாண்டர் காலனி’ நூலுக்காகப் பெற்றார். அவருக்குக் கவிஞர்கள் கலாப்ரியாவும் தமிழச்சி தங்கபாண்டியனும் விருதை வழங்கினர்.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

யவனிகா ஸ்ரீராம் தனது ஏற்புரையாக, “கடந்த 35 ஆண்டுகளாகக் கவிதை எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு, இந்த ‘ஆனந்த விகடன்’ விருது வெகுசனத்தை நோக்கி எனக்கு ஓர் அரசியல் பாதையை வகுத்துக்கொடுத்துள்ளது. ‘அலெக்ஸாண்டரின் காலனி’ என்ற நூலில் இருக்கும் கவிதைகள் அனைத்தும் நவீனத்தன்மை சார்ந்த, ஒருபாதிப் புனைவுத்தன்மையில் தொகுப்பாக எழுதப்பட்டவை. மேலும், பின் நவீனத்துவப் பாணியில் சில முயற்சிகளும் அதில் இருக்கும். இடதுசாரியினுடைய சமகாலப் பின்-மார்க்ஸிய மனோபாவத்தினையும், தமிழ்ச் சமூகம் என்ன விதத்தில் தற்போது இருக்கின்றது என்பதையும் குறிக்கும்விதமான கவிதைகள் அடங்கியது ‘அலெக்ஸாண்டரின் காலனி’.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

தொடர்ந்து நான் சிற்றிதழ்களில் அதிகமாக அரசியல் கவிதைகள் எழுதும் அதேவேளையில், அவை மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதையும் புரிந்துகொள்கிறேன். அந்த வகையில் ‘ஆனந்த விகடன்’ என் கவிதையிலிருக்கும் அரசியல்தன்மையைப் புரிந்துகொண்டு, அவை வெகுசன மக்களிடம் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில், இந்த விருதை எனக்குக் கொடுத்துள்ளது. அதற்காக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த விருது மேலும் என்னை மக்களுக்கான அரசியல் தளத்தில் இயங்கச் செய்யும். மேலும், இந்த ‘விகடன் விருதுகள்’ விழா கலை இலக்கியப் பண்பாட்டு, தத்துவார்த்த முகாம்களை முதன்மைப்படுத்தி நடத்தப்பட்டது இன்னும் உற்சாகம் தருகிறது” என்றார்.

சிந்திக்கும் முறையில் மாற்றம் வேண்டும்

சிறந்த கட்டுரைத் தொகுப்புக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருதை சுகுணா திவாகர், ‘சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை’ எனும் நூலுக்காகப் பெற்றார். தந்தை விருது பெறும் தருணத்தில் தானும் இணைந்துகொள்ள உடன் வந்திருந்தார் அவரின் மகன் நவீன் சித்தார்த். சமூகச் செயல்பாட்டாளர் ஓவியா மற்றும் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் விருதினை வழங்கினர்.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

சுகுணா திவாகரின் ஏற்புரையாக, “ஆனந்த விகடன், நீண்ட காலமாகவே தமிழ் எழுத்தாளர்களுடன் தொடர்ச்சியான உறவைப் பேணிவரும் இதழ். மாற்று அரசியல் பார்வைகளுக்கும் தீவிர இலக்கியத்துக்கும் முக்கியமான இடமளிக்கும் ‘ஆனந்த விகடன்’ அளிக்கும் இந்த விருது மகிழ்ச்சியளிக்கிறது. ‘சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை’ என இந்தத் தொகுப்புக்குத் தலைப்பை வைத்தபோது முக்கியமான ஒரு கேள்வி எழுந்தது. மனிதர்கள் என்றாலே சிந்திக்கக்கூடிய விலங்குகள்தான். நாம் தொடர்ச்சியாகச் சிந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், நம்முடைய சிந்தனைகளின் மையம் எது, சிந்தனை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதைப் பற்றிக் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

