இலங்கையில் நடந்த அநீதிக்காக, அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல் தோன்றினாலும், உண்மையில் அது தமிழினத்துக்கு எதிரானதாகவும், இலங்கை அரசுக்கு சார்பானதாகவும் இருந்தது. அதை உலக அரசியல் விவரங்களுடன், நுணுக்கமான தகவல்களுடன் ஜூனியர் விகடன் அம்பலப்படுத்தியது. அது, எனக்கு ஜூ.வி மீது மிகப்பெரிய மதிப்பை ஏற்படுத்தியது. காரணம், ‘மே 17’ இயக்கமும் அமெரிக்கத் தீர்மானத்தின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தி, அப்போது தீவிரமாகப் பிரசாரம் செய்தது. எங்கள் பிரசாரத்தைவிட, ஜூ.வி-யின் எழுத்து மக்களிடம் வலிமையாகப் போய்ச் சேர்ந்தது.

தொடர்ந்து ஜூ.வி., புவிசார் அரசியலை மக்களுக்குச் சொல்லிக்கொண்டே வருகிறது. ஏழை-எளியவர்களின் பக்கம் நின்று, அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்ப்பதும், ஒடுக்குமுறைகளைக் களத்தில் நின்று சுட்டிக்காட்டுவதும்தான் ஜூ.வி-யின் அடையாளம். ஒரு செய்தியை இருபக்கமும் தீர விசாரித்துவிட்டு அதன் உண்மைத்தன்மையை எழுதுவது ஜூ.வி-யின் சிறப்பு.

தமிழக அரசியலின் தொடக்கக் காலத்தையும், அன்றைய அரசியல் தலைவர்களையும், அரசியலின் சமகாலத்தையும், இன்றைய அரசியல்வாதிகளின் உண்மையான முகங்களையும் ஒப்பிட்டு ஜூ.வி-யில்
திரு. ப.திருமாவேலன் எழுதிய ‘பெரியோர்களே... தாய்மார்களே’ தொடர், ஒரு வரலாற்றுப் பொக்கிஷம். அன்றைய தலைவர்கள் மற்றும் அன்றைய அரசியல் பற்றி பொய்ப் பிரசாரம் நடத்தப்படும் இந்தக் காலத்தில், அவர்கள் பற்றிய உண்மைகளையும், அன்றைய அரசியல் தன்மையையும் அரசியல் சார்பில்லாமல் சொன்னது அந்தத் தொடர்.

‘மே 17’ இயக்கத்தின் அரசியலை, போராட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் ஜூனியர் விகடனின் பங்கு இன்றியமையாதது. நான் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்றபோது, அந்த அநீதியை மக்களுக்கு எடுத்துச் சென்றது ஜூ.வி. ஜல்லிக்கட்டு, ஹைட்ரோகார்பன், மதுவிலக்கு, நீட் உள்ளிட்ட மக்கள் போராட்டங்களில், போராட்டக் காரர்களுடன் இருந்து முழுமையான செய்தியை உண்மையாக அளித்ததில் ஜூ.வி-யை என்றுமே மறக்க முடியாது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலையில் இருந்து தகவல்களைச் சேகரிப்பதும், அதற்கு எதிராக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இருந்தாலும் தயங்காமல் உண்மையை வெளியிடுவதும் ஜூ.வி-யின் தனித்தன்மை. மக்கள் சார்பு பத்திரிகையாக தடம் பதித்து வரும் ஜூனியர் விகடன், எப்போதுமே மக்களின் ஆதரவு பத்திரிகையாக விளங்கி வருகிறது.