Published:Updated:

A to ஃ - தீபு ஹரி

A to ஃ - தீபு ஹரி
பிரீமியம் ஸ்டோரி
A to ஃ - தீபு ஹரி

ஓவியம் : ப.மணிவண்ணன்

A to ஃ - தீபு ஹரி

ஓவியம் : ப.மணிவண்ணன்

Published:Updated:
A to ஃ - தீபு ஹரி
பிரீமியம் ஸ்டோரி
A to ஃ - தீபு ஹரி

1.

Mr.Q கதவுகளைத் திறந்துவைத்துக் காத்திருக்கிறார்.
Mr.R சுவர்களின் வழியாக அறைக்குள் வருகிறார்.

2.

வழியில் நடந்து போகிற பெண்களை நிறுத்தி

A to ஃ - தீபு ஹரி


Mr.C
“புறாக்களின் சிறகுகளைப்போல
உங்கள் யோனியின் இதழ்கள்
ஏன் படபடவென அடித்துக்கொள்கின்றன?”
என வினவுகிறார்.

3.

தன் வீட்டின் பால்கனியிலிருந்து
தினமும் ஒரேவிதமான காட்சிகளைக் கண்டு கண்டு அலுத்த
Mrs.V யும் Mrs.O வும்
Mrs. K வின் பால்கனிக்கு ஒருநாள் வருகிறார்கள்.
அங்கேயும் காகங்கள் மல்லாக்கவே பறப்பதைக் கண்டு சலித்து
அவரவர் பால்கனிகளுக்குத் திரும்புகிறார்கள்.

A to ஃ - தீபு ஹரி

4.

Mr.P ஸ்கூட்டரில் போகிறார்.
ஸ்கூட்டர் ரொம்பப் பழசானது.
மேடுபள்ளங்களில் திணறுவது, முக்குவது.
சினை மாட்டைப்போல
பெட்ரோலை உறிஞ்சுவது.
கோணிப் பையில் கூழாங்கற்களைப் போட்டு
உலுக்குவதைப்போல சத்தம் எழுப்பக்கூடியது.
பிரசவ சமயங்களில் பஞ்சராகி நிற்பது.
விட்டேனா பார் என்றுதான்
ஒருவரையொருவர் இழுத்துப்பிடித்துத் திரிகிறார்கள்.

5.

Ms. T ஓர் ஆழ்ந்த கனவு காண்கிறாள்.
அது நிஜத்தைப்போலவே இருக்கிறது.
மீன்களற்ற அமைதியான கடலில்
அவள் யோனி
ஒரு வெண்சங்கைப்போல் மிதக்கிறது.

A to ஃ - தீபு ஹரி
6.

Mrs. ஊ சொல்கிறாள்.
“லொலிடா ஒரு சூரியக்கதிரைப் போன்றவள்”.

7.

அரிய செயல்களைச் செய்வதில் நாட்டம் மிகுந்த Ms.L
பலவற்றை முயன்று பார்த்தாள்.
ஒருமுறை விவிலியத்தின் திருப்பாடல்களை ஜபித்தபடியே
கடலின் மீது நடக்க முயன்றாள்.
பிறகு,
கருந்துளைக்கு அப்பால் என்ன இருக்கிறது என
அறிந்துகொள்ள
முதலில் ஒரு
சிறிய பைனாகுலர் ஒன்றையும்
பிறகு ஒரு
13 E Q டெலஸ்கோப் ஒன்றையும் வாங்கி
சிலநாள் வானத்தைப் பார்த்துக் கிடந்தாள்.
சில நாட்கள்
மந்திர உபாசனைகளிலும்,
சில நாட்கள்
காலயந்திரம் தயாரிப்பதிலும் செலவிட்டாள்.
இப்போது
உலகிலுள்ள எல்லாக் கடற்கரைகளையும்
பார்த்துவரப் பயணம் போயிருக்கிறாள்.

A to ஃ - தீபு ஹரி

8.

வடிவங்கள் மனிதர்களை ஆள்வதை
Mrs.W தன் சிறுவயதில் அறிந்துகொண்டாள்.
அன்றிலிருந்து அவள் வடிவங்களை வெறுக்க ஆரம்பித்தாள்.
சதுரங்களை வெட்டு்கையில் அவை
நீள்சதுரங்களாவதையும், கூம்புகளும், வட்டங்களும், உருளைகளுமாவதை
அவள் பயத்துடனே கவனித்து வந்தாள்.
வடிவங்களை விட்டுப் போராடி வெளியேறிய ஒவ்வொரு முறையும் அவள் மற்றொரு வடிவத்திற்கே வந்து சேர்ந்தாள்.
இது மீண்டும் மீண்டும் அவளை
ஜன்னல்களற்ற சதுர அறையில் தள்ளியபோது
அவள் நிரந்தரமாக வளியினில் வசிக்க ஆரம்பித்தாள்.

9.

இரவில் தனித்துவிடப்படுகிற நிழல்களைப் பற்றி
ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தார் Mr.ஐ.
அதில் ஒரு வரி,
‘பூமி இரவில் பஞ்சைப்போல நிழல்களை உறிஞ்சிக் கனக்கிறது.’

10.

Mr.ஃ க்கிற்கு 27 முகங்கள்.
ஒரே வினாடியில்
27 விதமாக யோசனை செய்யும்
27 மூளைகள்.
குத்தப்பட்ட பன்றியைப்போன்று விடாமல் அலறும் மூளைகளை
என்ன செய்வதென்று தெரியாமல் அவ்வப்போது
தன் 27 கைகளால் 27 தலையைத் தாங்கி அமர்ந்துகொள்கிறார்.