சாதாரண மனிதர்களிலிருந்து எழுத்தாளர்கள், படைப்பாளிகள், அரசியல்வாதிகள், சமூகப் போராளிகள் என எல்லோரும் பயன்படுத்தக்கூடிய பெரும்பான்மையான சொற்கள்  ஆண்மைய வார்த்தைகளாக, ஆண்களைக் குறிப்பிடுவதாகவே உள்ளன. பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்துப் பல ஆண்டுகளாயிற்று, ஆனால், வாக்காளன் எனும் சொல்லுக்கு இணையான பெண்பால் சொல் இதுவரை இல்லை. அதேபோல்தான் நம்முடைய சிந்தனைகளிலும் சொற்களிலும் சாதியக்கறையும் வர்க்க ஏற்றத்தாழ்வும் படிந்திருக்கின்றன. நம் சிந்தனை என்பதே அதிகாரத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்தச் சிந்தனையையும், சிந்திக்கும் போக்கையும் நோக்கையும் மாற்ற வேண்டியது முதன்மையான பணி என்று நம்புகிறேன். எனவே, சிந்திப்பதைவிடச் சிந்தனையை மாற்றுவதற்காகச் சிந்திப்பதே முக்கியமானது என்ற அடிப்படையிலேயே இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். இந்த விருது, சிந்தனை மாற்றத்துக்காகச் சிந்திக்கக்கூடிய அனைவருக்குமானது” என அழுத்தமாகப் பதிவு செய்தார்.

கற்றறிந்த சபையில் கிடைத்த விருது

சிறந்த சிறார் இலக்கியத்துக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருதினை ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’ எனும் நூலுக்காக ரமேஷ் வைத்யா பெற்றார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் விருதை வழங்கினார்.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

ரமேஷ் வைத்யா தனது ஏற்புரையில், “தமிழில் சிறுவர் இலக்கியம் என்பது முடிவாக எழுதுவது என்றில்லாமல், இதை எழுதினால் சிறுவர்களுக்குப் பிடிக்குமா, இதை எழுதினால் அவர்கள் ரசிப்பார்களா எனப் பயிற்சி அளவிலேயேதான் இருக்கின்றது. அந்த வகையில் இந்த விருது நாம் எழுதிப் பார்க்கும் பயிற்சி என்பது, எல்லோராலும் ஏற்றுக்கொள்வதாக இருக்கின்றது என்பதை உணர்த்துவதாகவே இருக்கிறது. மேலும், விருது கொடுக்கும் நிகழ்வில், எழுத்தில் இயங்கிக்கொண்டிருக்கிற முன்னோடிகள் பலர் முன்னிலையில் அதாவது, கற்றறிந்தோர் சபையில் அங்கீகரிக்கப்படுகின்றேன். இதைவைத்துப் பார்த்தால், தமிழ் இலக்கியத்துக்குத் தமிழக அளவில் கொடுக்கப்படும் உயரிய விருது விகடன் விருதாகத்தான் இருக்கும்.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

தமிழில் சிறுவர்களுக்காகத் தொடர்ந்து பல்வேறு விஷயங்களை எழுதிவருகிறேன். சிறுவர்கள் தங்களுக்குள் எப்படிப் பேசிக்கொள்வார்கள்; எதற்காகச் சிரித்துக்கொள்வார்கள் என்பதை மனதில்வைத்தே எழுதுகிறேன். ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’ என்பதன் மொத்தக் கதையையும் தீர்மானித்து, பின்னர் ஒரு தொடராக மாணவர் இதழ் ஒன்றில் எழுதினேன். சிறுவர்கள் மிகுபுனைவு, சாகசம் மிகுந்த கதைகளையே விரும்புவர் என்ற நிலை இப்போது இல்லை. சிறுவர்களுக்காக அப்படி எழுதவும் முடியாது.  எனவே,  இது வெறும் சாகசம் மட்டுமில்லாது, குழந்தைகளின் மாசுபடாத இதயத்தில் இருக்கும் அன்பையும் மனித விழுமியங்களையும் மதிப்பீடுகளையும் அவர்களுக்கு உணர்த்துவதாகவும் அமைத்து எழுதியுள்ளேன். இவற்றை நேரடியாகக் கதையில் கூறவில்லை. ஆனால், அந்தக் குறிப்பை விகடன் உணர்ந்துகொண்டதை எனக்குக் கிடைத்த முதல் விருதாகக் கருதுகிறேன். உண்மையிலேயே அதிகமாக எழுத வேண்டும், விதவிதமாக, புதிது புதிதாக எழுத வேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியது இந்த விருது” என நெகிழ்ந்தார்.

