‘தமிழக மீனவர்கள்மீது இலங்கைக் கடற் படையினர் தாக்குதல்’

- கடந்த 35 ஆண்டுகளாக மாறாத செய்தி இது. இப்போது இந்தத் துயரத்துடன் இன்னும் சில விஷயங்களும் சேரப்போகின்றன. இனிமேல் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை, அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும். படகுகளைப் பறிமுதல் செய்து, இலங்கை நாணய மதிப்பில் 60 லட்ச ரூபாய் முதல் 17 கோடியே 50 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். படகுகளின் நீளத்தைப் பொறுத்து இந்த அபராதத்தின் அளவு இருக்கும்.

ஜனவரி 24-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய சட்டம்தான் இப்படிச் சொல்கிறது. ‘இந்தச் சட்டம் தமிழக மீனவர்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்’ என்று பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

காவிரி டெல்டா விவசாயிகளுக்குத் தீராத பிரச்னையாக காவிரி நதிநீர் இருப்பது போல், வங்கக் கடலின் கடலோர மாவட்ட மீனவர்களுக்குத் தீராத பிரச்னையாக இலங்கை இருந்து வருகிறது. நீண்ட கடற்பரப்பைக் கொண்ட தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதி மீனவர்கள் வங்கக் கடலில் உள்ள பாக் நீரிணை பகுதியையே தங்களின் வாழ்வாதாரமாக நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் பாரம்பர்யமாக மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களை 2009-ம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளின் பெயரால் துன்புறுத்தி வந்தது இலங்கை கடற்படை. புலிகளின் மறைவுக்குப் பின், இப்போது தமிழக மீனவர்களின் உடைமைகளையும் முழுமையாக அபகரிக்கும் திட்டத்துடன் சட்டம் நிறைவேற்றியுள்ளது இலங்கை.

ஏற்கெனவே மீன்வரத்துக் குறைவு, டீசல் விலை உயர்வு போன்றவற்றுடன் இலங்கை கடற் படையினரின் அடக்குமுறைகளையும் சந்தித்து வந்த மீனவர்களை, ‘இனி இழப்பதற்கு ஏதுமில்லை’ என்ற நிலைக்குத் தள்ளியிருக்கிறது இந்தப் புதிய சட்டம். இதுகுறித்து நம்மிடம் பேசிய அனைத்து மீனவர் சங்கச் செயலாளர் சேசுராஜ், ‘‘இனி கடலில் கால் வைக்கவே கூடாது என்ற நிலைக்கு எங்களைத் தள்ளியிருக்கிறது இலங்கை அரசின் சட்டத் திருத்தம். இந்தச் சட்டத்தைத் திரும்பப்பெற மத்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும்; அல்லது கச்சத்தீவை எங்களுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும். நமது கடல் பகுதியான 12.5 கடல் மைல், பாறைகள் மிகுந்த பகுதியாக இருக்கிறது. கச்சத்தீவை மீட்டால், பாறை இல்லாத 10 கடல் மைல் பரப்பு எங்களுக்குக் கிடைக்கும். அதன் பின்னர் நாங்கள் எல்லை தாண்டிச் செல்லும் அவசியம் இருக்காது. நிம்மதியாக மீன்பிடிக்க எங்களுக்கு உரிமையான பகுதியை மீட்டுத் தரத்தான் கேட்கிறோம். யாரிடமும் நாங்கள் பிச்சை கேட்கவில்லை’’ என்றார்.

தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் செந்தில்வேல், ‘‘கடந்த காலங்களில் இலங்கைக் கடற் படையால் கைது செய்யப்படும் நம் மீனவர்களையும், அதேபோல் இந்தியக் கடற்படையால் கைது செய்யப்படும் இலங்கை மீனவர்களையும் இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி உடனுக்குடன் விடுதலை செய்வது மரபாக இருந்துவருகிறது. அவர்களின் படகுகளையும் இப்படித்தான் விடுவித்தனர். இந்த நடைமுறையை உலகத்தின் பல நாடுகள் செய்து வருகின்றன. குறிப்பாக, இந்தியாவின் பகை நாடு என்று சொல்லக்கூடிய பாகிஸ்தான்கூட, இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகிறது.

