Published:Updated:

லைசென்ஸ் இருந்தால் அம்மா இருசக்கர வாகனம்!

லைசென்ஸ் இருந்தால் அம்மா இருசக்கர வாகனம்!
பிரீமியம் ஸ்டோரி
லைசென்ஸ் இருந்தால் அம்மா இருசக்கர வாகனம்!

லைசென்ஸ் இருந்தால் அம்மா இருசக்கர வாகனம்!

லைசென்ஸ் இருந்தால் அம்மா இருசக்கர வாகனம்!

லைசென்ஸ் இருந்தால் அம்மா இருசக்கர வாகனம்!

Published:Updated:
லைசென்ஸ் இருந்தால் அம்மா இருசக்கர வாகனம்!
பிரீமியம் ஸ்டோரி
லைசென்ஸ் இருந்தால் அம்மா இருசக்கர வாகனம்!

‘உழைக்கும் மகளிருக்கு 50 சதவிகித மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்’ என்று 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தரப்பட்டது. அ.தி.மு.க அரசு இரண்டு ஆண்டுகளைப் பூர்த்தி செய்ய இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு விதிமுறைகள் உள்ளன.

தகுதிகள்

எட்டாம் வகுப்புப் படித்த, பணிபுரியும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும். அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவுசெய்த பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுயமாகத் தொழில் செய்யும் பெண்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், அரசுத் திட்டங்களில் பணியாற்றுவோர், மாவட்டக் கற்றல் மையம் மற்றும் கிராம வறுமை ஒழிப்புக் குழுக்கள் ஆகியவற்றில் பணியாற்றுவோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

லைசென்ஸ் இருந்தால் அம்மா இருசக்கர வாகனம்!

வயது வரம்பு

18 வயது முதல் 40 வயது வரை. பணிபுரியும் மகளிரின் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

முன்னுரிமை

மிகவும் பின்தங்கிய பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், 35 வயதைத் தாண்டிய திருமணம் ஆகாத பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் retro-fitted three wheeler வாகனத்தை மானிய விலையில் பெற முடியும்.

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்

விண்ணப்பத்துக்குக் கட்டணம் ஏதும் இல்லை. மாநகராட்சி, நகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை இலவசமாகப் பெறலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பிப்ரவரி 5-ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். டிரைவிங் லைசென்ஸ் நகல் கொடுத்தால் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

தேவையான ஆவணங்கள்:

வயதுக்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்), வருமானச் சான்றிதழ் (பணியாற்றும் நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும்), கல்விச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினராக இருந்தால்) ஆகியவற்றின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

கடைசித் தேதி

2018 ஜனவரி 22-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள், 2018 பிப்ரவரி 5-ம் தேதி.

வழங்கப்படும் வாகனம்:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தாங்களே இருசக்கர வாகனங்களை வாங்கலாம். மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன்படி, 125 சிசி கொண்டதாக அந்த வாகனம் இருக்க வேண்டும். 2018 ஜனவரி 1-ம் தேதியோ, அதற்குப் பிறகோ தயாரிக்கப்பட்டதாக வாகனம் இருக்க வேண்டும். வாகனத்தின் புகை வெளியேற்றும் அளவு, தற்போதைய சுற்றுச்சூழல் மாசு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லைசென்ஸ் இருந்தால் அம்மா இருசக்கர வாகனம்!

மானியத் தொகை

திட்டத்தின் விதிமுறைகள்படி தகுதியுள்ளவர்கள், 2018 ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாகனங்களை வாங்கிவிட்டு, அதன் பின்னர் விண்ணப்பம் செய்து மானியம் பெற்றுக்கொள்ளலாம். அல்லது, விண்ணப்பம் செய்துவிட்டு, வங்கிக்கடன் மூலமாக வாகனத்தை வாங்கலாம். தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு, அவர்களின் வங்கிக் கணக்குக்கு மானியத் தொகை டிரான்ஸ்ஃபர் செய்யப்படும். வாகனத்தின் விலையில் 50 சதவிகிதம், அல்லது 25 ஆயிரம் ரூபாய்... இவற்றில் எது குறைவோ, அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும்.  

தேர்வுக் குழுக்கள்: 

பயனாளிகளைத் தேர்வு செய்ய, மாவட்டம்தோறும் இரண்டு குழுக்கள் அமைக்கப்படுகின்றன. கிராமப்புறப் பயனாளிகளைத் தேர்வுசெய்ய ஒரு குழுவும், நகர்ப்புறப் பயனாளிகளைத் தேர்வுசெய்ய ஒரு குழுவும் அமைக்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, மாநகராட்சி ஆணையர் தலைவராக இருப்பார். துணை ஆணையர் (கல்வி) உறுப்பினர் செயலாளராக இருப்பார். மாநகராட்சி அல்லாத பகுதிகளில் மாவட்ட ஆட்சியரே இரண்டு குழுக்களுக்கும் தலைவராக இருப்பார்.

- கே.பாலசுப்பிரமணி
படங்கள்: சாய் தர்மராஜ் , பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism