ஆறு மாதங்கள்... அசாம் சென்று கள்ளத்துப்பாக்கிகள் வாங்கி வந்து தமிழகத்தில் விற்றி ருக்கிறது ஒரு கும்பல். ஒவ்வொரு மாதமும் ஐந்தாறு முறை பயணம்... ஒவ்வொரு பயணத்திலும் ஐந்து துப்பாக் கிகள் வந்து தமிழகத்தில் கைமாறும். இப்படி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளத்துப்பாக்கிகள் இப்போது தமிழகத்தின் முக்கியமான தாதா க்கள், வி.ஐ.பி-கள் பலர் கைகளில் உள்ளன. இந்தத் துப்பாக்கிகள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றன என்று தெரியாமல் அதிர்ந்து போயிருக்கிறது தமிழக போலீஸ். இந்தக் கள்ளத்துப்பாக்கி வியாபாரத்தைச் செய்த போலீஸ்காரர் ஒருவரே சிக்கியிருப்பது, தமிழக போலீஸுக்கு மிகவும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

கவுகாத்தியிலிருந்து திருவனந்த புரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பிரதீப், கமல் ஆகியோரை ஜனவரி 26-ம் தேதி சென்னை திருவொற்றியூர் ‘யார்டு’ ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் மடக்கி னர். அவர்களிடமிருந்து ஆறு கைத்துப்பாக்கிகள், 25 தோட்டாக் கள், ரூ. 4 லட்சத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இவர்களை இயக்கியது, புழல் சிறையில் இருக்கும் ரபீக்.

துப்பாக்கி விலை ரூ.4.5 லட்சம்!

வழிப்பறி, திருட்டு செய்துவந்த பிரதீப், சிறையில் ரபீக்குடன் பழகியிருக்கிறார். ‘‘வழிப்பறி வழக்கிலிருந்து நான் விடுதலை யானதும், அடிக்கடி ஜெயிலுக்குப் போய் மனுபோட்டு ரபீக்கைப் பார்ப்பேன். அவர் சொன்னபடி அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களுக்குப் போய், துப்பாக்கிகள், கள்ளநோட்டுகள், போதைப்பொருள்களை வாங்கி வருவேன். ஜெயிலில் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், ‘இந்த முறை பொருள்களை எந்த இடத்தில், யாருக்குக் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லி அனுப்புவார். சொன்ன இடத்தில், சொன்ன அடையாளத்துடன் நிற்கும் ஆள்களிடம் துப்பாக்கிகள், கள்ள நோட்டுகளைக் கொடுப் பேன். ‘கள்ள நோட்டுகளுக்கு மாற்றுப்பணம் வாங்கக் கூடாது’ என்று ரபீக் சொல்லியிருந்ததால் அதற்குப் பணம் வாங்க மாட்டேன். போதைப் பொருள்களுக்கும், துப்பாக்கிகளுக்கும் மட்டுமே பணம் வாங்குவேன்.

வாங்கும் இடத்தில் ஒரு துப்பாக்கியின் விலை 50 ஆயிரம் ரூபாய். ரபீக் சொன்ன ஆள்கள், என்னிடம் நான்கரை லட்ச ரூபாய் கொடுப்பார்கள். 50 ஆயிரம் ரூபாய் எனக்குப் போக, நான்கு லட்ச ரூபாயை ரபீக் சொன்ன இடத்தில் நிற்கும் இன்னொரு ஆளிடம் கொடுத்துவிடுவேன். ‘அடிக்கடி மனு போட்டுப் பார்க்க நீ வரவேண்டாம். சந்தேகம் வரும். நம்பிக்கை யான வேறு ஆளை அனுப்பு’ என்று சமீபத்தில் ரபீக் சொன்னார். அதன்பிறகு நண்பன் கமலை அனுப்பினேன். கமல் வாங்கி வந்த குறிப்புகளை வைத்தும் பல ‘ட்ரிப்’புகளை அடித்துவிட்டேன். இப்போது இரண்டு துப்பாக்கிகளுக்கு ஆர்டர் கையில் இருக்கிறது. 28-ம் தேதி அனுப்பிவைக்கிறேன் என்று ஏஜென்ட்டுக்குத் தகவல் கொடுத்திருந்தேன். இந்நிலையில்தான், போலீஸில் மாட்டிக் கொண்டேன். மேற்குவங்க மாநிலம் மால்டாவில் கள்ளத் துப்பாக்கிகள், கள்ளநோட்டுகள் தயாரிப்பது சாதாரணமாக நடக்கிறது. தமிழ்நாடுபோல் அங்கெல்லாம் போலீஸ் கெடுபிடி இல்லை’’ என்று பிரதீப் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தஞ்சை மற்றும் திருச்சி மாவட்ட தீவிரவாதத் தடுப்புப் பிரிவுப் போலீஸார் நடத்திய சோதனையில், பட்டுக்கோட்டை சிவா என்ற ஏஜென்ட் சிக்கினார். இரண்டு துப்பாக்கிகளும், 10 தோட்டாக்களும் அங்கே கைப்பற்றப்பட்டன. சென்னை பேசின்பிரிட்ஜ் காவல்நிலைய தலைமைக் காவலர் பரமேஸ்வரன், வில்லிவாக்கம் நாகராஜ் ஆகியோரும் இந்தச் சோதனையில் பிடிபட்டனர்.

‘‘நாங்கள் தனி டீம்!’’

சென்னையில் இருக்கும் கமல் வீட்டில் ஒரு துப்பாக்கியும், நான்கு தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. கமலிடம் துப்பாக்கிகளை வாங்கி விற்றுவந்ததாக, சென்னை வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரும் பிடிபட்டுள்ளார். சென்னை எண்ணூர் பகுதி தாதா, திருச்சி தாதா என எட்டு தாதாக்கள், ஐந்து தொழிலதிபர்கள், மூன்று வழக்கறிஞர்கள், நான்கு சினிமா பிரபலங்கள் உள்பட ஏராளமான பிரபலங்களுக்கு கள்ளத்துப்பாக்கிகள் விற்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பரமேஸ்வரன் மூலம் விற்கப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் 9 எம்.எம். ரக துப்பாக்கிகள் என்று கூறப்படுகிறது.

இந்தத் துப்பாக்கிகள், எங்கேயும் தோட்டாக்களைக் கக்கியதாகத் தகவல் இல்லை என்றாலும், கட்டப்பஞ்சாயத்துகள் மற்றும் மிரட்டல்களின்போது அவை பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்தன. ஏதாவது டீலிங் பேச வரும் ஒரு தாதா, டேபிளில் துப்பாக்கியைத் தூக்கிப்போட்டால் எதிராளிக்கு எப்படி இருக்கும்? சப்தநாடியும் ஒடுங்கிப்போய் சரணடைந்து விடுவார். அப்படி சில சம்பவங்கள் நடைபெற்றதாக போலீஸா ருக்கு ரகசியத் தகவல்கள் வந்தன. அந்தத் துப்பாக்கிகள் எங்கிருந்து வந்திருக்கும் எனப் புரியாத குழப்பத்தில் இருந்தது போலீஸ். இப்போது அதன் ஆணிவேர் சிக்கியுள்ளது.

தலைமைக் காவலரான பரமேஸ்வரன், “கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஆதி என்பவர் என் நண்பர். அவர் மூலம், மும்பையைச் சேர்ந்த சந்தோஷ் அறிமுகம் கிடைத்தது. சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நண்பர் நாகராஜ், நாகராஜின் நண்பர் பிரகாஷ் ஆகியோர் கள்ளத்துப்பாக்கி விற்பனைக்கு உதவினர். பிரகாஷ் ஏற்கெனவே துப்பாக்கிக் கடத்தல் வழக்கில் போலீஸில் சிக்கியவர். இவர் மூலம் சென்னையில் ஃபைனான்ஸ் செய்துவந்த பட்டுக்கோட்டை சிவாவின் தொடர்பு கிடைத்தது. சென்னை, தூத்துக்குடி, கோவை, மதுரை, நாகை, நெல்லை எனப் பல பகுதிகளில் துப்பாக்கிகளை விற்றுள்ளோம். அசாம், பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் 50 ஆயிரம் ரூபாய்க்கு துப்பாக்கிகளை வாங்கிவந்து அதை நான்கு லட்ச ரூபாய் வரையில் விற்று வந்தோம். தொழில் போட்டி காரணமாகத்தான் எங்கள் பெயரை போலீஸில் பிரதீப் சொல்லிவிட்டார். நாங்கள் தனி டீம், அவர்கள் தனி டீம்” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளாராம்.

துப்பாக்கிகளின் பின்னால்...

‘மருந்து வியாபாரி’ என்ற அடையாளத்துடன் சென்னை மண்ணடியில் இருந்த இலங்கை ஜாகீர் உசேன், 2014-ல் கைது செய்யப் பட்டார். ‘இவர் பாகிஸ்தான் உளவாளி’ என்று தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) குற்றம்சாட்டியது. ஜாகீர் உசேன் கொடுத்த தகவலின் பேரில், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்ற அடையாளத்துடன் சென்னை சாலிகிராமத்தில் இருந்த அருண்செல்வராஜ் என்பவரையும் என்.ஐ.ஏ கைது செய்தது. இலங்கை சிவபாலன், அப்துல் சலீம் ஆகியோரும் கைதாகினர். இவர்களின் முக்கியக் கூட்டாளி என்று சொல்லப்பட்ட ரபீக், சென்னை கொடுங்கையூரில் சிக்கினார். அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கைக்கான பாகிஸ்தான் துணைத் தூதரக அதிகாரி சிக்கந்தர் ஷா என்பவர்தான் இந்த டீமை இயக்கியவர் என்பது இவர்களிடம் நடந்த விசாரணையில் வெளியில் வந்தது.

சிறையில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு உதவுகிறவர்கள், அவர்களின் தொடர்பில் இருப்பவர்கள் என்று கண்காணிப்பை இரு பிரிவுகளாக போலீஸார் பிரித்தனர். அதனால்தான், ரபீக்கை மனு போட்டுப் பார்த்த பிரதீப், கமல் ஆகியோர் போலீஸ் வளையத்தில் சிக்கினர்.

சிக்கியது எப்படி?

ஜனவரி 23-ம் தேதி பிரதீப், கமல் ஆகியோர் அசாம் சென்றபோது, அவர்களுடன் அதே ரயிலில் சென்னை தீவிரவாதத் தடுப்புப்பிரிவு போலீஸாரும் சாதாரண உடையில் ரகசியமாகப் பயணித்தனர். அவர்கள் திரும்பி வரும்போதும், ரயிலில் கண்காணித்தபடி வந்தனர். குடியரசு தினமான 26-ம் தேதி காலை 6 மணி அளவில் தமிழ்நாடு எல்லைக்குள் ரயில் நுழைந்தது. சென்னை சென்ட்ரலில் அவர்களைப் பிடிக்கத் திட்டமிடப்பட்டது. பயணிகள் அதிக அளவில் அங்கு ஏறி இறங்கும் சூழ்நிலை இருந்ததால், திருவொற்றியூர் ‘யார்டு’ ரயில் நிலையத்தில் சில நிமிடங்கள் ரயில் நின்றதும், போலீஸார் அதிரடியில் இறங்கினர். தீவிரவாதி ‘போலீஸ்’ பக்ருதீனைப் பிடித்த இன்ஸ்பெக்டர் வீரகுமார், சென்னை திருவொற்றியூர் காவல் நிலைய தலைமைக் காவலர் மாரியப்பன் உள்ளிட்ட போலீஸார் அந்த டீமில் இருந்தனர். கூட்டமில்லாத ரயில் நிலையம், போலீஸாாின் அதிரடிக்குச் சாதகமாக அமைந்தது.

போலீஸாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்ற பிரதீப்பையும், கமலையும் ஐந்தே நிமிடங்களில் மடக்கியது டீம். இவர்கள் விற்ற துப்பாக்கிகள் அத்தனையும் சிக்காதவரை, தமிழக போலீஸுக்கு மட்டுமில்லை... தமிழக மக்களுக்கும் நிம்மதியான தூக்கம் சாத்தியமில்லை.

- ந.பா.சேதுராமன், ஓவியம்: பிரேம் டாவின்சி