அடிப்படைவாதங்களுக்கு எதிராக முளைத்துக்கொண்டே இருப்போம்

சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்புக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருதை ‘தலித் பார்ப்பனன்’ எனும் நூலினை மொழிபெயர்த்தமைக்காக ம.மதிவண்ணன் பெற்றார். விருதினை எழுத்தாளர்கள் ஷோபாசக்தியும் சு.தமிழ்ச்செல்வியும் வழங்கினர்.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

ம.மதிவண்ணன் ஏற்புரையாக, “விகடன் அளிக்கும் இவ்விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. மராத்திய எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலே எழுதிய கதைகளை, ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். சரண்குமார் லிம்பாலே இந்துத்துவாக்களின் தலைமையகமான மகாராஷ்ட்ராவிலுள்ள இந்துத்துவவாதிகளை எதிர்கொள்ளும் விதமாக இந்தக் கதைகளை எழுதியுள்ளார். அவற்றை இந்தச் சூழலில் ஏன் மொழிபெயர்க்க வேண்டும் எனக் கேள்வியை எழுப்பினால், சென்ற ஆண்டில் மட்டும் - ரயில் அருகில் உட்கார்ந்தது, தொழிலுக்காக மாட்டை வண்டியில் ஏற்றிச் சென்றதுபோன்ற அற்பமான காரணங்களுக்காகக் கொல்லப்பட்ட ஜூனைத் கான் உள்ளிட்ட நான்கு பேரின் மரணம் என்னை வெகுவாகப் பாதித்தது. அவர்கள் இஸ்லாமியர் எனும் காரணத்துக்காகவே கொல்லப்பட்டார்கள். எழுத்தாளன் மற்றும் செயல்பாட்டாளனாகவும் இருக்கும் நான், இந்த விருதைக் கொல்லப்பட்ட அந்த நான்கு பேருக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

அவர்களோடு தொடர்ந்து நிற்போம் எனும் உறுதிமொழியை அளிக்கிறேன். தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி, கெளரி லங்கேஷ் என நீங்கள் எத்தனை பேரைக் கொன்றாலும் நாங்கள் முளைத்து வந்துகொண்டே இருப்போம்” எனக் கூறியதும் பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல்.

விகடன் விருது

இன்றியமையாத

சமூகச் செயல்பாட்டின் அடையாளம்

சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்புக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருதை ‘தாகங்கொண்ட மீனொன்று’ எனும் நூலினை மொழிபெயர்த்தமைக்காக என்.சத்தியமூர்த்தி பெற்றார். எழுத்தாளர்கள் சல்மாவும் தமயந்தியும் விருதினை வழங்கினர்.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

என்.சத்தியமூர்த்தி தனது ஏற்புரையில், “விகடன் நம்பிக்கை விருதுகள், இலக்கியம் மற்றும் பல்வேறு துறைகளுக்கும் வழங்கப்படுவது, வரவேற்றுக் கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வாகும். குறிப்பாக, இலக்கியம் சார்ந்த விருதுகள், தீவிர இலக்கியப் படைப்பாளிகளை ஊக்குவித்துக் கௌரவிப்பதுடன், அவர்களது படைப்புகளைப் பரந்துபட்ட பொதுவெளிகளுக்கு எடுத்துச் செல்லவும் வாசகப் பரப்பைக் கூடுதலாக்கவும் ஏதுவாகிறது. சிறுபத்திரிகைகள் அருகியும் நடுத்தர மற்றும் ஜனரஞ்சகப் பத்திரிகைகள் பெருகியும் வரும் நிலையில், விகடனின் இத்தகைய சீரிய முயற்சிகள் தமிழ்க் கலாசாரச் சூழலின் தரம் மேன்மையடையக் களம் அமைத்துத் தருகிறது.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

இலக்கியத் தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல், படைப்புகளைப் பிரபலமாக்குதல் இன்றியமையாத சமூகச் செயல்பாடு. அதை விகடன் மிகுந்த பொறுப்புஉணர்வுடன் வெற்றிகரமாகச் செய்துவரும் வேளையில், இலக்கிய விருது விழாவின் வடிவமைப்பை எளிமையோடும் அழகோடும் மாற்றியமைக்க வேண்டும். திரையுலக விருதுகளுக்கு எனப் புழங்கிவரும் மேடை வடிவமைப்பும் அலங்கார ஜோடனைகளும், ஏன்டி வர்ஹால் கூறியதைப் போன்ற ‘பதினைந்து நிமிடப் புகழி’ன் மயக்கத்தில் ஒருவரைத் தற்காலிகமாகப் புளகாங்கிதம்  அடையச் செய்யலாம். ஆனால், அது கலையை மெருகேற்றாது. தீவிர இலக்கியத்திற்கு ஒருபோதும் ஒவ்வாது!” என்றார்.

இந்த அங்கீகாரம்

பரந்துபட்ட வாசகர்களுக்கு

நூலைக் கொண்டுசெல்லும்

சிறந்த மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்புக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருதினை, ‘கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்’ எனும் நூலை மொழிபெயர்த்தமைக்காக செ.நடேசன் பெற்றார். தன் பேரன், பேத்தியோடு மேடையேறிய செ.நடேசனுக்கு, எழுத்தாளார் அ.மார்க்ஸ் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர் தியாகு இருவரும் விருது வழங்கினர்.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

ஏற்புரையில் நடேசன், ‘‘ ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்றான் பாரதி. அவனின் வழிகாட்டலில் சிறு துளி நான். `அநீதி எப்போதெல்லாம் இழைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் நீ அதிர்வாய் என்றால், நீயும் என் தோழன்’ என்றான் சேகுவேரா. அவனின் சிறுதுளி நான். இந்திய நாடு ஜனநாயக, மதச்சார்பற்ற, சோசலிஸக் குடியரசாக மலர வேண்டும் என்று, இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை வடிவமைத்த சிற்பிகள் நமக்குச் சொன்னார்கள். அதைத் தன் மனதில் ஆழப் பதித்துவைத்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் முதுபெரும் தோழர் சங்கரய்யாவின் வழியில், ஜனநாயக, மதச்சார்பற்ற, சோசலிஸக் குடியரசின் விழுமியங்களைத் தமிழ் மண்ணில் நிலைநாட்டவும் அதற்கு எதிரான போக்குகளை முறியடிக்கும் என் முயற்சிக்கு நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி, கெளரி லங்கேஷ் ஆகியோர்களே வழிகாட்டிகள். இவர்களின் வழியில் என் பணி தொடரும்.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

இந்த நூலை மொழிபெயர்க்க அனுமதியளித்த நந்திதா ஹக்ஸருக்கும் பதிப்பாளர் அனுஷ்-க்கும் நன்றி. ‘ஆனந்த விகடன்’ அளித்திருக்கும் அங்கீகாரம் இந்த நூலைப் பரந்துபட்ட வாசகர்களுக்குக் கொண்டுசெல்லும் என நம்புகிறேன்.” என்றார்.

தனக்கு விருது வழங்கியவர்களுக்கு நன்றி கூறும் விதமாகப் பேரன், பேத்திகளின் கைகளால் புத்தகப் பரிசை வழங்கச் செய்தார்.

இருபது ஆண்டு உழைப்பிற்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்

சிறந்த சிற்றிதழுக்கான ‘ஆனந்த விகடன்’ விருதுக்கு ‘நிழல்’ இதழ் தேர்வுசெய்யப்பட்டது. திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனும் எழுத்தாளர் சுபகுணராஜனும் ‘நிழல்’ இதழின் ஆசிரியர் ப.திருநாவுக்கரசுக்கு விருது வழங்கினர்.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்
பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