ஆனால், இலங்கை அரசு சமீபகாலமாக இப்படிச் செய்வதில்லை. குறிப்பாக, மோடி ஆட்சிக்கு வந்த கடந்த மூன்றரை ஆண்டுகளில்தான் சிக்கல் அதிகமாகியுள்ளது. இப்போதுகூட, தமிழக மீனவர்களின் 187 படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, இன்னமும் மீட்கப்படாமல் அழியும் நிலையில் உள்ளன. இந்நிலையில், இலங்கை அரசு இதுபோன்ற சட்டங்களை இயற்றுவது தவறானது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கும். இலங்கை அரசின் இந்த அணுகுமுறையால், கடல் தாண்டி இங்குவரும் இலங்கை மீனவர்களும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே, மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, பாக் நீரிணை கடல் பகுதியில் இருநாட்டு மீனவர்களும் சுமுகமான முறையில் மீன்பிடித் தொழில் நடைபெற வழிவகை செய்ய வேண்டும். மேலும், இலங்கை மீனவர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்திக் கடல் வளத்தை அழிப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும்’’ என்றார்.

இலங்கை அரசின் புதிய சட்டம் குறித்து இலங்கை மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் ஜஸ்டின், ‘‘எமது கடற்பரப்பினுள் நுழையும் தமிழ்நாட்டு மீனவத் தொழிலாளர்களைப் பாதிக்கும் எந்தச் சட்டமும் எங்களுக்கு ஏற்புடைய தல்ல. படகு முதலாளிகளின் நெருக்கடியால்தான் அவர்கள் எல்லை தாண்டி வருகிறார்கள். எல்லை தாண்டுதலுக்குப் படகு உரிமையாளர்களைப் பொறுப்பேற்கச் செய்யும்வகையில் இலங்கை அரசு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ‘பிடிபடும் தமிழ்நாட்டு மீன்பிடித் தொழிலாளிகளைச் சிறையில் அடைக்காமல் அன்றைய தினமே விடுவிக்க வகை செய்யவும், எல்லை தாண்டியதற்கான தண்டத்தைப் படகு உரிமையாளரே செலுத்தும் வகையிலும் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்’ எனக் கேட்டு எங்கள் கடற்தொழில் அமைச்சரைச் சந்தித்துப் பேச உள்ளோம். தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்குச் செய்த உதவியை நாங்கள் சாகும்வரை மறக்க மாட்டோம். தற்போது பிடித்து வைத்துள்ள அனைத்துப் படகுகளையும் விடுவிக்க அரசு முடிவு செய்தால் நாங்கள் தடுக்க மாட்டோம். புதிய சட்டத்துக்குப் பிற்பாடு பிடிபடும் படகுகளை விடுவித்தால் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்போம்.

குறைந்துவரும் இருநாட்டு மீன்வளத்தையும் அழிக்கும் வகையில் செயல்படும் இரட்டைமடி, இழுவலை போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருநாட்டு மீனவர்களும் பரஸ்பரம் மீன்பிடிப்பு செய்வதில் எங்களுக்குப் பிரச்னை ஒன்றுமில்லை. எங்கள் பகுதியில் காலநிலை மாற்றத்தால் மழை பெய்யாமல், விவசாயம் செய்தவர்களெல்லாம் இப்போது மீன்பிடித் தொழிலுக்கு வந்துவிட்டனர். இதனால் நாங்களும் நெருக்கடியுடனேதான் வாழ்கிறோம். என்றாலும் எதிர்காலச் சந்ததியினரின் நலனுக்காக மீன்வளத்தைப் பாதுகாக்கும் கடமை மீனவர்களான எங்களுக்கு இருக்கிறது. இதை எங்களின் தொப்புள்கொடி உறவுகள் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

தங்க முட்டையிடும் வாத்தை அறியாமையால் அழிக்க நினைப்போருக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்காமல், அவர்களுக்கு உணர்த்தும் பணியில் இலங்கை அரசு ஈடுபட வேண்டும். இதை இந்திய அரசும் இலங்கையிடம் எடுத்துச் சொல்லவேண்டும்.

- இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி