‘‘தமிழகத்தில் ரயில்வே, தபால்துறை உள்பட பல்வேறு அரசுத்துறைகளுக்கான பணியாளர் தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பட்டு, வெளிமாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரித்துவருகிறது. இப்போது, வி.ஏ.ஓ மற்றும் குரூப் 4 பணியாளர்களுக்கான தேர்வை வெளிமாநிலத்தவர் மட்டுமன்றி, பூட்டான் மற்றும் நேபாள நாட்டினரும் எழுதலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது. தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளைப் பாதிக்கும் இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது’’ என்று தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொந்தளிக்கிறார்கள்.

‘தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே’ என்ற முழக்கத்தை முன்வைக்கும் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனிடம் பேசினோம். ‘‘தமிழ்நாட்டில் 90 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து வேலைக்காகக் காத்திருக்கின்றனர். ‘படித்து முடித்துவிட்டு வேலையின்றி அலைவோரின் விகிதாச்சாரம், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிகம்’ எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பி.இ., பி.டெக் படித்த பொறியியல் பட்டதாரிகள் பலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் துப்புரவுத் தொழிலாளர் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்கள். நீதித்துறைக்கே அதிர்ச்சி தந்த விஷயம் இது.

படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இங்கு கிடைக்கவில்லை. ஏதாவது ஓர் அரசு வேலை கிடைக்காதா என்று தமிழ்நாட்டு இளைஞர்களும், பெண்களும் ஏங்கித் தவிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு இளைஞர்களைப் பற்றிக் கவலைப்படாத தமிழக ஆட்சியாளர்களோ, அநீதி இழைக்கத் துணிந்துவிட்டார்கள். 9,351 காலிப் பணியிடங்க ளுக்கான வி.ஏஓ., குரூப்-4 தேர்வு எழுதுவதற்கு நேபாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்களும், உ.பி., பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலத்தவரும் எழுதலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதேபோல ‘வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து இந்தியா வந்துள்ள அகதிகளும் குரூப்-4 தேர்வு எழுதலாம்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்த விவகாரத்தைச் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதிவுசெய்தார். அப்போது, ‘இது எல்லா மாநிலங்களிலும் உள்ள நடைமுறைதான்’ எனச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் கூறினார். இது மிகப்பெரிய பொய். கர்நாடகம், மகாராஷ்ட்ரா, குஜராத், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் உள்பட பல மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களுக்கே மாநில அரசு வேலைகள் மற்றும் மத்திய அரசு வேலைகளை வழங்க வேண்டும் எனச் சட்டங்களும் அரசாணைகளும் இயற்றப்பட்டுள்ளன. ‘கன்னடம் தெரியாத வங்கி ஊழியர்கள் கர்நாடகாவில் பணிபுரியக் கூடாது’ என அம்மாநில அரசு கூறியுள்ளது. மக்களோடு தொடர்புடைய துறைகளில் பணி செய்பவர்கள், மக்கள் பேசும் மொழி தெரியாமல் இருந்தால் எப்படி? இதுதான் இந்த உத்தரவின் அடிநாதம். அதுபோன்ற சட்டங்கள் தமிழ்நாட்டில் இல்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் மொழி, இன அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலத்தின் அரசுப்பணிகளுக்கு பிற மொழிக்காரர்கள் வந்தால், அது ஜனநாயக நிர்வாகமாக இருக்காது. ஆங்கிலேயர் ஆட்சிக்கால ஆதிக்க நிர்வாகமாகவே இருக்கும். மக்கள் தங்களுடைய குறைகளையும் தேவைகளையும் இந்த ஊழியர்களிடம் எடுத்துச் சொல்வதற்குப் பெரும் சிரமப்படுவார்கள். 2015-ம் ஆண்டு, தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதுதான் பிற நாட்டினர் மற்றும் பிற மாநிலத்தவர்களுக்கு தமிழக அரசுப்பணியில் அனுமதி அளித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2016-ம் ஆண்டில், அரசிதழிலும் அது வெளியிடப்பட்டது. அந்த அநீதிப் பாதையில்தான், எடப்பாடி பழனிசாமி அரசு பயணிக்கிறது.

தமிழ்நாட்டில் ரயில்வே, பி.ஹெச்.இ.எல்., நெய்வேலி அனல்மின் நிலையம், வருமான வரி அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளவர்களில் 80 சதவிகிதம் பேர் வெளிமாநிலத்தவர். ‘பிற மாநிலங்களில் அங்குள்ள மக்களுக்கே அரசு வேலைகள் வழங்க வேண்டும் என்று சட்டங்களும் அரசாணைகளும் இருப்பதுபோல, தமிழ்நாட்டிலும் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்று வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டில் வி.ஏ.ஓ மற்றும் குரூப்-4 தேர்வு 11.2.2018 அன்று நடைபெற உள்ளது. பிற நாடுகள் மற்றும் பிற மாநிலத்தவர்களின் விண்ணப்பங்களை நீக்கிவிட்டு இந்தத் தேர்வை நடத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 3-ம் தேதி சென்னையில் மாநாடு நடத்தவுள்ளோம்’’ என்றார்.

ஒவ்வோர் ஆண்டும் வெறும் 15 ஆயிரம் பேருக்கே தமிழகத்தில் அரசு வேலை கிடைக்கிறது. ‘‘இதையும் மற்ற மாநிலங்களையும் நாடுகளையும் சேர்ந்தவர்கள் பங்கு போட்டுக்கொண்டால், அப்புறம் தமிழக இளைஞர்கள் எங்கே போய் வேலை தேடுவார்கள்?’’ என்ற கேள்வியில் நியாயம் இருக்கவே செய்கிறது.

- கு.ராமகிருஷ்ணன்
ஓவியம்: கோ.ராமமூர்த்தி