“தன் பேரப்பிள்ளைகளின் காதணி விழாவைப் பிரமாண்டமாக அமைச்சர் நடத்திவிட்டார். ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்தையே இது மிஞ்சிவிட்டது” என்று செல்லூர் ராஜுவின் ஆதரவாளர்கள் பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள். இந்த விழாவை ஜனவரி 28-ம் தேதி பிரமாண்டமாக நடத்தி, முதல்வரையும் துணை முதல்வரையும் வரவழைத்து, மதுரையையே செல்லூர் ராஜு அலற வைத்துவிட்டார். தமிழகத்திலேயே காதணி விழாவை யாரும் இப்படி நடத்தியிருக்க முடியாது.

பிரமாண்டமான நிகழ்ச்சிகளை நடத்துவதில் செல்லூர் ராஜு கில்லாடி. ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோதும், மருத்துவமனையில் அட்மிட் ஆனபோதும், பல பிரார்த்தனை நிகழ்ச்சிகளைத் தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் நடத்தினார். இப்போது இந்தக் காதணி விழாவையும் பிரமாண்டமாக நடத்தியுள்ளார். தன்னுடன் அவ்வப்போது மல்லுக்கட்டும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு தன் செல்வாக்கைக் காட்டவும், இந்த விழாவை அவர் பயன்படுத்திக்கொண்டார். மதுரையில் எங்கு பார்த்தாலும், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் செல்லூர் ராஜு சிரித்துக்கொண்டிருக்கும் பேனர்கள் காணப் பட்டன. மதுரையின் பிரபலமான கறிக்கடை உரிமையாளர் முத்துகிருஷ்ணன், விருந்து நிகழ்ச்சிக்கு டன் கணக்கில் இறைச்சி ஸ்பான்சர் செய்திருந்தார். செல்லூர் ராஜுவின் ஆதரவாளர் கள், அனைத்து நாளிதழ்களிலும் முழுப் பக்க விளம்பரங்கள் கொடுத்திருந்தனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வைத்திருந்த விளம்பரங்களில், காதணி விழாவைப் பற்றிக் குறிப்பிடாமல் எடப்பாடி, ஓ.பி.எஸ் ஆகியோரை மட்டுமே வரவேற்றிருந்தார்.

காதணி விழா நடைபெற்ற நாளன்று பாண்டி கோயிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திய பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாயினர். பாண்டி கோயில் ரிங் ரோட்டில் விருதுநகர், நெல்லை, நாகர்கோயில், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்து வரும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பல தனியார் பேருந்துகளும், வாகனங்களும் நீண்ட நேரம் சாலையிலேயே காத்துக்கிடந்தன. அன்று முகூர்த்த நாள் என்பதால், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்குச் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர்.

திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன், இந்த விழாவில் முன்வரிசையில் அமர்ந்திருந்தார். செல்லூர் ராஜுவின் பேரக் குழந்தைகளை வாழ்த்திப் பேசிய ஓ.பிஎஸ்., “செல்லூர் ராஜு எப்போதும் சிரித்த முகத்துடன், அனைவரையும் அரவணைத்துச் செயல்படுகிறார்” என்றார். முதல்வர், “ஜெயலலிதாவின் அன்பைப் பெற்று அமைச்சரானார் செல்லூர் ராஜு. இன்று அவர் கட்சியின் தூணாக இருக்கிறார். ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டரும் கட்சிக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருந்தால், உயர்ந்த நிலைக்கு வரலாம்” என்றார்.

இந்த விழாச் செலவுக்கான பணம் எங்கிருந்து, யார் மூலம் வந்தது என்பதை இப்போது வருமானவரித் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

- செ.சல்மான், படங்கள்: வி.சதீஷ்குமார்