தலித்துகளில் இருவேறு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல், மதுரை எல்லையைத் தாண்டி அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள சந்தையூர் கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. அதையொட்டிச் சுவர் ஒன்று உள்ளது. ‘நாங்கள் உள்ளே வராமலிருக்க இப்படி ஒரு சுவரைக் கட்டியுள்ளனர்’ என்று தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். ‘அது, காளியம்மன் கோயிலின் சுற்றுச்சுவர்தான். கோயிலைப் பாதுகாக்கக் கட்டப்பட்டதுதான்’ என்று இன்னொரு பிரிவினர் சொல்கிறார்கள்.

‘இது தீண்டாமைச் சுவர்’ என்று சொல்லி அதனை இடிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். அதை விசாரித்த நீதிமன்றம், நான்கு மாதங்களுக்குள் அந்தச் சுவரை இடிக்கச் சொல்லி, 2017 செப்டம்பர் 9-ம் தேதி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. நான்கு மாதங்கள் முடிந்த நிலையில், ஆதித்தமிழர் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் திரண்டு அந்தச் சுவரை இடிக்கச்சென்றனர். அதனால், அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. முடிவுகள் எடுப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் காலஅவகாசம் கேட்டுள்ளது. தற்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, ஒருவித பதற்றத்துடன் சண்டையூர் போலக் காட்சியளிக்கிறது சந்தையூர். இரு சமூகங்களுக்கும் ஆதரவான தலைவர்கள் அங்கு சென்று வருவதால், பதற்றம் அதிகரித்து வருகிறது.

பிற்பட்ட சாதியினர் அதிகமுள்ள சந்தையூர் கிராமத்தின் ஒரு பகுதியில், இந்திரா காலனி உள்ளது. இங்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினர் உள்ளனர். இவர்களுக்குள்தான், மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல், காங்கிரஸ் ஆட்சிக் காலம் முதல் நடந்துவருகிறது. இது தொடர்பாக, பழனிவேல் என்பவர் நம்மிடம் பேசினார். “காமராஜர் ஆட்சிக் காலத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரில் எட்டு குடும்பத்தினரும், இன்னொரு பிரிவினரில் 13 குடும்பத்தினரும் வாழ்வதற்காக சுமார் ஒரு ஏக்கர் 70 சென்ட் நிலம் கொடுக்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம் ஆக ஆக, இரண்டு தரப்புக்குள்ளும் பிரச்னை ஆனது. சின்னச் சின்ன சண்டைகள் ஏற்பட்டு, இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. அதற்குக் காரணம் அவர்கள்தான். எங்களை ஒதுக்க வேண்டும் என்பதற்காக, கோயிலைச் சுற்றி வேலிகள் அமைத்தனர். ஆதித்தமிழர் கட்சி ஜக்கையன் புகார் அளித்ததால், வருவாய்த் துறை அதிகாரிகள் வேலியை அகற்றினார்கள். என் உறவினர் ஒருவர், காளியம்மன் கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றுவந்தார். எப்படி எங்களுக்குப் பாத்தியப்பட்ட இடத்துக்குள் வரலாம் என்று பிரச்னை செய்ய, சண்டையாக மாறியது. சுவர் எழுப்பி எங்களைத் தடுக்கிறார்கள். அந்தச் சுவரிலும், அடிகுழாயிலும் தங்கள் சாதிப்பெயரை எழுதினார்கள். எனவேதான், அந்தத் தீண்டாமைச் சுவரை இடிக்கவேண்டும் என்று போராடி வருகிறோம்’’ என்றார்.

இதை மறுக்கிறார் இன்னொரு பிரிவைச் சேர்ந்த வைரவன். “அவர்கள் நடந்து செல்லும் பாதை எங்களுக்குச் சொந்தமானது. அந்தப் பாதையில் மாடுகளைக் கட்டுவது, கோயில் பகுதியில் செருப்பை அணிந்து சென்று புனிதத்தைக் கெடுப்பது என ஆரம்பித்தனர். அதனால்தான், எங்கள் கோயிலைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோயிலுக்குச் சுற்றுச்சுவர் கட்டினோம். தீண்டாமை எண்ணம் எங்களுக்கு இல்லை’’ என்றார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளுடன் சந்தையூருக்குச் சென்றுவந்த எவிடென்ஸ் கதிரிடம் பேசினோம். ‘‘தீண்டாமைச் சுவர் என்று கேள்விப்பட்டதும், எனக்கும் கோபம் வந்தது. அங்கு சென்று பார்த்தபிறகு, அப்படி இல்லை என்பது தெரிந்தது. இரு தரப்பையும் அழைத்துப்பேசினேன். அங்கு தீண்டாமைக்கு வழியில்லை. இரு தரப்பு மக்களையும் இணக்கமாக்க என்னால் முடிந்த முயற்சிகளை எடுத்து வருகிறேன்’’ என்றார்.

சோஷியல் ஜஸ்டிஸ் அமைப்பின் ஆறுமுகம், ‘‘அங்கு சென்று இரு தரப்பிலும் விசாரித்தேன். பாதை விடப்பட்டுத்தான் காம்பவுண்டு சுவர் கட்டியுள்ளனர். இதில் தீண்டாமை எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இரு தரப்புக்குள்ளும் ஏதோ ஒரு ஈகோ இருக்கலாம். அதைத் தீண்டாமையாகப் பார்ப்பது தவறானது’’ என்றார்.

அரசு தலையிட்டு, எது உண்மை என்பதைத் தீர விசாரித்துத் தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

- செ.சல்மான், சே.சின்னதுரை
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்