ப.திருநாவுக்கரசு தனது ஏற்புரையில். “குறும்படங்களை மையமிட்டு உருவாக்கப்பட்ட ‘நிழல்’ அமைப்பு, கடந்த 20 ஆண்டுகளாகக் குறும்படப் பயிற்சிப் பட்டறைகளைத் தமிழகம் முழுவதும் நடத்திவருகிறது. குறிப்பாக, கிராமப்புற இளைஞர்களை மையமிட்டு இந்தப் பயிற்சிப் பட்டறைகள் நிகழ்த்தப்பட்டுவருகின்றன. அதற்கான ஊன்றுகோலாகத்தான் இந்த ‘நிழல்’ சிற்றிதழ் ஆரம்பிக்கப்பட்டது. இதன்மூலம் எங்களது செயல்பாடுகளைத் தமிழகம் முழுவதும் கொண்டுசெல்வது எளிதாக இருந்தது. மிகக் குறைந்த செலவில் திரைப்படத் தொழில்நுட்பங்களைக் கிராமப்புற மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், கடந்த 15 ஆண்டுகளாகப் பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறோம். உலக, இந்திய, தமிழக அளவில் குறும்படங்கள், ஆவணப்படங்கள் அடங்கிய தொகுப்பை, ‘சொல்லப்படாத சினிமா’ என்ற நூலில் தொகுத்தோம். மேலும், உலகப் புகழ்பெற்ற இயக்குநர்களின் பேட்டி, அவர்களது முழுநீளத் திரைப்பிரதிகளை வெளியிட்டுள்ளோம். எங்கள் பயிற்சிப் பட்டறையிலிருந்து வந்தவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று திரைத்துறையில் இருக்கின்றனர். இத்தனை நாளாகக் கஷ்டப்பட்டுச் செய்த ஒரு வேலைக்கு அங்கீகாரம் மிகச் சிறிய அளவிலேயே இருந்தது. ‘ஆனந்த விகடன்’ விருதுதான் எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.  இந்த அங்கீகாரம் என்பது இப்போது கிடைத்ததில்லை. 1983-ம் ஆண்டில் நாங்கள் கும்பகோணத்திலிருந்து செய்துகொண்டிருந்த குறும்படப் பயிற்சிப் பட்டறைப் பணிகளை அப்போதே இனம்கண்டு செய்தியாக வெளியிட்டு, எங்களை அங்கீகரித்தது விகடன்” என்றார்.

படங்கள்: விகடன் டீம்

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்
பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்
பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்
பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

பண்பாட்டு அடையாளத்தின் பதிவு

சிறந்த வெளியீட்டுக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருது,  ‘சித்திரக்கூடம் - திருப்புடை மருதூர் ஓவியங்கள்’ எனும் நூலுக்கு வழங்கப்பட்டது. பேராசிரியர் சா.பாலுசாமியும் வெளியீட்டாளர் ‘தடாகம்’ அமுதரசனும் விருதினைப் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர்  சி.மோகன், கலைவிமர்சகர் இந்திரன் இருவரும் விருதை வழங்கினர்.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

பேராசிரியர் சா.பாலுசாமி தனது ஏற்புரையாக, “தமிழ்ச் சமுதாயத்தில் பண்பாட்டு, அரசியல், சமூக வரலாற்றில் நீக்கமறக் கலந்திருக்கிற ‘ஆனந்த விகட’னின் அங்கீகாரம், எல்லையில்லாப் பரவசத்தைத் தருகிறது. இந்தத் துறையில் ஈடுபடுகிறவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. 2004-ம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள சுவர் ஓவியங்களை ஆவணப்படுத்தினோம். அழிந்து வரும் கலை மரபைப் பதிவுசெய்யும் நோக்கமே எங்களை உந்தித் தள்ளியது.

பன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்

நம்முடைய பண்பாட்டு, அரசியல் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கு மிகப் பெரிய ஆவணமாகச் சுவர் ஓவியங்கள் இருக்கின்றன. அவற்றில் திருப்புடைமருதூர், நாறும்பூநாத சுவாமி கோவில் 16-ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்களை இந்த நூலில் பதிவுசெய்திருக்கிறோம். இதில் உள்ள வரலாற்று ஓவியங்கள் பெரும் போரைச் சித்திரிக்கின்றன. அந்தப் போர், யார் யாருக்கு இடையில் நடந்தது; எப்போது நடந்தது; போருக்கு என்ன காரணம் என்பதையெல்லாம் கண்டுபிடிக்க ஆறு ஆண்டுகளாயின. அதைக் கண்டுபிடித்து எழுதியது பெரியதல்ல, இவ்வளவு விலை மிக்க நூலைத் தமிழில் பதிப்பது என்பதுதான் பெரிய முயற்சி. இந்தச் சூழலுக்குத் தம் மரபுகளை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே கடும் சிரமப்பட்டு தவமாக இந்த நூலைக் கொண்டுவந்திருக்கிறது ‘தடாகம்’ பதிப்பகம். இந்த நூல் நமது பண்பாட்டு அடையாளத்தின் பதிவாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.